search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amit Shah"

    • ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.

    வெள்ள நிவாரண நிதியாக 5 மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்துள்ளது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

    மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.

    தேசிய நிவாரண நிதியிலிருந்து தொகை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி அரசு ஒரு அரணாக உள்ளதாக பதிவிட்டு பேரிடர் நிதி அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.

    • குழந்தை வடிவில் உள்ள ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.
    • அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் ஞானேஷ் குமார் பணியாற்றினார்.

    கடந்த திங்கள்கிழமை இரவோடு இரவாக அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ஞானேஷ் குமார். எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று(பிப்ரவரி 19) காலை 26 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்றுள்ளார்.

    யார் இந்த ஞானேஷ் குமார்:

    ஜனவரி 27, 1964 அன்று உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் பிறந்த ஞானேஷ் குமார் மிகவும் படித்த வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர். அவரது தந்தை டாக்டர் சுபோத் குப்தா மாவட்ட சுகாதர அதிகாரி CMO பதவி வகித்தவர்.

    ஞானேஷ் குமார் கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    1988 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கேரளப் கேட்ரே ஐஏஎஸ் அதிகாரியானார். திருவனந்தபுரத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரியாக முதல் பணி நியமனம் கிடைத்தது. UPA அரசின்போது 2007 முதல் 2012 வரை பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தார்.

     

    2014 ஆம் ஆண்டு,டெல்லியில் கேரள அரசின் குடியுரிமை(citizenship)ஆணையராகப் பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். முன்னதாக அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் பணியாற்றிய ஞானேஷ் குமார் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார்.

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்:

    2019 இல் ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 370 மற்றும் பிரிவு 35A இன் விதிகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீருடன் சேர்ந்து, லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

    அப்போது ஞானேஷ் குமார் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்தார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் -2019 ஐ உருவாக்குவதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார்.  

    அயோத்தி ராமர் கோவில்:

    2019 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஞானேஷ் குமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பின் ராமர் கோவில் உருவாக்கத்தில் ஞானேஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.

    ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் பிரதிநிதியாக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். குழந்தை வடிவில் உள்ள ஸ்ரீ ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.

     

    இந்நிலையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 26, 2029 வரை நீடிக்கும். அவரது தலைமையில் எதிர்வரும் பீகார், அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    • புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராகியதற்கு அமித் ஷாவுக்கு வாழ்த்துகள்.
    • தலைமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜக-வின் ஒரு பிரிவாகக் குறைக்கும் இலக்கு வெற்றிகரமாக அடையப்படும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார். ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்துள்ளார். ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாகேத் கோகாலே கூறுகையில் "இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராகியதற்கு அமித் ஷாவுக்கு வாழ்த்துகள். உங்கள் திறமையான தலைமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜக-வின் ஒரு பிரிவாகக் குறைக்கும் இலக்கு வெற்றிகரமாக அடையப்படும் என நாடு நம்பிக்கை கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    • உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை புரிகிறார்.
    • அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சையாக பேசியதற்காக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.

    பிப்ரவரி 25 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை புரிகிறார். 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.

    இந்நிலையில், கோவைக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவெடுத்துள்ளனர்.

    காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியது உள்ளிட்டவற்றிற்காக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.

    • ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டம்.
    • கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறார்.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த மாதம் கோவை வர உள்ளார். கோவை மாவட்ட பா.ஜ.க. புதிய அலுவலகம் பீளமேட்டில் கட்டப்பட்டு உள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த அலுவலகம் பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கிறது.

    இதன் திறப்பு விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதற்காக வருகிற 25-ந்தேதி அவர் கோவை வருகை வருகிறார். மறுநாள் (26-ந் தேதி) பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.

    அதைத்தொடர்ந்து அன்று மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதுதவிர மேலும் சில நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

    அமித்ஷா பங்கேற்கும் கூட்டங்களில் தமிழக பா.ஜ.க. முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.

    தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும், 2026 சட்டசபை தேர்தல் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிய உள்ளார். அப்போது கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறார்.

    கோவை வரும் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர, மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் பேசுகையில் கோவைக்கு வருகை தரும் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோவை விமான நிலையத்தில் ஜமாப், பஞ்சவாத்தியங்கள் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்க வேண்டும், வழிநெடுக தோரணங்களும், கட்சிக் கொடிகளும் அலங்கார வளைவுகளும் அமைத்து அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளையும் ஒவ்வொரு குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

    பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது அமித்ஷா வருகை தொடர்பான நிகழ்ச்சிகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சிகள் உறுதி செய்யப்படும் என்றனர்.

    • விளையாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும்.
    • 2036 ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்றார்.

    மேலும், மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது. இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.

    2014-ல் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது ஆரம்கால கட்டத்திலேயே உள்ளது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காஷ்மீரின் நிலைமை குறித்து உமர் அப்துல்லா அமித் ஷாஷாவுக்கு விளக்கமளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து முதல்-மந்திரி உமர் அப்துல்லா அமித் ஷாவுக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மையில் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் தற்கொலை செய்துகொண்டு ஒருவர் மரணித்தது, வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காததால் லாரி ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து உமர் அப்துல்லா அமித் ஷாஷாவுக்கு விளக்கமளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உமர் அப்துல்லா, அமித் ஷாவை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய சேவைகள் மற்றும் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    • டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
    • ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து பேரழிவு இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர்.

