என் மலர்
நீங்கள் தேடியது "Pa Ranjith"
- பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'.
- பா. ரஞ்சித் சமீபத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.
பா. ரஞ்சித் சமீபத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை பாகம் இரண்டின் அப்டேட்டை நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
அவர் கூறியது படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.
- பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிகளுக்கு அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கிறது.
அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.
அமித்ஷாவின் கருத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது என அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுதான் என நினைக்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது... ஜெய் பீம் என ரஞ்சித் கூறினார்.
- அட்டகத்தி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் இயக்குனர் பா.ரஞ்சித்.
- இன்று அவரது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் இயக்குனர் பா.ரஞ்சித். அதைத்தொடர்ந்து கார்த்தில் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கார்த்தி மற்றும் பா ரஞ்சித்திற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அதற்கடுத்து 2016 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து கபாலி மற்றும் காலா ஆகிய மாபெரும் வெற்றி படங்களை உருவாக்கினார். 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் சார்பாட்டா பரம்பரை நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது.
சில மாதங்களுக்கு முன் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் இந்திய முழுவதும் பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது. இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பிரதிபலிப்பாகவும் இருக்கும்.
இந்நிலையில் இன்று அவரது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் பா ரஞ்சித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் அன்பு இளவல் பா ரஞ்சித் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என பதிவிட்டுள்ளார்.
அன்பு இளவல் @beemji அவர்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDPaRanjith pic.twitter.com/pIKbvtxhFi
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 8, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.
இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.
- பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்ற புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ஆகியோர் இந்த புத்தகத்தை வெளியிட்டனர். இந்தியக்குடியரசு கட்சியின் மாநில தலைவர் தமிழரசன், இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோர் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தப்பட்டு, விசாரணையில் இழுக்கப்படாமல் உள்ளவர்களை மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டரீதியான போராட்டத்தை தொடர வேண்டும். இதில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது. ஒரு கட்சியின் தலைவரை கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இங்குள்ள உளவுத்துறை, போலீசார் ஏன் இதை பற்றி சொல்லவில்லை இது கேள்வியை எழுப்புகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எந்த அரசு ஆட்சியில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் நாங்கள் கேள்வியை கேட்போம். கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.
பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது அவருக்கு செய்யும் மரியாதை. இதற்காக அவரின் மனைவியை நாம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கான வேலைகளை தொடங்கலாம். வெற்றி, தோல்வி விசயமல்ல. அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்தில் அனுப்புவதை நாம் திட்டமாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் 3 சதவீதம் உள்ளவர்கள் இந்த நாட்டை ஆளும் போது, நாம் ஏன் ஆள முடியாது. அரசியல் அதிகாரத்தில் நமக்கான தேவைகளை அடைய திருமதி ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
- தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி சம்பள உயர்வு. சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு என்று இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு" என்று பதிவிட்டுள்ளார்.
- தங்கலான் படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
- தங்கலான் படத்தில் வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது
இந்நிலையில், தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், புத்த மதத்தை புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால், படம் ஒடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புக் மை ஷோ வில் மட்டும் 46 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். படத்தை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். பாராட்டிய வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து தற்பொழுது படத்தை பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைப்படம் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. பார்க்கிங் திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Thank you director @beemji for your wonderful support to our #LubberPandhu ?Catch the the fun-filled entertainer on the big screens now!Produced by @lakku76 andCo-produced by @venkatavmedia. @Prince_Pictures @iamharishkalyan #AttakathiDinesh @tamizh018 @isanjkayy #Swasika… pic.twitter.com/V0VkgjN5Wd
— Prince Pictures (@Prince_Pictures) September 22, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
- படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தங்கலானே வா வா ஆதியோனே - War Song வீடியோ வெளியானதுதங்கலானே வா வா ஆதியோனே - War Song வீடியோ வெளியானதுஇதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
முன்னதாக இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சீயான் விக்ரம் தெரிவித்தார்.
தற்பொழுது படத்தில் இடம்பெற்ற வார் சாங் படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
- தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
முன்னதாக பல காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தங்கலான் திரைப்படம் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று உலகளவில் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கலான் நேற்று ரிலீசானது.
உலகளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் உலகம் முழுக்க 53 கோடியே 64 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தங்கலான் படத்தின் சர்வதேச வசூல் தொடர்பாக படக்குழு சார்பில் விசேஷ போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.
Striking gold at the box office with ₹53.64 crores worldwide gross ️?#Thangalaan - A treasure of a tale that shines bright ❤️?️ https://t.co/aFyx3Nkpvs#ThangalaanRunningSuccessfully @Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets… pic.twitter.com/zLUZve2yPm
— Studio Green (@StudioGreen2) August 18, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
முன்னதாக பல காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தங்கலான் திரைப்படம் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று உலகளவில் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கலான் நேற்று ரிலீசானது.
உலகளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும் இது தொடர்பாக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.
Thank you for the unfathomable love. Couldn't ask for anything better than this. ?கோடி நன்றிகள். #thangalaanblockbuster pic.twitter.com/JmD2RYbktL
— Vikram (@chiyaan) August 16, 2024
இது குறித்து நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புரிந்துகொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றிகள். இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
- தங்கலான் படக்குழுவிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தங்கலான் படக்குழுவிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லானே தங்கலானே வெல்கவே நீ ஆதியோனே. பா ரஞ்சித் அண்ணா, விக்ரம் சாரின் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்கு தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
லானே தங்கலானே வெல்கவே நீ ஆதியோனே ❤️❤️❤️ வாழ்த்துக்கள் @beemji Anna @chiyaan sir பெரும் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்கு தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும் ?????? @gvprakash @StudioGreen2 pic.twitter.com/OnGDO5Yraf
— Mari Selvaraj (@mari_selvaraj) August 15, 2024