என் மலர்
நீங்கள் தேடியது "Mettur Dam"
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இந்த நிலையில் டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் தண்ணீர் திறப்பு படிபடியாக குறைக்கப்பட்டு வந்தது. இன்று காலை டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 745 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 674 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டாவுக்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 85.76 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ந்தேதி 12 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 831 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 116.10 அடியாகவும், நீர் இருப்பு 87.38 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
நீர்வரத்து 1000-க்கும் கீழ் சரிந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பின் அளவை மேலும் குறைத்துள்ளனர். அதன்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- மழை நின்றதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது.
- கடந்த 31-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.65 அடியாக குறைந்தது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.
இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த 31-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 694 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 88.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது.
நேற்று காலை 117.87 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 117.21 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் நீரின் அளவை குறைத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். வழக்கம்போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
- தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது.
மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி விநாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை நீடித்ததால் டிசம்பர் 21-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத்தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி இரவு கடந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நிரம்பி இருந்த அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியிலிருந்து இன்று காலை 119.14 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடியும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 92.10 டி.எம்.சியாக உள்ளது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டாவில் 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இதனால் அணையில் தண்ணீர் கடல் போல் தேங்கி நிற்கிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 1992 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டுஇருக்கிறது. இது தவிர நேற்று இரவு டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது.
- நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர் ,திருச்சி ,தஞ்சை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வேலூர், சென்னை உள்பட தமிழகத்தின் பெருபாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
மேட்டூர் அைணயில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படும்.
இதேபோன்று கால்வாய் பாசன தேவைக்காக ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக ஜூலை 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஜூலை 30-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை 43-வது முறையாக எட்டி கடந்த ஆண்டு (2024) முதன்முறையாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 120 அடியை எட்டி 2-வது முறையாக நிரம்பியது.
ஒரு சில வாரங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 2022-ல் ஒரே ஆண்டு 3 முறை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அணை வரலாற்றில் 43-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி முதல் முறையாக நிரம்பியது.
அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து வருடத்தின் கடைசி நாளான நேற்று (31-ந்தேதி) அணை 45-வது முறையாக நிரம்பி இருக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,875 கன அடியிலிருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை 120 அடி எட்டி உள்ளதால் மேட்டூர் காவிரி உபரி நீரேற்றும் திட்டத்தின் கீழ் திப்பம்பட்டியில் உள்ள உபரி நீரேற்றும் நிலையத்தில் இருந்து மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கும் செயல்பாட்டினை இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திப்பம்பட்டி நீரேற்றும் நிலையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
- காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில் தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்புவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
- மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை இன்று இரவு நிரம்பும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.97 அடியாக உள்ளது. மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு, உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு அனுப்பி அவற்றை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாதது கண்டிக்கத்தக்கது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,875 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், அணை நிரம்பிய பிறகு கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்புவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தின்படி மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும். ஆனால், இந்தத் திட்டம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதால் அவ்வளவு தண்ணீர் கூட தேவைப்படாது. அணைக்கு வினாடிக்கு 2,875 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதில் 2,000 கன அடி நீரை 2 நாட்களுக்கு திறந்து விட்டாலே இப்போது இணைக்கப்பட்டுள்ள ஏரிகள் நிரம்பி விடும்.
மேட்டூர் அணையின் உபரி நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2008-ம் ஆண்டு சேலத்தில் எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 50,000 பேருக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர்.
பாமக-வின் வலியுறுத்தல் காரணமாகத்தான் இந்தத் திட்டம் ஓரளவாவது செயல்படுத்தப்பட்டது. அதன் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மேட்டூர் அணையின் உபரி நீர் ஏரிகளுக்கு திறக்கப்பட வேண்டும். எனவே, மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
உண்மையில் பா.ம.க. வலியுறுத்திய மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்குக் கொண்டுசென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்வது ஆகும்.
இத்திட்டத்தால் நேரடியாக 30 ஆயிரத்து 154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18 ஆயிரத்து 228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளும் பயனடைவர். இதைக் கருத்தில் கொண்டு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக குறைந்தது.
- அணையில் தற்போது 93.26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.87 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் தற்போது 93.26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.
- அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் அணை 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. மேலும் டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக தண்ணீர் தேவை குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரதொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது. எனவே அணை நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.15 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 93.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 93.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
- அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2886 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.