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என வெளியிடப்பட்டது. ஆனால், கருத்து கணிப்பை தவறானது என்பது நிரூபணம் ஆகும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

    இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை பெற்றது. தற்போதைய நிலையில் பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். 1998-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது.

    இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து அமித் ஷா கூறியதாவது:-

    டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி உள்ளார். ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து ஆப்டா இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர். நாட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருபவர்களுக்கு இதுதான் உதாணரம் என டெல்லி பாடம் கற்பித்துள்ளது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • நாடாளுமன்றத்தில் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அமித்ஷா, நாளை மாலை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு நாளை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த டிசம்பர் 17 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை மிகமிக இழிவாகப் பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறியிருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக தேர்வு பெற்று, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக பொறுப்பேற்று, 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து, இந்தியாவில் உள்ள சாதி, மத, வேறுபாடுகளை கடந்து, இன்றைக்கும் பட்டியலின, சிறுபான்மையின, பின்தங்கிய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பு கவசமாக, இன்றும் உலகமே போற்றுகின்ற வகையில் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்.

    அம்பேத்கர் அவர்களுக்கு பெருமை சேர்ப்பது அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் தானே தவிர, அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி அமைக்கிற எந்த நினைவுச் சின்னங்களும் அல்ல.

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை (31.01.2025) வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துகிற வகையில் நாளை சென்னைக்கு வரும் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, 'அமித்ஷாவே திரும்பிப் போ" என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிவித்துள்ளார். 

    • ஓட்டுகளை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி என்றார்.
    • பிப்ரவரி 8-ம் தேதி பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் என்றார் அமித்ஷா.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு பிப்ரவரி 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், டெல்லியின் நரேலா சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கெஜ்ரிவாலும், அவரது கட்சியும் டெல்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களை தங்கள் கருத்துகளால் அவமதித்தனர்.

    ஆம் ஆத்மியின் கண்காணிப்பில் தலைநகரில் தவறான நிர்வாகம் நடைபெறுகிறது.

    டெல்லியில் 10 ஆண்டு ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஊழலில் ஈடுபட்ட அதே வேளையில் ஓட்டுகளைப் பெறுவதற்காக பொய்களைப் பரப்புகிறது.

    ஆம் ஆத்மி என்றால் சட்டவிரோத வருமானம் ஈட்டும் கட்சி என்று பொருள்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி அன்று ஆம் ஆத்மியின் தவறான நிர்வாகம் முடிவுக்கு வரும்.

    கெஜ்ரிவால் உங்கள் அரசாங்கம் விரைவில் வெளியேறப் போகிறது. பா.ஜ.க. தலைமைக்கு வருகிறது என தெரிவித்தார்.

    • 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படும். 20 லட்சம் சுய-தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
    • மூன்று வருடத்திற்குள் யமுனை நிதி சுத்தப்படுத்தப்படும்.

    dடெல்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இணையாக பாஜக-வும் பல்வேறு இலவச வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இரண்டு கட்டமாக வெளியிட்டது. இன்று 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் அறிக்கையை அமித் ஷா வெளியிட்டார்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-

    * 13 ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்திற்குள் சட்ட வழிகளின்படி கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவோம்.

    * பாகிஸ்தானில் இருந்து வந்து காலனிகளில் வசித்து வரும் அனைத்து அகதிகளுக்கும் சொத்துக்களுக்கான (வசிக்கும் வீடுகள் உள்பட) உரிமை அங்கீகாரம் வழங்கப்படும்.

    * gig தொழிலாளர்களுக்கான நல வாரியம் தொடங்கப்படும். 10 லட்சம் வரை சுகாதார காப்பீடும், 5 லட்சம் வரை விபத்து காப்பீடும் வழங்கப்படும். கூடுதல் நலன்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

    * 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படும். 20 லட்சம் சுய-தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * 1700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ளவர்கள் வீடுகள் கட்டுவதற்கு, நிலங்களை விற்பதற்கு, வாங்குவதற்கு உரிமையாளர்களுக்கான உரிமை வழங்கப்படும்.

    * 100 சதவீதம் மின்சார பேருந்து என்பதை நோக்கமாக கொண்டு 13 ஆயிரம் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    * மூன்று வருடத்திற்குள் யமுனை நிதி சுத்தப்படுத்தப்படும்.

    * கையால் மலம் அள்ளும் முறை 100 சதவீதம் ஒழிக்கப்படும்.

    அம் ஆத்மி கட்சி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் கூறியதாவது:-

    பாஜக மூன்று கட்டங்களாக அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் கடைசி பகுதியாக இருக்கும் என நம்புகிறோம்.

