என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "6 people arrested"
- ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
- 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தர வின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருக்கம் பாளை யம் வாய்க்கால் கரை பகுதி அருகே ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேக ப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது சீட்டுக்கு அடியில் 34 மது பாட்டில்கள் அனுமதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஈரோடு 46 புதூர், சின்ன கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (59) என தெரிய வந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடமி ருந்து 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேப்போல் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்த மல்லன்குழி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
மொத்தம் 12 பாக்கெட் மதுவை போலீசார் கைப்பற்றினர். விசாரணை யில் அவர் தாளவாடி அடுத்த மாரியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகி ரியாஸ் (67) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள், மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் அம்மா பேட்டை சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டை அடுத்த மூலுயனூர் ராம்ராஜ் தோட்டம் அருகே ஒருவர் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்ததில் 59 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் அனுமதி இன்றி மது விற்பனை யில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேப்போல் கடத்தூர் ஈரோடு டவுன் போன்ற பகுதிகளிலும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 124 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
சூதாட்டத்தில்(சீட்டுகட்டு) ஈடுப்படுவதாக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அப்பகுதியைச்சேர்ந்த விக்னேஸ் (வயது23), சிவபாலன்(24),ராஜேஷ்(22), ராமன்(20), ஐயப்பன்(24) ரஞ்சித்(24) 6 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1000 மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- கடன் தர மறுத்ததால் ஆத்திரம்
- கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45), இவர் தனது மைத்துனர் சுரேஷ், உறவினர் வடிவேலு ஆகியோர் இணைந்து அசனமாபேட்டை கூட்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
கடத்தி தாக்குதல்
கடந்த 24-ந் தேதி இரவு பணிகளை முடித்துக் கொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு தென்னம்பட்டு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரனை சர மாரியாக தாக்கி காருக்குள் இழுத்து போட்டு கடத்திச் சென்றனர்.
காரில் இருந்த நபர்கள் ராமச்சந்திரன் தம்பி ரவிச்சந்திரன் க்கு போன் செய்து உங்கள் அண்ணனை கடத்தி உள்ளோம் அவரை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் எப்போது எங்கே தர வேண்டும் என மீண்டும் போன் செய்கிறோம் என கூறிவிட்டு போன சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.பிரம்மதேசம் புதூர் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிய ளவில் கடத்தப்பட்டதாக கூறப்ப ட்ட ராமச்சந்திரனை அந்த கும்பல் இறக்கிவிட்டுள்ளனர்.
ராமச்சந்திரன் இடமிருந்து 50,000 பணத்தையும்3 சவரன் தங்கச் செயினையும் கடத்தல் கும்பல் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், தூசி இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினர்.
கடன் தரமறுப்பு
இதில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (31)என்பவர் பைனான்ஸில் கடனாக பணம் கேட்டதற்கு ராமச்சந்திரன் பணம் தர முடியாது என அசிங்கமாக பேசி அனுப்பி உள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பிரபாகரனை பிடித்து விசாரித்தனர்.
இதில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ராமச்சந்திரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்த பிரபாகரன் தனது நண்பர்களான மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (37) சிறு கரும்பூர் ராஜேந்திரன் பிரசாத் (27), காஞ்சிபுரம் தாலுக்கா தாமல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தமிழரசன் (37) ஆகியோர் ஒன்று சேர்ந்து ராமச்சந்திரனை கடத்தி தாக்கியது தெரியவந்தது.
பொய்கைநல்லூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது காரை கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
தனிப்படை போலீசார் பிரபாகரன், ரமேஷ், ராஜேந்திர பிரசாத், விக்னேஷ், தமிழரசன், உடந்தையாக இருந்த கார் டிரைவர்மோகன்ராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.ஆள் கடத்தல் வழக்கை துரித நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
- பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது.
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்பட்டு ௬ பேர் கைது செய்யப்பட்டனர்
கடலூர்:
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது. இது தொடர்பாக போலீசாரால் தினமும் யாரேனும் ஒருவர் கைது செய்யப்பட்டு சாராயம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பண்ருட்டி மேல்கவரப்பட்டில் கள்ள சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்தகோரி பெண்கள் உள்பட ஏராள மானோர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று திரண்டனர்.
சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரேனும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என சாராய வியாபாரிகள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்படு கிறது என்று பொது மக்களிடம் கூறினார். இந்த புகார் மீதும் உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 941 லாட்டரிகள் - ரூ.48,070 பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி கோவை புறநகர் பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்தந்த பகுதயில் சோதனை நடத்தினர். வடக்கிப்பாளையம் போலீசார் தேவம்பட்டி வலசு பகுதியில் சோதனை செய்த போது அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 58) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 45 லாட்டரி மற்றும் ரூ.420-யை பறிமுதல் செய்தனர். டி.காளிப்பாளையம் பகுதியில் லாட்டரி விற்ற ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த தங்கராஜ் (68) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 லாட்டரி மற்றும் ரூ.300-யை பறிமுதல் செய்தனர்.
மதுக்கரை போலீசார் போடிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு லாட்டரி விற்ற ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த மோகன் ராஜ் (39) என்பவரை கைது செய்து 10 லாட்டரி மற்றும் ரூ.1650-யை பறிமுதல் செய்னர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜரர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி தாலுகா போலீசார் கோபாலபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையின் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திண்டுகல்லை சேர்ந்த நேசமணி (62) என்பரை 418 லாட்டரியுடம் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.200-யை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று சோதனை சாவடியில் 360 கேரளா லாட்டரியுடன் வந்த திண்டுகல்லை சேர்ந்த கிருஸ்டோபர் (52) மற்றும் 60 லாட்டரியுடன் வந்த உடுமலையை சேர்ந்த கணேஷ் (52) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஸ்டோபரிடம் இருந்து ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் முதியவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு ரூ.48,070 மற்றும் 941 லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.
- மதுரையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர்.
மதுரை
மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களில் 6 பேரை விரட்டி சென்று பிடித்தனர்.
அவர்களை சோதனை யிட்டபோது வாள், பெரிய கத்தி, உருட்டுகட்டை, கயிறு மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் பெத்தா னியாபுரம், மேட்டு தெரு முருகன் மகன் சூர்யா (வயது 24), மேலவாசல் சிவகுமார் மகன் பிரகாஷ் (23), பெத்தானியாபுரம், திலீபன் தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் (22), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி சுந்தர்ராஜன் மகன் அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி, அன்னை இந்திரா நகர், மெய்யப்பன் தெரு ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.
இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்கள் பாலத்தில் கீழ் பதுங்கி இருந்து உள்ளனர். இைதயடுத்து 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- ஒட்டன்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையின்கீழ் போலீசார் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஒரு கிலோ கஞ்சா காரில் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அதனைபறிமுதல் செய்த போலீசார் இதனை கடத்தி வந்த சத்திரப்பட்டியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன்(47), மூலச்சத்திரத்தை சேர்ந்த ஆர்யராஜ்(27) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி ரோட்டில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். தேனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை கடத்திவந்த பொன்மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(30), சாணார்பட்டியை சேர்ந்த காதர்மைதீன்(42), மூலச்சத்திரத்தை சேர்ந்த அஜித்குமார்(47), பேகம்பூரை சேர்ந்த ஹக்கீம்(27) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., அழகுராம் தலைமையில் போலீசார், தென்னிலை வாங்கல், சின்னதாராபுரம், பால விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
- அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்ற 6 பேரை கைது செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்றதாக 8 பேரை போலீசர் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., அழகுராம், பாலவிடுதி எஸ்.ஐ., தர்மலிங்கம் உள்ளிட்ட போலீசார், தென்னிலை வாங்கல், சின்னதாராபுரம், பால விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்
அப்போது. சட்ட விரோதமாக மதுபாட்டில்களை, விற்பனை செய்ததாக சண்முகம், ரவி, அன்பழகன், மாரியம்மாள், பாஸ்கர், புகழேந்தி ஆகிய 8பேரை போலீசார் கைது செய்தனர்.
- அரசு பஸ்சில் நூதன முறையில் மூதாட்டியிடம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாகபஸ்ஸில் ஏறிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.
விழுப்புரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் எம் டி. சி நகர், வாரி தெருவை சேர்ந்த சர்தார் என்பவரின் மனைவி ஆயிஷா.
