search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10"

    • தற்போது அம்பானிக்கு 66 வயது; அதானிக்கு 61 வயது
    • 10,000 கோடியை எண்ணில் குறிப்பிட்டால் 10க்கு பின் 10 பூஜ்யங்கள்

    இந்திய மக்கள் தொகையில் பொருளாதார ரீதியாக இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள பிரிவுகளில்தான் வாழ்கின்றனர்.

    குறைந்த அளவே பெரும் பணக்காரர்கள் உள்ள நம் நாட்டில், பல கோடிகளுக்கு அதிபதிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது, முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் பெயர்கள்தான்.

    ஆனால், தற்போது அம்பானிக்கு 66 வயதும், அதானிக்கு 61 வயதும் ஆகிறது.

    என்னதான் முயன்றாலும் 50 வயதை கடந்த பிறகுதான் கோடீசுவரராக ஒருவர் உருவாக முடியும் எனும் நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

    ஆனால், இந்த எண்ணத்தை தகர்க்கும் வகையில், 27 வயதே ஆன பேர்ல் கபூர் (Pearl Kapoor) என்பவர் ரூ.9840 கோடி ($1.2 பில்லியன்) - கிட்டத்தட்ட 10,000 கோடி - நிகர மதிப்புடன், இந்தியாவின் இள வயது கோடீசுவரர் ஆக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார்.

    பேர்ல் கபூர், கடந்த 2023 மே மாதம், சைபர் 365 (Zyber 365) எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் வெப்3-இயக்கும் இயங்குதள முறைமை (Web3-driven operating system) ஒன்றை துவங்கினார்.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் "சைபர் 365" நிறுவனத்திற்கு குஜராத் மாநில அகமதாபாத் நகரிலும் கிளை உள்ளது.

    ரூ.9840 கோடி ($1.2 பில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ள சைபர் 365, "அதிவேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன்" ($1 பில்லியனுக்கு அதிகமான மதிப்புடைய நிறுவனம்) எனும் அந்தஸ்தை எட்டியுள்ளது.

    சைபர் 365 நிறுவனத்தின் 90 சதவீத பங்குகள், பேர்ல் கபூர் வசம் உள்ளது.

    ஸ்டார்ட்-அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட சைபர் 365 நிறுவனத்திற்கு, முதல் நிலை நிதி ஈர்ப்பில், இவரது திறமையில் நம்பிக்கையுள்ள "எஸ்ஆர்ஏஎம் & எம்ஆர்ஏஎம்" (SRAM & MRAM) எனும் குழுமத்திலிருந்து $100 மில்லியனுக்கு மேல் முதலீடு கிடைத்தது.

    வெப்3 தொழில்நுட்பம் எனும் உயர் மென்பொருள் கட்டமைப்பின் முன்னோடி என கருதப்படும் பேர்ல் கபூர், லண்டன் நகரின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேர்ல் கபூர், "அதிவிரைவாக வளரக்கூடிய ப்ளாக்செயின், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர்பாதுகாப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து குலோபலைசேசன் 3.0 எனும் புதிய காலகட்டத்திற்கு மக்களை அழைத்து சென்று அவர்கள் வாழ்வை வலுப்படுத்த போகிறது" என்கிறார்.

    10,000 கோடியை எண்ணில் குறிப்பிட்டால் 10க்கு பின் 10 பூஜ்யங்கள் வரும்.

    "சைபர் நிறுவனம்" தொடங்கி 10க்கு பின் "10 சைபர்" அளவிற்கு சொத்து சேர்த்து வியக்க வைக்கிறார் என சமூக வலைதளங்களில் பேர்ல் கபூரை பாராட்டுகிறார்கள்.

    • ராஜி என்பவரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
    • 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் அரசு அனுமதியின்றி மதுவை பதுக்கி விற்பனை செய்துவந்த சிக்கம்பட்டியை சேர்ந்த ராஜி (வயது 44) என்பவரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    தாரமங்கலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் திருச்செங்கோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் சூர்யா (22) சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் மகன் அருள் (20) என்பதும் அவர்கள் விற்பனைக்காக 1.2 கிலோ அளவில் 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருந்தது தெரியவந்து. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
    • 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

    12ம் வகுப்பு தேர்வெழுதிய 210 மாணவர்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 64 மாணவ மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 113 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் மாணவன் கதிரவன் 600க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி கோபிகா 586 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவி சுவாதி மற்றும் சௌமியா ஆகிய இருவரும் 3 ம் இடமும் பிடித்துள்ளனர்.

    இயற்பியலில் 4 பேர், வேதியியலில் ஒருவர், கணிதத்தில் 3 பேர், கணினி அறிவியலில் 3பேர், உயிரியலில் 5பேர், கணக்குப்பதிவியலில் 8 பேர், கணினி பயன்பாட்டியலில் ஒருவர், வணிகக்கணிதத்தில் 4பேர் மற்றும் வணிகவியலில் 7 பேர்ஆகிய 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    10ம் வகுப்பு தேர்வெழுதிய 135 மாணவ மாணவிகளில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 37மாணவ மாணவிகளும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பள்ளி அளவில் மாணவி யஷீதா தஷ்னீம் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி வைஷ்ணவி 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி மதுமிதா 485 மதிப்பெண்கள்பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    கணிதத்தில் 6 பேர், அறிவியலில் 7 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

    10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளைப் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி மற்றும் பொருளாளர்ராதா, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர்சிவப்பிரியா மாதேஸ்வரன்மற்றும் முதல்வர்அனிதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந் தேதி 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-ந் தேதி மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 686 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    சென்னை:

    மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டுத் தேர்வுகள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. 

    இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிகின்றன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #SSLC #PlusOne #PlusTwo
    சென்னை:

    கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.



    இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்.

    இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.

    எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார்.

    அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.  #SSLC #PlusOne #PlusTwo
    ×