என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.ஜி.எப்.2"

    • உடன்குடி சுற்றுவட்டார காமராஜர் நற்பணி மன்றஅறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா உடன்குடிமேல பஜாரில்நேற்று கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காமராஜரின் வாழ்கை வரலாறு பற்றி விரிவாக பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி சுற்றுவட்டார காமராஜர் நற்பணி மன்றஅறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா உடன்குடிமேல பஜாரில்நேற்று கொண்டாடப்பட்டது.

    இதில் 2000 பேருக்கு சமபந்தி பொது விரு ந்து அன்னதான நடந்தது. இரவு 7மணிக்கும் நடந்த விழாவிற்கு இந்த அமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் நடராஜன், சிவசுப்பிரமணியன், விஜயகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் சந்தையடியூர் மால்ராேஜஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காமராஜரின் வாழ்கை வரலாறு பற்றி விரிவாக பேசினார்.

    தொடர்ந்து 10 வகுப்பு மற்றும் 12 ம்வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் ஊக்கபரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடைகள், சேலைகள் உட்பட சுமார் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாணவரணி மாநில துணை தலைவர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உடன்குடி யூனியன்சேர்மன் பாலசிங், கிறிஸ்தியா நகரம்ஜான்பாஸ்கர்,

    உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சலீம், மற்றும்ஆர்.எஸ்.யூ.சதீஸ், பரமன்குறிச்சி இளங்கோ, மதன்ராஜ், மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜுதீன், வெற்றிவேல், மணப்பாடு ஜெயபிரகாஷ், ஜெயராமன் உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் கவுன்சிலர்கள், உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் உட்பட இந்த அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி சேர்ந்த பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜரின் புகழ் பற்றி பேசினர்.

    இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான், யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப்.2 படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
    டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படம் இந்தியில் அமீர்கான் நடிக்க லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ஏற்கனவே யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ள கே.ஜி.எப்.-2 படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது அதே தேதியில் அமீர்கானின் லால் சிங் சட்டா படமும் வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.

    இதனால் கே.ஜி.எப். படக்குழுவினர் வட இந்தியாவில் தங்கள் படத்துக்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கே.ஜி.எப்.-2 படக்குழுவினரிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    அமீர்கான்

    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘லால்சிங் சட்டா படத்தை கே.ஜி.எப்.-2 வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து கே.ஜி.எப்.-2 படத்தின் கதாநாயகன் யாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டேன். அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டனர். கே.ஜி.எப். அதிரடி சண்டை படம், எனது படம் காதல் கதையிலான குடும்ப படம். எனவே இரண்டையும் மக்கள் பார்ப்பார்கள். வசூல் பாதிக்காது” என்றார்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி வருவதால் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான 2.0 படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

    அடுத்த சில நாட்களிலேயே படம் ரூ.500 கோடி வசூல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு பின்னரும் படம் தமிழகம் முழுவதும் 398 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசூல் சாதனையை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னையில் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

    சென்னை மாநகரில் மட்டும் 3-வது வாரமாக சுமார் 80 திரைகளில் 2.0 ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் வசூல் ரூ.30 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரை இது சாதனை வசூல் ஆகும். இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ.18 கோடி சாதனையாக பார்க்கப்பட்டது.

    உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடியையும் தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடியையும் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். மொத்த வசூல் ரூ.750 கோடியை கடந்திருப்பதாக கூறுகின்றனர்.



    தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் சுலபமாக ரூ.1000 கோடியை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி தொட்டால், அது இந்திய சினிமாவின் பெரும் சாதனையாக கருதப்படும்.

    2.0 படம் நேற்று வரை தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக 3டி வசதி கொண்ட தியேட்டர்களில் வேலை நாட்களிலும் கூட்டம் வருகிறது. 2டி பதிப்பை விட 3டி வசதியில் படத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே 2டி பதிப்புக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.

    இந்த வாரம் மட்டும் விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் என பெரிய கதாநாயகர்களின் படங்கள் வருகின்றன. 2.0 படம் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வசூல் `பாகுபலி 2' படத்தின் வசூலை முந்தியிருக்கிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2
    ரஜினி, அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் நவம்பர் 29-ந் தேதி வெளியான படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்.

    ‘2.0’ படம் தமிழ் உள்பட வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் ‘2.0’ தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்தது. இதனால் சென்னையில் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் ‘பாகுபலி 2’ சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    பலரும் எதிர்பார்த்தது போலவே சென்னையில் டிசம்பர் 10-ந் தேதி வரை உள்ள வசூல்படி ரூ.19 கோடியைக் கடந்தது. இதன்மூலம் ரூ.18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த ‘பாகுபலி-2’ படத்தை 2-வது இடத்துக்கு தள்ளியது.



