search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8th Tamil Nadu Premier League"

    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • திண்டுக்கல் அணியும் 2-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.

    கோவை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.

    டி.என்.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 18-ந் தேதி வரை 8 போட்டிகள் அங்கு நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 ஆட்டத்தில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி முதல் ஆட்டத்தில் கோவை கிங்சிடம் 13 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 15 ரன்னில் வீழ்த்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்சை நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு எதிர் கொள்கிறது.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் ஜெகதீசன் (117 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (107 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் டேரில் பெராரியோ, அபிஷேக் தன்வர் (தலா 5 விக்கெட்), பெரியசாமி (4 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியும் 2-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. 4-வது இடத்தில் உள்ள அந்த அணி முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாவை 16 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் சேலம் ஸ்பார்டன்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    முன்னதாக நாளை மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம்-திருச்சி அணிகள் மோதுகின்றன.

    இன்றைய ஆட்டங்களில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.15) , கோவை-நெல்லை (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தான் மோதி உள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்றது. கோவை கிங்சிடம் 13 ரன்கள் வித்தியாசத்திலும், நெல்லை அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பறி கொடுத்தது.

    முன்னாள் சாம்பியனான அந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால், சந்தோஷ்குமார், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பெராரியோ ஆகியோரும் பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, அஸ்வின் கிறஸ்ட் ஆகியோரும் உள்ளனர்.

    விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது. அந்த அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

    அந்த அணியில் துஷார் ரஹேஜா, சாத்வீக், அனிரூத், முகமது அலி, கணேஷ் அஜித்ராம், புவனேஷ்வரன், டி.நடராஜன், மதிவாணன், கருப்பசாமி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    • திண்டுக்கல் டிராகன்ஸ் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • சேலம் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், விமல்குமார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், வி.பி.தீரன், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.

    சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அணியில் கவின், அபிஷேக், விஷால் வைத்யா, ஹரீஷ்குமார், சன்னி சந்து, பொய்யாமொழி, விவேக் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    ×