இவர் நேற்று மாலை தனது உறவினர் வீட்டிற்கு அரசு பேருந்தில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பஸ் விக்கிரவாண்டி அடுத்த சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த பொழுது பஸ்சில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆயிஷாவின் அருகில் வந்து சில்லறை காசுகளை கீழே போட்டுவிட்டு ஆயிஷாவிடம் எங்க சில்லறை காசு கீழே விழுந்து கிடக்கிறது என்று சொல்லஆயிஷா குனிந்து அந்த சில்லறை காசுகளை எடுக்கும் பொழுது பொழுது அவருடைய பேக்கில் இருந்து மணிபர்சை எடுத்துக் கொண்டனர் .
இதுதெரிந்து ஆயிஷா சத்தம் போட்டவுடன் பஸ் சுங்கச்சாவடி கடந்து செல்ல உடனடியாக மர்ம நபர்கள் 6 பேர் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி ஓடினர் ஓடி மறுபுறத்தில் சென்னை மார்க்கமாக செல்லுகின்ற அரசு பஸ்ஸில் ஏறிக்கொண்டனர்.
பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாகபஸ்ஸில் ஏறிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களை விக்கிரவாண்டி போலீசில் தகவல் கொடுத்த பிறகு போலீஸ்இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் ஆகியோர் அந்த ஆறு பேர்களை கைது செய்தனர். விசாரணையில் பாலு 44. சிங்க புனேரி ,சிவகங்கை மாவட்டம் .யோகராஜ் 22 கவுண்டன்பட்டி ,திருச்சி. பாண்டியன் 34 பாலக்குறிச்சி, திருச்சி,கண்ணதாசன் 24 கல்லுப்பட்டி, திருச்சி .பிரதாப் 28 என தெரியவந்தது.
- போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியின் போது சிக்கினர்
- மாட்டு வண்டிகள் பறிமுதல்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் அருகே செய்யாறு- கடுகுனுர் செய்யாற்று படுகையில் மணல் கடத்துவதாக செய்யாறு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் தனிப்படை போலீசார் செய்யாறு- கடுகனூர் செய்யாற்றப்படுகையில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளரிபேட்டை புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (42), அசோகன் (33), இளஞ்செழியன் (23), பழனி (53), சதீஷ்குமார் (30), ராஜேந்திரன் (53), ஆகிய 6 பேர்மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.அவர்களை மடக்கி பிடித்து. தனிப்படை போலீசார் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் மீது பெரணமல்லூர், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழில் போட்டி காரணமாக டெய்லர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பைனான்சியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
பழனி:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த்சமந்தா(34). இவர் பழனியில் பல வருடங்களாக எம்பிராய்டரிங் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வள்ளியப்பா கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். கடந்த 21-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வீட்டில் இருந்த ஜெயந்த்சமந்தாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.
இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி சிவசக்தி அறிவுறுத்தலின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவங்களை சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயந்த்சமந்தாவின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தொழில்போட்டி காரணமாக ஜெயந்த்சமந்தா குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தர்மராஜ், அவரது நண்பரான தட்டான்குளத்தை சேர்ந்த ராமதுரை(32), ஈரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சந்தனபிரகாஷ்(22), தினேஷ்குமார்(22), நவீன்குமார்(26) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதில் தர்மராஜ் மற்றும் ராமதுரை ஆகியோர் பைனான்ஸ் தொழில் செய்து வருவதும், மற்ற 4 பேரும் இவர்களிடம் வேலை பார்த்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- கொடைக்கானல் நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை கலந்து காளான் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- போதை காளான் விற்ற 6 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை கலந்து காளான் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொடைக்கானல் போலீசார் மேல்மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் தொடர்ந்து போதை ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனடிப்படையில் மேல் மலைப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மன்னவனூர் கைகாட்டி பகுதியில் நின்றுகொண்டிருந்த சிலரை விசாரித்தனர்.
அப்போது மன்னவனூர் கிராமத்தை சேர்ந்த வைரவேல், லட்சுமணன், மதன்குமார் மற்றும் பூண்டி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ், கவுஞ்சி கிராமத்தை சேர்ந்த குணசேகரன், மேலும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சரத்குமார் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை கலந்த காளான் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்