    சென்னையில் வசூலாகி உள்ள தொகை படம் பார்ப்பதற்கு கொடுக்கப்பட்ட 3டி கண்ணாடி கட்டண தொகையும் உள்ளடக்கியது. 3டி கண்ணாடி தொகையைச் சேர்க்காமல் என்றால், 17 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.

    அதைச் சேர்க்காமல் வரும் வசூலில் ‘பாகுபலி-2’ படத்தை இந்த வார இறுதிக்குள் கடக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டு வருகிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2

    ரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0MegaBlockbuster
    ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முன்னதாக படம் ரிலீசான 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    இதற்கிடையே படத்தை வருகிற மே 2019-ல் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியாக இருக்கிறது. #2Point0 #2Point0MegaBlockbuster #Rajinikanth

    ரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை அடுத்ததாக சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0InChina #2Point0MegaBlockbuster
    ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. ரிலீசான 4 நாட்களில் படம் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. 6 நாட்களில் படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாகவே உள்ளது.

    இந்த நிலையில், 2.0 படம் வருகிற மே 2019ல் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. 2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியிருக்கிறது.


    சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை மொத்தமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் 3டி-யில் அதிக திரைகளில் வெளியாகும் வெளிநாட்டு படங்களின் பட்டியலில் 2.0 இடம்பிடித்துள்ளது. #2Point0 #2Point0InChina #2Point0MegaBlockbuster #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடித்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படம் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. #2Point0MegaBlockbuster #2Point0 #Rajinikanth
    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் திரையரங்குகில் ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூலில் 2.0 புதிய சாதனை படைத்துள்ளது.

    கடந்த வியாழனன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிய 2.0 முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் ரூ.120 கோடியை வசூல் செய்திருந்தது. 3டி தொழில்நுட்பம், 4டி ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தை பார்த்த அனைவரும் இது ஒரு புது அனுபவம் என்று பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் படம் வெளியாகிய 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தின் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அங்கும் படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #2Point0MegaBlockbuster #2Point0 #Rajinikanth

    லைக்கா நிறுவத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கி, ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தின் இந்தி பதிப்பு மூன்று நாட்களில் ரூ.63.25 கோடி வசூலித்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியான 2.0 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 

    சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்தியாவில் ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தன.

    இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு நேற்றுவரை (சனிக்கிழமை)  63 கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று கிடைக்கும் வசூலையும் சேர்த்து இந்த தொகை 90 கோடியை எட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம், வெளியாகி வார இறுதிக்குள் 100 கோடி ரூபாய் என்ற வசூல் இலக்கை எட்டிய வெகுசில படங்களின் பட்டியலில் 2.0 திரைப்படமும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. #2Point0 #Rajinikanth
    ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னர் வெளியான பல படங்களில் ‘பஞ்ச்‘ வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும்.

    குறிப்பாக ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசிய “நான் ஒரு தடவ சொன்னா... 100 தடவ சொன்ன மாதிரி” என்கிற வசனத்தை பேசாதவர்களே இருக்க முடியாது.

    அதேபோல ‘முத்து’ படத்தில் காரசாரமாக அரசியல் நெடி கலந்த ‘பஞ்ச்‘ வசனங்களை ரஜினி பேசி இருப்பார். “நான் எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்”னு அவர் பேசிய பஞ்ச் வசனம் அரசியல் பிரவேசத்தின் முன் அறிவிப்பாகவே பார்க்கப்பட்டது.

    இப்படி தனது படங்கள் அனைத்திலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பஞ்ச் வசனங்கள் தெறிக்க விடுவதாகவே அமைந்து வந்துள்ளது.



    இதனால் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் வெளியான ‘காலா’ படத்திலும் நிச்சயமாக அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம் பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் அந்த படம் முற்றிலும் மாறுபட்ட ரஜினி படமாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமே காணப்பட்டது.

    இந்த நிலையில் ரஜினி நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத் தில் வெளியாகியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

    முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராபிக்ஸ் காட்சிகளால் மிரட்டலாக படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற படத்தில் அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் “ரோபோ ரஜினி”யை பஞ்ச் வசனம் பேச வைத்திருக்கிறார்கள்.



