search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 lanes"

    • அருப்புக்கோட்டையில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    பாலையம்பட்டி

    திருப்பூரில் இருந்து பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கண்டெய்னர் லாரி தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று புறப்பட்டது. லாரியை சீதாராமன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக கன்டெய்னர் லாரி இன்று காலை வந்து கொண்டிருந்தது. சாய்பாபா கோவில் அருகே வந்தபோது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. இதில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தனர்.காலை வேளையில் ஏற்பட்ட விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கார் மோதி வாலிபர் பலியானார்.
    • நான்கு வழிச்சாலையை கடந்து எதிரே உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார்.

    திருமங்கலம், ஜூன். 11-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் அருள் ஈஸ்வரன்(வயது27). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் சமத்துவபுரத்தில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து எதிரே உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கிச்சென்ற கார், அருள் ஈஸ்வரன் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை திருமங்கலம் தாலுகா போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவரான விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த ஷேக் இர்பான்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேடப்பட்டி அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
    • மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள ஜம்புலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பசும்பொன் (வயது25). இவர் மைக்செட் அமைப்பாளர். நேற்று கள்ளிக்குடி அருகே லாலாபுரம் கிராமம் மற்றும் திருமங்கலம் காமராஜபுரம் பகுதிகளில் திருவிழாவிற்காக மைக்செட் போட்டுள்ளார்.

    நேற்று மாலை பசும்பொன், அவரது நண்பர் வண்டபுலியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (22) ஆகிய இருவரும் திருமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கோபாலகிருஷ்ணன் ேமாட்டார் சைக்கிளை ஓட்டினார். பசும்பொன் பின்னால் அமர்ந்து இருந்தார்.

    அவர்கள் திருமங்க லம்-மதுரை நான்கு வழிச்சா லையில் குதிரைசாரிகுளம் விலக்கு பகுதியில் சென்றபோது, பின்னால் நெல்லையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பசும்பொன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த தும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பசும்பொன் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கோபாலகிருஷ்ணன் மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து பற்றிய புகாரின்பேரில் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் சிவஞானத்திடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×