search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 lane"

    • அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
    • பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.

    அதே போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று பெயர் பெற்று திகழ்ந்தது.

    மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்புகளையும் பெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோபி செட்டி பாளையத்தில் கடந்த 1-12-1958-ம் ஆண்டு 45-வது அரசியல் மாநாடு நடை பெற்றது. இதையொட்டி கோபி கிழக்கு பகுதியிலும் (கரட்டூர்), மேற்கு பகுதியிலும் (குடிநீர் மேல்நிலை தொட்டி அருகிலும்) நகராட்சி சார்பாக அப்போதே 2 நுழைவு வாயில்கள் (ஆர்ச்) கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.

    அப்போது முதல் ஈரோடு, சத்தியமங்கலம் ரோட்டில் கோபிசெட்டிபாளையம் என வளைவு அமைக்கப்பட்டு தூண்களுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக பொதுமக்களை வரவேற்கும் வகையில் நிலைத்து நின்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு கரட்டூர் ஆர்ச் மீது லாரி மோதியதில் அது இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து புதியதாக கிழக்கு பகுதியில் உள்ள ஆர்ச் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    இந்நிலையில் சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஈரோடு-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிசெட்டி பாளையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான நுழைவு வாயில் (ஆர்ச்) ரோடுகள் வரிவாக்கம் பணிக்காக அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று (புதன் கிழமை) இரவு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக எந்திரங்கள் மூலம் பணியாளர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அகற்றினர். இதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

    கோபியின் பெருமையை நிலை நாட்டும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • தண்டராம்பட்டு வழியாக கரூர் வரை அமைகிறது
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு

    திருவண்ணாமலை:

    முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டம் மூலம் திருவண்ணாமலை அருகே செட்டிபட்டு ஊராட்சியில் இருந்து தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இந்த பணிகளை நேற்று திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர்கள் தியாகு, இன்பநாதன், உதவி பொறியாளர்கள் சசிகுமார், பிரீத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மேலூர்- காரைக்குடி 4 வழிச்சாலை பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என சிவகங்கை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் நாகராஜன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மேலூர் - காரைக்குடி 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காட்டாம்பூர், திருப்பத்தூர் சந்திப்புச்சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி- தென்கரை சந்திப்பு சாலை, சுரண்டை கண்மாய், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் மேலூர்- காரைக்குடி வரை 45.855 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 13.52 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கும் பணியும், சிவகங்கை மாவட்டத்தில் நைனார்பட்டி முதல் மானகிரி துக்கானேந்தல் வரை 32.33 கிலோ மீட்டர் சாலையும் ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. 6 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 51-ம், 5 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 16-ம், வாகனங்கள் சாலையின் அடியில் செல்லும் வகையான பாலங்கள் 14-ம், பெரிய பாலம் 9-ம், மேம்பாலம் 1-ம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. 16.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட மண் பரப்பும் பணியும், 13.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-ம் கட்ட மேல்மண் பரப்பும் பணியும், 10.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும், 8.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இறுதிகட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும் முடிந்துள்ளது. 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.மொத்தமாக 24 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்த பணிகளை நிர்ணயித்துள்ள காலத்திற்குள் முடிக்க திறன்மிக்க பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் நாகராஜன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×