    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின்னர் அரசியல் தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் பேசியுள்ளார்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவேன். என்னால் எம்.ஜி.ஆர். தந்த ஆட்சியை தர முடியும் என்பது போன்ற பேச்சுக்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

    ஆனால் ரஜினி இன்னும் புதுக்கட்சியை தொடங்காமலயே உள்ளார். இது தொடர்பாக ரஜினி கூறும்போதெல்லாம், நான் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினி புது கட்சியை தொடங்கமாட்டார் என்கிற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கு 2.0 படத்தில் ரஜினி பதிலடி கொடுத்துள்ளார். “ஓடிப்போறது என் சாப்ட்வேர்லயே கிடையாது” என்று சரவெடியாக வசனம் பேசி இருப்பதின் மூலம் தமிழக அரசியலில் தனது இடத்தை தலைவர் உறுதி செய்து வைத்திருப்பதாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன்மூலம் தான் அரசியலை விட்டு எங்கும் ஓடிப்போய் விட மாட்டேன் என்பதை ரஜினி உறுதிபட கூறி இருப்பதாகவே ரசிகர்கள் கூறியுள்ளனர்.



    சிட்டியாக வரும் ரஜினி பஞ்ச் வசனங்கள் பேசுகிறார். ஒரு காட்சியில் “செத்து பிழைக்கிறது தனி சுகம்” என்று சொல்லும்போது ரஜினி உடல்நலம் இல்லாமல் சென்று மீண்டு வந்ததை நினைவுபடுத்தி ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.

    “நம்பர்-1, நம்பர்-2 எல்லாம் பாப்பா விளையாட்டு, ஐ ஆம் தெ ஒன்லி ஒன் சூப்பர்” என்று பேசும் வசனம் கைதட்டலை அள்ளுகிறது. இதன் மூலம் தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்ற நினைக்கும் மற்ற நடிகர்களுக்கு பாடம் நடத்தி இருப்பதாகவே ரசிகர்கள் உற்சாகம் அடைகின்றனர்.

    குட்டி ரோபோவாக வரும் லட்சக்கணக்கான குட்டி ரஜினிகள் “சிங்கம் நினைச்சா கொசுவை ஒண்ணும் செய்ய முடியாது ஆனா கொசுக்கள் நினைச்சா சிங்கத்தை என்ன வேணா செய்யலாம்” என்று வில்லனாக வரும் அக்‌‌ஷய்குமாரிடம் பஞ்ச் வசனம் பேசுவதும் ரசிகர்களை ஆரவாரப்படுத்துகிறது.

    ஆயிரக்கணக்கான ரோபோ ரஜினிக்களிடம் சிட்டி ரஜினி ‘டேய் அந்த குருவிய சுடுங்கடா என்று ஆர்டர் கொடுக்கும்போதும், வசீகரனிடம் அடங்கி நடப்பது போல வசனம் பேசிவிட்டு கைவிரலை நீட்டி தொடு பார்க்கலாம் என்று சவால் விடும்போதும் விசில் சத்தம் எழுகிறது.

    சிட்டி ரஜினி காதலி நிலாவிடம் ‘வசீகரன் படைச்சதிலேயே அற்புதமான வி‌ஷயங்கள் ரெண்டு. ஒண்ணு நான். இன்னொண்ணு நீ’ என்று வசனம் பேசும்போதும் கைதட்டல்கள் விழுகின்றன.

    படத்தின் இறுதியில் 3.0 குட்டி ரோபோ ரஜினி ‘ஐ ஆம் குட்டி. பேரன்’ என்று சொல்லும்போதும் ரசிகர்கள் பெரிதாக ரசிக்கிறார்கள்.

    இப்படி 2.0 படம் ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் 100 சதவீதம் திருப்திபடுத்தியுள்ள படமாகவே அமைந்துள்ளது.

    இது நிச்சயம் ரஜினியின் அரசியல் பயணத்துக்கு உத்வேகமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #Shankar
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வசூல் சர்கார் வசூலை முந்தியுள்ளது. #2Point0 #2Point0BoxOfficeCollection #2Point0Record
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    2.0 படம் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம். இதன்மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது.



    சென்னையில் ரிலீசான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. அந்தப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது. 2.0 பண்டிகை இல்லாத வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது.

    2.0 படம் இந்தியில் சுமார் ரூ. 25 கோடி வரை வசூலித்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரிலீசான இரவு 10 மணி வரை ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. நியூசிலாந்தில் ரூ. 11.11 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ. 58.46 லட்சமும் வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உலகம் முழுவதும் சுமார் 10,000 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. மொத்தமாக கணக்கிட்டால் முதல் நாள் வசூல் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர். தோராயமாக ரூ.60 முதல் ரூ.65 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கக் கூடும் என கணக்கிடுகின்றனர்.

    2.0 படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளை அதிகமாக கவருகிறது. எனவே, படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் குடும்பத்துடன் பார்ப்பதற்காக டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    அடுத்த சில நாட்களுக்கான முன்பதிவும் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முடிந்துவிடுகிறது. #2Point0 #2Point0BoxOfficeCollection #2Point0Record

    ×