    பூட்டிய கடைகளை மீண்டும் திறப்போம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர்கள்தான் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. கடைகள் திறந்திருக்கும்போது கடைகள் முன்னாள் துப்பாக்கி நடத்தப்பட்டதுபோல் தெரிகிறது. மிரட்டி பணம் பறிக்கும் மிரட்ல்களை கூட பெறுகிறார்கள். இது தொடர்பாக அமித் ஷா பேச வேண்டும். டெல்லியின் சட்டம் ஒழுங்கு குறித்து பேச வேண்டும்.

    அவர்கள் உறுதியளித்த அளவுக்கு வேலைகளை உண்மையிலேயே வழங்க முடிந்தால், அவர்கள் கட்டுப்பாட்டில் 20 மாநிலங்களில் அவர்கள் ஏன் இந்த வேலைகளை வழங்குவதில்லை? டெல்லியில்தான் மிகக் குறைந்த வேலையின்மை உள்ளது.

    டெல்லியில் ஏற்கனவே 7,700 பேருந்துகள் ஓடுகின்றன, இதுவே அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள். இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை 100% மின்சாரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளோம். பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.

    இவ்வாறு பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.

    கஸ்தூர்பா நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கூறியதாவது:-

    எந்தவொரு பிரச்சனையையும் கெஜ்ரிவால் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை அல்லது அதற்கான வேலையை செய்யவும் இல்லை. ஏராளமான திட்டங்கள் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு விரும்பியிருந்தால் அவர்கள் டெல்லிக்கு மின்சார பேருந்துகள கொடுத்திருக்க முடியும்.

    மெட்ரோ பாதையை விரிவுப்படுத்தியிருக்க முடியும். காற்று மாசு பிரச்சனையை கூட முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். உண்மையிலேயே டெல்லிக்கு நல்லது செய்ய விரும்பியிருந்தால், ஆட்சியில் இல்லை என்றாலும், நன்றாக பணியாற்றி நற்பெயரை பெற்றிருப்பார்கள்.

    இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறியதாவது:-

    டெல்லியில் 2.5 கோடி மக்கள் தொகை உள்ளது. நீங்கள் (அமித் ஷா) அரசு அமைப்பதற்கு பதிலாக 50,000 வேலைவாய்ப்புகளை மட்டுமே வழங்குவதாகப் பேசுகிறீர்கள். அதாவது உங்களிடம் எந்த திட்டமும் இல்லை. அமித் ஷா ஏன் டெல்லி மக்களை கேலி செய்கிறார்?

    அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும், அதனால்தான் நீங்கள் விரும்பும் வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள். டெல்லிக்கு மின்சார பேருந்துகள் கொண்டு வருவதாக நீங்கள் வாக்குறுதி அளிக்கிறீர்கள். டெல்லி மின்சார பேருந்துகள் குறித்த்து யாரும் உங்களுக்கு நன்றாக விளக்கவில்லை.

    நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் டெல்லி மின் பேருந்துகளின் தலைநகராக மாறிவிட்டது. குறைந்தபட்சம் இன்று அமித் ஷா தங்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் முகத்தை அறிவித்திருக்கலாம்.

    இவ்வாறு சிசோடியா தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் ஏழைகளுக்கான எந்த நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது.
    • பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை பாஜக பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று 3-வது மற்றும் இறுதிப் பகுதியை அமித் ஷா வெளியிட்டார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது வெற்று வாக்குறுதிகள் அல்ல. டெல்லியில் செயல்படுத்தக் கூடிய பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    யமுனை நதியை சுத்தம் செய்வோம், சுத்தமான குடிநீர் வழங்குவோம், மாசு இல்லாத டெல்லியாக்குவோம் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் நிறைவேற்றவில்லை. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆதமி அரசின் ஊழல் இதுவரை இல்லாத அளவிலானது.

    மத்திய அரசு டெல்லியில் சாலைகள் அமைப்பதற்காக 41 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ரெயில் தண்டவாளம் அமைக்க 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. விமான நிலையத்திற்காக 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

    டெல்லியில் ஏழைகளுக்கான எந்த நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது. பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    டெல்லி அரசை கெஜ்ரிவால் நடத்தி வருகிறார். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்பாவி முகத்துடன் மீண்டும் அவர் பொய் மூட்டைகளுடன் வருகிறார். எனது அரசியல் வாழ்க்கையில் கெஜ்ரிவாலை போன்ற பொய்யரை பார்த்தது இல்லை. நான் உறுதியாக இருப்பதால் இந்த வார்த்தையை பயன்படுத்துவதால் எந்த பிரச்சனையும் இல்லை.

    மக்கள் வசிக்கும் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்படும் என கெஜ்ரிவால் கூறினார். மக்கள் வசிக்கும் இடத்தை விடுங்கள். பள்ளிக்கூடங்கள், கோவில்கள், குருத்வாரா போன்ற இடங்களையும் விட்டுவைக்கவில்லை. இவைகளுக்கு அருகில் கடைகளை திறக்க லைசென்ஸ் கொடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான கோடி அளவில் மதுபான ஊழல் நடந்துள்ளது. இது அவர்களுடைய கல்வி அமைச்சரால் நடந்துள்ளது. இது இதுவரை இல்லாதது. கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது தார்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்யவில்லை. முதல்வர் பெருமையுடன் சிறைக்குள் இருந்தார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    ×