என் மலர்
நீங்கள் தேடியது "11 வீரர்கள் காயம்"
தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், கே.பாண்டியராஜன், என்.நடராஜ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணியும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த வழக்குகளின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி வருகிற 27-ந் தேதி இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். #AIADMK #SC

ஆனால் 30-ம் தேதி வழக்கை விசாரிக்காமல், மேலும் சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் நேற்று கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க. தரப்பிலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். ஏற்கனவே பட்டியலிட்டபடி 30-ந் தேதி (இன்று) வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு, அது குறித்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #ADMK #11MLAsCase #SupremeCourt #OPS
முசிறி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(45). இருவருக்கும் திருமணம் நடைபெற்று சுமார் 20 வருடங்களுக்குமேல் ஆகிறது. இந்நிலையில் சாந்தி 10 பிரசவங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குறிப்பாக அனைத்து குழந்தைகளுமே அவரது வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன.

தற்போது 8 குழந்தைகளுடன் வசித்து வரும் சாந்தி, கண்ணன் தம்பதிக்கு மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையின் விளைவால், தற்போது சாந்தி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சுகாதார செவிலியர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்தும் சாந்தி வர மறுத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தாய், சேய் நல அலுவலர் உஷாராணி, தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக், குழந்தைகள் நல அலுவலர்கள் கர்ப்பிணி பெண் சாந்தியின் வீட்டிற்கு சென்றனர். மருத்துவ அலுவலர்கள் வீட்டிற்கு வருவதை அறிந்த சாந்தி முசிறி காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மருத்துவ அலுவலர்கள் முசிறி அனைத்து மகளிர் போலீசார் உதவியுடன் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று அங்கிருந்த சாந்தியிடம் அறிவுரை கூறி, முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ரத்தசோகைக்காக சாந்திக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஒரு குழந்தை போதும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் 11 குழந்தைகளை பெற்ற சாந்தியையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற மருத்துவ அலுவலர்கள் போலீசார் உதவியுடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியதாயிற்று. இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகப்பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தியின், மூன்று மகள்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் சாந்தி தற்போது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PregnantWoman
நாகர்கோவில்:
பேச்சிப்பாறை வேப்ப மூட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெயதாஸ். இவரது மகள் அனிட்டா (வயது 16), இவர், நாகர்கோவிலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அனிட்டா, விடுதி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து அவரது தந்தை ஜெயதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், இன்று காலை வந்து மகளை அழைத்துச் செல்வதாக விடுதி காப்பாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அனிட்டாவிற்கு இன்று அதிகாலை காய்ச்சல் அதிகமானது. திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அனிட்டாவை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அனிட்டா, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனிட்டா இறந்தது குறித்த தகவல் அவரது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அனிட்டா, பலியானது பற்றிய தகவல் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அனிட்டா பலியானது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. 500 காலியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு நேற்று நடக்க இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வுக்குரிய வினாத்தாள் நேற்று முன்தினமே சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் தேர்வை ஒத்திவைத்த மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வுக் கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக, மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 11 பேரை கொண்ட குழு ஒன்று வினாத்தாளை திருடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்களில் 5 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மீரட் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 11 பேரையும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு வினாத்தாளை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை அவர்கள் விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #UPSSSCExam #PaperLeak
தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடர்ந்து இருந்தது.
அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இது தவிர தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடுத்தது.

ஆண்டு தோறும் கணக்கு தணிக்கை தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமிஷனிடம் அனுப்பப்படும். பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும். #DMK #DMKGeneralMeeting
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையின் போது அறிக்கையாக வெளியிட்டது. இது தொடர்பாக முசாபர்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூரை கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி சுகுணா. இவர்களது 11 மாத குழந்தை ஸ்டீவக். இவர்கள் குடும்பத்துடன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் சரலயம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
நேற்று குழந்தைக்கு சுகுணா பால் கொடுத்து பின்னர் படுக்க வைத்தார். பின்னர் துணி துவைக்க சென்று விட்டார். வெகுநேரம் குழந்தையின் அழுகுரலோ, அசைவோ இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுகுணா ஓடிச்சென்று குழந்தையை எடுத்து பார்த்தபோது குழந்தை மயங்கியதுபோல் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு குன்னங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் பால் புகட்டும்போது புரையேறி குழந்தை இறந்து விட்டதாக கூறினார்.
இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் முதுகெலும்பில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து குன்னங்குளம் போலீசாருக்கு தெரியவந்ததும் குழந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை புரையேறி இறந்ததா? அப்படி என்றால் முதுகு எலும்பு முறிவு எப்படி ஏற்பட்டது? குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.
2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
திருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார். #TNtextbooks #schoolbooks