என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 Dead"
- திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
- டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சரவணன் கள்ளிக்குடி 4 வழிச்சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஜீவன் ஆகாஷ் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் காளி ரத்தினம். சம்பவத் தன்று இவர் தனது மனைவியுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாப்டூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
எம். சுப்புலாபுரம் எரிச்சநத்தம் நேரக்கோவில் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் சென்றது. இதனால் நிலைகுலைந்த மோட்டார் சைக்கிள் தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளிரத்தினம் பரிதாபமாக இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது.
- இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போனவர்களில் ஒருவர் கார் டிரைவர் என்பதும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்த விவேகானந்தன் என்பதும் தெரியவந்தது. மேலும், பலத்த காயம் அடைந்தவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சரவணன், மகாலிங்கம் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருநாவலூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார்.
- இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் புளூ கலர் சட்ைட, கிரே கலர் கருப்பு பார்டர் வேட்டி அணிந்திருந்தார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் கடந்த 23-ந்தேதி பள்ளப்பட்டி மெய்யனூர் சாலை முனியப்பன் கோவில் ஆட்டோ நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் பச்சை கலர் அரை கை சட்டை, சாம்பல் கலர் பேண்ட் அணிந்திருந்தார். வலது நெற்றியில் வெட்டு காய தழும்பு காணப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் இறந்த 2 பேருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? மற்றும் உறவினர்கள் குறித்த விபரம் தெரியவில்லை.
இதனால் உடலை ஒப்படைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து ேபாலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா, விஸ்கொன்சின், மிசூரி, மினசோட்டா மற்றும் தெற்கு டகோட்டாவில் பனிக்காலத்துக்கு பிந்தைய திடீர் புயலால் பேய் மழை கொட்டி தீர்த்தது. அத்துடன் உறைபனியும் உருகியதால் மேற்கூறிய மாகாணங்களில் உள்ள ஆறுகள், சிற்றோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சாலைகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தகவல் தொடர்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. ஆறு மற்றும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருப்பதால் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நெப்ராஸ்கா, விஸ்கொன்சின் மற்றும் தெற்கு டகோட்டாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை தின்று உற்சாகத்தில் மிதந்தனர்.
சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் மயங்கி சரிந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிட்னி இன்டர்நேஷனல் ரெகாட்டா சென்டரில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை கொண்டு வந்து வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-மந்திரி கிளாடிஸ் கூறும்போது, “நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு பயங்கரமான சம்பவம்தான். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.
இதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரை தின்று 2 வாலிபர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
இசைத்திருவிழாவில் இப்படி போதை மாத்திரைகள் தின்று பாதிப்புக்கு ஆளாகும் சம்பவங்கள் பெருகுவது ஏமாற்றம் அளிக்கிறது; இசைத்திருவிழாவில் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாது என விழா ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் கூறி உள்ளனர். #MusicFestival #Drug
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்