search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 People suicide"

    • தேனி அருகே வெவ்வேறு பிரச்சினையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தேவா ரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் மகன் அய்யனார் (வயது21). இவர் சிந்தலைச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்ல பைக் வேண்டும் என பெற்றோ ரிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் பொருளாதார வசதி இல்லை. படித்து முடித்தவுடன் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதனால் மனவேதனை யடைந்த அய்யனார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது57). இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அப்போது முதல் மன உளைச்சலில் இருந்த தங்கத்துரை விஷம் அருந்தி மயங்கினார். கடமலை க்குண்டு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கத்துரை உயிரிழந்தார். இது குறித்து கடமலை க்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயமங்கலத்தை சேர்ந்த வர் சின்னச்சாமி (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சின்னசாமி சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வேலை இல்லாமல், மனஉளைச்சலுக்கு ஆளானவர் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாலும் தற்கொலை செய்துகொண்டனர்.

    தேனி:

    தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜராஜன். இவர் எம்.இ., படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். சரியான வேலை அமையவில்லை. இதனால் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கம்பத்தை சேர்ந்தவர் ரமேஷ்(25). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கூலித்தொழி லாளியான அவர் தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் தனியாக வசித்து வந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்லும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் அருகே சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் வனராஜா(47). மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் விஷமருந்தி மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நோய்கொடுமை, மனஉளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பொம்மைய கவுண்டன்பட்டி பஜார் தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 62). இவருக்கு கடந்த 3 வருடமாக முதுகு தண்டு வட பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோய் குணமாகாததால் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    போடி அம்மாபட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவருக்கு கடந்த சில நாட்களாக கையில் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (46). இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து திருப்பூரிலேயே தங்கி விட்டார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஆண்டிபட்டி வந்து ஆட்டோ ஓட்டி வந்தார். மனைவி பிரிந்த ஏக்கம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மனஉளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் தற்கொலை செய்தகொண்டார்கள்.

    தேனி:

    போடி அருகே சடையாள்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது30). இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் அச்சத்தில் இருந்தார். இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு அருகே மயிலாடும்பாறையை சேர்ந்தவர் ராசு மனைவி பாக்கியலட்சுமி (74). கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷ மருந்தை குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொண்ட 3 பேர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம், வளையல் கார வீதி, குப்பி பாலம் என்ற இடத்தில் காலிங்கராயன் வாய்க்காலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாய்க்காலில் ஒரு பெண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். தற்கொலை செய்து கொண்ட பெண் தனது சேலையின் துப்பட்டவால் 2 குழந்தைகளின் உடம்பில் கட்டிருந்தார்.

    இறந்த பெண்ணிற்கு 35 வயது இருக்கும் ஒரு குழந்தைக்கு 12 வயது மற்றொரு குழந்தைக்கு 7 வயது இருக்கும். பின்னர் மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு என்ன காரணம்? என்று உடனடியாக தெரியவில்லை.

    இறந்தவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகப்பட்டனர். இதையடுத்து ஈரோடு ஈரோடு டவுன் போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட போலீஸ் நிலைய பகுதிகளில் பெண்கள் யாராவது மாயமாகி இருக்கிறார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர் எனினும் அவரகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இறந்தவர்கள் வெளியூரை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர்களின் போட்டோக்களை ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல் போன்ற போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர்களது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. #tamilnews
    ×