search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5ஜி"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.26 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணைக்கு 5,821 கன அடி நீர்வரத்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.26 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

    அணைக்கு 5,821 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 60 வார்டுகளுக்குட்பட்ட முக்கிய சாலைகள், வீதிகள் என மாநகராட்சியில் தற்போது 23,721 எல்.ஈ.டி தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

    இந்த தெரு விளக்குகள் அனைத்தும் 2,229 தானி யங்கி கட்டு ப்பாடு கருவி களுடன் இணைக்கப்பட்டு தினசரி இயக்கப்பட்டு வருகின்றது.

    இந்த தெருவிளக்குகளின் செயல்பாடுகள் முழுமை யாக இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தெரு விளக்கு பழுதுகள் அனை த்தும் புகார் கிடைத்த சில நாட்களிலேயே சரி செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் மாநகரா ட்சி விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் புதியதாக 5,431 தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடை பெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 15-வது மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு நகராட்சியாக இருந்து கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அருகாமையில் இருந்த பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் அடிப்ப டை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வந்ததையடுத்து முன்னுரிமை அடிப்படை யில் விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர், சாலைகள், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

    அந்த வகையில் ஏற்கனவே மாநகராட்சியில் 23 ஆயிரத்து 721 தெரு விளக்குகள் உள்ள நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கூடுதலாக 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    இந்த புதிய தெரு விளக்குகள் அனைத்தும் மாநகரின் புறநகர் பகுதி களில் அமைக்கப்பட உள்ளது. மின் கட்டணத்தை குறைப்பதற்காக எல்.ஈ.டி. தெருவிளக்குகள் பொரு த்தப்பட உள்ளது.

    புதியதாக பொருத்தப்பட உள்ள தெரு விளக்குகளின் கட்டுப்பாடு கருவிகள் அனைத்தும் இணைதளத்துடன் இணை க்கப்பட உள்ளதால் இயக்குவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது.

    மேலும் பராமரிப்பு, பழுது தொடர்பான புகார்க ளையும் எளிதில் கையாள முடியும். ஈரோடு சத்தி சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிறுத்ததில் இருந்து சித்தோடு வரை சாலையின் மையப்பகு தியில் புதியதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

    விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இது தவிர புதியதாக உருவான குடி யிருப்பு பகுதிகளிலும் தெருவிளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகி ன்றது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.08 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5, 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொது மக்கள் துணி துவைக்குவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 5600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. 

    • இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.

    இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக சேலம் மாநகராட்சியில் உள்ள 54 பள்ளிகளில் படிக்கும் 5,719 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சமூக நலத்துறை ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் இடம்பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,654 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நேற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடி குறைத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கருங்கல்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளை யம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது.

    போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (58), கருங்கல்பாளையம் காவிரி ரோட்டை சேர்ந்த சிவா என்கிற சிவகுமார்(49), கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (49), கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய குமார்(44), கருங்கல்பாளை யம் கமலா நகரைச் சேர்ந்த முருகேசன்(51) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மீடியாடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்களை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. #Mediatek



    சீனாவில் நடைபெற்ற சைனா மொபைல் சர்வதேச கூட்டணி கருத்தரங்கில் மீடியாடெக் நிறுவனம் தனது முதல் 5ஜி சிப்செட்டை அறிமுகம் செய்தது. மீடியாடெக் நிறுவனத்தின் முதல் 5ஜி சிப்செட் ஹீலியோ M70 என அழைக்கப்படுகிறது.

    மீடியாடெக் ஹீலியோ M70 சிப்செட் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரயிருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கும் என தெரிவித்துள்ளது. உலகின் முதல் 5ஜி மல்டி-மோட் சிப்செட்களில் ஹீலியோ M70 ஒன்றாக இருக்கிறது.

    5ஜி சேவையில் மீடியாடெக் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்செட்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.



    3ஜி மற்றும் 4ஜி சாதனங்களில் மீடியாடெக் சிப்களை வழங்க மீடியாடெக் நிறுவனம் கைஓ.எஸ். டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. கைஓ.எஸ். இயங்குதளம் மீடியாடெக் 3ஜி MT6572 மற்றும் மீடியாடெக் MT6731 உள்ளிட்டவற்றில் இயங்கும். இது மொபைல் போன்களில் டூயல் 4ஜி சிம் பயன்படுத்த வழி செய்யும்.

    இந்த சிப்செட் கொண்டு இயங்கும் முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டின இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு முதல் மீடியாடெக் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
    ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை விவரம் வெளியாகியிருக்கிறது. #MateX



    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு டிரெண்டிங் சாதனமாக பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமானது முதல் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிட துவங்கின.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடலுடன் அறிமுகம் செய்தது. சாம்சங்கை தொடர்ந்து ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு போன்று ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது. தற்சமயம் கிஸ்மோசைனா வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீட்டை ஹூவாய் நிறுவனம் முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் வெளியிடலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்திற்கு முன்பே விற்பனைக்கு வருகிறது. ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு பற்றிய விவரங்கள் அந்நிறுவன ஆன்லைன் ஸ்டோரில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது.

    எனினும், ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2,580 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஃபோல்டு விலை 1980 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung



    சாம்சங் எலெக்டிராணிக்ஸ் நிறுவனம் 5ஜி மோடெம் மற்றும் சிப்செட்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இவை சமீபத்திய பிரீமியம் மொபைல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கின்றன.

    5ஜி சிப்செட்கள் - எக்சைனோஸ் மோடெம் 5100, எக்சைனோஸ் ஆர்.எஃப். 5500 மற்றும் எக்சைனோஸ் எஸ்.எம். 5800 என அழைக்கப்படுகின்றன. இவை மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன.



    முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் தென்கொரியாவில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இதன் விலை 1332 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை முழுமையாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனமாக இருக்கும் சாம்சங் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முன்னணி நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தென் கொரியாவில் வணிக ரீதியிலான 5ஜி சேவை வழங்கப்பட்டு விட்டது. இவற்றுக்கும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் கோர் மற்றும் ரேடியோ சாதனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
    5ஜி நெட்வொர்க் சேவை பெறும் உலகின் முதல் மாவட்டம் என்ற பெருமையை சீனாவின் ஷாங்காய் மாவட்டம் பெற்றுள்ளது. #5G



    5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

    அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கிறது. தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும் போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெவொர்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



    சைனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சோதனை ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங் 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார்.

    சீராக இயங்க துவங்கும் போது பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 

    5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன. ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், ஹூவாய் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென ஹூவாய் தெரிவித்துள்ளது.
    ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #MateX



    ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. 

    ஹூவாய் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி சேவை கிடைக்காது என்றாலும், இந்தியாவில் அறிமுகமாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஹூவாய் மேட் எக்ஸ் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.



    உலகில் முதன் முறையாக ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.

    ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை வெறும் 30 நிமிடங்களில் 85 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்துவிடும். ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

    ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2299 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,85,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    ×