search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "36 வயது பெண்"

    சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த 36 வயது இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple #KeralaWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் இளம்பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் புதுயுக கேரளம் என்ற முகநூல் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் உதவியுடன் சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு சார்பில் முகநூலில், ‘கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு(வயது 36) கடந்த 8-ந் தேதி காலை 7.30 மணியளவில் இருமுடி கட்டுடன் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று நெய்யாபிஷேகம் உள்பட பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து மஞ்சு கூறும்போது, ‘நான் கடந்த 8-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தேன். சபரிமலை செல்வதற்கு போலீசில் அனுமதி எதுவும் பெறவில்லை. ஆதலால் போலீசாரின் பாதுகாப்பு எதுவும் இன்றி, பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். சாமி தரிசனம் செய்ய எனக்கு எந்த வித இடையூறும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ காட்சி விரைவில் வெளியிடப்படும்’ என்றார். ஆனால் இந்த தகவலை கேரள அரசோ, போலீஸ் துறையோ உறுதி செய்யவில்லை.  #SabarimalaTemple #KeralaWomen
    அரசு அதிகாரி வீட்டில் 36 பவுன் நகை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜா (வயது 31). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது வீட்டில் வேலை பார்த்த சிவகங்கை நடராஜபுரத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோசப்ராஜா தனது வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 36 பவுன் நகை மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

    அதில், நகை மாயமானது தொடர்பாக வேலைக்கார பெண் புஷ்பா மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனையூர் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் செந்தில்சேகரன் (34). ஐ.டி. அலுவலகத்தில் பணிபுரியும் இவர், நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் சத்தம் கேட்காத வகையில் பீரோவை திறந்த மர்ம நபர்கள் இதில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ரூ.36 ஆயிரம் கோடி செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ரஷியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. #India #Russia #DefenceSystem
    மாஸ்கோ:

    ரூ.36 ஆயிரம் கோடி செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ரஷியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இத்தகவலை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உசாகோவ் தெரிவித்தார். புதின், நாளை இந்தியாவுக்கு வருகிறார். அவரது வருகையின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் கூறினார்.  #India #Russia #DefenceSystem 
    புதுச்சேரியில் 121 பெண்கள் நேற்று காலை 7 மணி முதல் இன்று மாலை 7 மணி வரை உணவு இடைவேளையின்றி தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளனர். # #YogaDay2018 #Yoga #InternationalYogaDay2018

    புதுச்சேரி:

    காஞ்சிபுரத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கும் மஹாயோகம் அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவையில் நடந்தது. புதுவை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது.

    விழாவுக்கு மகாமகரிஷி அறக்கட்டளை விஜயானந்தன் தலைமை வகித்தார். ரமேஷ்ரிஷி வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கமலகண்ணன், அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், சுவிஸ் நாட்டு கம்பன் கழக தலைவர் சரவணபவ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.



    யோகாவில் 18 வயது முதல் 72 வயதுவரை உடைய பெண்கள் பங்கேற்று உணவு, உறக்கமின்றி யோகா செய்தனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய யோகா சாதனை நிகழ்ச்சி இன்று மாலை 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. நிறைவு விழாவில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்றார். #InternationalYogaDay2018 #yoga #yogaday 
    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மீத்தேன் உள்ளிட்ட திட்டத்தை கைவிடக்கோரியும் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியல் செய்தனர்.

    அமைத்திடு, அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு, கைவிடு, கைவிடு, இயற்கை வளங்களை பாலைவன மாக்கும் திட்டத்தை கைவிடு என பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 36 பேரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் இவர்கள் அனைவரையும் தங்க வைப்பதற்காக நேரு கலையரங்கத்திற்கு போலீசார் வேனில் அழைத்து சென்றனர்.

    ×