search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanush"

    • தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

    இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்பொழுது படக்குழு பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெலியிட்டுள்ளனர். இந்த போஸ்டரின் நித்யா மேனன் இடம்பெற்றுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

    இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இன்று மாலை 6 மணிக்கு படத்தின் அப்டேட்டை கொடுக்கப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடசென்னை 2 படத்தில் இவர்கள் இருவரும் எப்போது இணைய போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    • ஆனால் இந்த படம் வடசென்னை 2 இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் செம மாஸ் கம்போ தனுஷ் - வெற்றிமாறன். இவர்கள் இருவரும் முதன் முதலில் இணைந்த திரைப்படம் பொல்லாதவன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது.

    இதை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரனை தொடர்ந்து இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

    அடுத்ததாக வடசென்னை 2 படத்தில் இவர்கள் இருவரும் எப்போது இணையப் போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இந்நிலையில் வெற்றி மாறன் - தனுஷ் இணையவுள்ளதாக ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவாமக அறிவித்துள்ளது. ஆனால் இந்த படம் வடசென்னை 2 இல்லை எனவும் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வெற்றிகளைப் படங்களை கொடுத்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    • கிங்ஸ்டன் படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
    • சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

    ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

    இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யா பாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டீசர் நாளை (ஜனவரி 9) மாலை 06.01 மணிக்கு வெளியாகும் என்றும் இதனை நடிகர் தனுஷ் வெளியிடுவார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

    சமீபத்தில் தான் ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கு.
    • நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு பதில் அளிக்கும்படி உத்தரவு.

    நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம்பெற்று இருந்தது.

    இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்-இன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும், இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. 

    • தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

    தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

    இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிராமத்து இளைஞரின் லுக்கில் தனுஷ் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது
    • திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

    தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்."
    • ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்." கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான "அமரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலையும் வாரி குவித்தது.

    அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தனுஷ் நடிக்கும் 55 வது திரைப்படமாகும்.

    இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. விழாவில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

    சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ராகுமார் பெரியசாமி படத்தை குறித்த சில அப்டேட்டுகளை கூறினார். தனுஷ் 55 திரைப்படமும் ஒரு வீரரின் கதையாகதான் இருக்கும். நம் சமூதாயத்தில் பல வெளியில் தெரியாத நிறைய வீரர்கள் அல்லது ஹீரோக்கள் உள்ளன அவர்களை பற்றிய கதையாக D55 திரைப்படம் உருவாகவுள்ளது என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷை விமர்சித்து நயன்தாரா 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.
    • 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரு மகன்கள் உள்ளனர்.

    இதனிடையே நயன்தாராவின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale". இந்த ஆவணப்படத்தில் திரையுலகில் தான் சந்தித்த வெற்றி, தோல்வி, சவால்கள், காதல், கல்யாணம் என பல விஷயங்களை நயன்தாரா பகிர்ந்து உள்ளார். இதனையடுத்து இந்த ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளான நவம்பர் 18-ந்தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    இந்த படத்தில், 'நானும் ரவுடிதான்' படத்தின் பாடல் காட்சிகளை வெளியிட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் தடையின்மை சான்று (NOC) கோரப்பட்டது. ஆனால், அவர் இவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக பதில் சொல்லாமல், தடையின்மை சான்று தராமல் இருந்ததை தொடர்ந்து, நயன்தாரா அவரை விமர்சித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

    இதனிடையே தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், சர்ச்சைக்குள்ளான அந்தக் காட்சியையும் பகிர்ந்து, "இந்த சிறிய காட்சிக்குத்தான் ரூ.10 கோடி கேட்டார்கள். அதை இங்கே இலவசமாகவே பகிர்கிறேன் நீங்களே பாருங்கள். அன்பைப் பரப்புங்க சார்" என்று தனுஷை மறைமுகமாகச் சாடினார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.

    இந்த விவகாரம் கோலிவுட்டில் சர்ச்சை ஏற்படுத்தி பேசுபொருளானது. இதனிடையே, தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் வேஷ்டி சட்டையில் தனுஷும், சேலையில் நயன்தாராவும் அவருடன் விக்னேஷ் சிவனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்து வருவதால் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பார்த்துக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதற்கிடையே, 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி BTS காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றதாகவும், இதற்காக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தனுஷ் கோரியிருந்தார்.

    ஆனால், தனுஷின் கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்காமல், அந்த காட்சிகளுடன் ஆவணப்படம் வெளியானது. அதன்பின்னரும் காட்சிகளை நீக்க கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ரூ.10 கோடி நஷ்டஈடு கோரியுள்ள வழக்கில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது.

    ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.

    பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் 'Yedi' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் தனுஷ் மற்றும் ஜொனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது

    ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.

    பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் 'Yedi' பாடல் வரும் 20ம் தேதி வெளியாகும் என போஸ்டர் பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.
    • ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வந்தார். மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருவரும் கவனம் பெற்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

    இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

    இதனை தொடர்ந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 27-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நவம்பர் மாதம் 27-ந்தேதி நீதிபதி சுபாதேவி வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில், 'நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி நடைபெற்ற இவர்களது திருமண பதிவு ரத்து செய்யப்படுகிறது' என கூறினார். இந்த தீர்ப்பின் மூலம் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×