என் மலர்
நீங்கள் தேடியது "9th class student"
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள மலை கிராமமான புளியன்கோம்பையில் 9-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் 37 வயதுடைய ஆணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சைல்டு லைன் குழுவினர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா, கிராம சேவகர் சந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஆகியோர் புளியன்கோம்பை கிராமத்துக்கு சென்றனர்.
மாணவியின் பெற்றோரிடம் 18 வயதுக்கு குறைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எடுத்துரைத்து அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
18 வயது நிரம்பாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் துணை மைய இயக்குனர் ராஜா முகமது தெரிவிக்கையில் சிறுமிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு 18 வயது வரை சைல்டு லைன் பாதுகாப்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி இடை நிற்றல் குழந்தைகளால்தான் பெரும்பாலும் இளம் வயது திருமணங்கள் நடக்கிறது. இது குறித்து மலைகிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
சேதாரப்பட்டு:
புதுவை அருகே உள்ளது தமிழக பகுதியான நாவற்குளம். இந்த ஊரைச் சேர்ந்த 15 வயது மாணவியும், அதே பகுதியை சேர்ந்த நரேஷ் (வயது 19) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களில் மாணவி கோரிமேட்டில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நரேஷ் மதகடிப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கிறார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் அவர்களுக்கிடையே திடீர் என்று தகராறு ஏற்பட்டது. மாணவி தனது காதலனை சந்திக்காமல் இருந்து வந்தார். இதனால் நரேஷ் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அவர் மாணவியிடம் மீண்டும் தன்னிடம் பேசுமாறு கூறினார். என்னிடம் பேசாவிட்டால் நாம் தனிமையில் சந்தித்து பேசியதை உன் பெற்றோரிடம் கூறுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் மாணவியிடம் நேற்று காலையில் நரேஷ் பேசினார். அப்போது உன்னிடம் பேச வேண்டி உள்ளது. சேதாரப்பட்டு வானூர் விநாயக புரத்தை சேர்ந்த ராஜா (32) என்பவர் உள்ளார். அவர் எனது நண்பர் ஆவார். அவரது வீட்டுக்கு செல்வோம் என்று அழைத்தார்.
இதனை நம்பி அந்த மாணவி காதலனுடன் ராஜா வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றதும் மாணவிக்கு நரேஷ் குளிர்பானம் குடிக்க கொடுத்தார். அதில் அவருக்கு தெரியாமல் மயக்க மருந்தை கலந்தார். இதனை அறியாத அந்த மாணவி காதலன் கொடுத்த குளிர்பானத்தை குடித்தார்.
குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவர் நரேஷ் அந்த மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அவர் மொரட்டாண்டி கிராமத்தை சேர்ந்த தன் நண்பர் சூர்யா (21) என்பவரையும் அங்கு வருமாறு அழைத்தார். சூர்யாவும் அங்கு சென்றார். பின்னர் அவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறிது நேரத்தில் ராஜாவும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் மகள் வீட்டில் இருந்து வெளியே சென்றவள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலை அடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ஆரோவில் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் கவிதா வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.
இரவு 8 மணி அளவில் அந்த மாணவி உடல் சோர்ந்து தள்ளாடியபடி தன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் பெற்றோர் அவளை தன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அந்த மாணவி கதறி அழுதாள். பெற்றோர் ஏன் அழுகிறாய் என்று கேட்டனர். அப்போது மாணவி தனக்கு ஏற்பட்ட கொடுமையை குறித்து கூறினார். இதைக் கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் சேதாராப்பட்டு சென்றனர். அங்கு மது போதையில் இருந்த நரேஷ், அவரது நண்பர்கள் சூர்யா, ராஜா ஆகியோரை பிடித்தனர். அப்போது நரேஷ் மாணவிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காதலன் நரேஷ், அவரது நண்பர்கள் சூர்யா, ராஜா ஆகியோரை கைது செய்தனர். கைதான 3 பேரையும் இரவே நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார்.
அதனைத் தொடர்ந்து கைதான 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மாணவிக்கு இன்று அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. #studentmolestation
கோவை:
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரிதாக காணப்பட்டதோடு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் செல்வபுரம் மற்றும் மாநகர மேற்கு பிரிவு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.