என் மலர்
நீங்கள் தேடியது "petrol bomb throw"
- மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது.
- சட்டம் ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த விடியா திமுக ஆட்சியில் ஏற்படுகிறது.
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது. சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
- மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும்.
சென்னை:
சென்னை கிண்டி கவர்னர் மாளிகை முன்பு கடந்த மாதம் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருக்கா வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கருக்கா வினோத் பின்னணியில் சில தடை செய்யப்பட்ட அமைப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை என்னும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை அனுப்பினார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்ட போது, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் மனுதாக்கல் செய்யப்படும். இதுபற்றி மத்திய உளவுப் பிரிவுக்கு என்.ஐ.ஏ. தெரிவிக்கும். இதையடுத்து தமிழக டி.ஜி.பி.க்கு அவர்கள் தகவல் தெரிவிப்பார்கள்.
அதன் பின்னர் மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற விசாரணை தொடரும். கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, ஜெயிலில் அவனிடம் யார்-யார் பழகினார்கள். வெளியில் இருந்து அவனை இயக்கினார்களா? என விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தி.மு.க. பிரமுகர் கலியமூர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நேரில் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து தாசில்தார் சிவா.கார்த்திக்கேயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குடுமியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார்.
நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கலியமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிர்ச்சி அடைந்த கலியமூர்த்தி வெளியே வந்து பார்த்தார்.
அப்போது பெட்ரோல் குண்டுகள் வீசியது கண்டு அந்த பகுதியில் யாராவது உள்ளார்களா? என தேடினார். ஆனால் யாரும் தென்படவில்லை.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.
தி.மு.க. பிரமுகர் கலியமூர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நேரில் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து தாசில்தார் சிவா.கார்த்திக்கேயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் கலியமூர்த்தி பங்கேற்கவிலை. எனவே தனபால் தரப்பு திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே இந்த முன்விரோதத்தில் கலியமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 45). இவர் அகிலபாரத இந்து மகாசபாவில் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். இரவு 11 மணியளவில் யாரோ மர்மநபர் சுபாஷ் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு சென்றனர். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த சுபாஷ் கார் தீ பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்.
இது குறித்து சுபாஷ் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஹெல்மெட் அணிந்து நடந்து வரும் 2 மர்மநபர்கள் கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அகில பாரத இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
ஏற்கனவே சுபாஷ் தனது காரில் வீட்டிற்கு வரும் வழியில் யாரோ மர்மநபர்கள் கார் மீது பெட்ரோல் குண்டை வீசி அவரை கொலை செய்ய முன்றனர். மேலும் அவரது வீட்டில் வளர்க்கும் நாய்களையும் மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீடு பாளை மனகாவலம் பிள்ளை நகரில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜான்பாண்டியன் வீட்டு மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பினர்.
இதனை கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் கண்ணாடி உடைந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், பசுபதி பாண்டியனின் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் கண்ணபிரான் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஜான் பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாளை உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான மானூர் பள்ளமடையை சேர்ந்த பாலமுருகன் (27), மாவடியை சேர்ந்த பன்னீர் முருகன் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நேற்று இரவு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி செயலாளரான கண்ணபிரான் கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்ண பிரானின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு பாளை, தச்சநல்லூர், ராமையன்பட்டி பகுதியில் கண்ணபிரான் ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் மாநகர பகுதியில் மட்டும் 9 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நெல்லை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.
இதுபோல இன்று அதிகாலையிலும் அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள்.
ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களான நடுவக்குறிச்சி செல்லபாண்டி, சுள்ளான், படுகையூர் பாஸ்கர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை, பாளை பகுதியில் கூடுதல் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டித்து அவரது கட்சி நிர்வாகிகள பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். கடந்த 10-ந்தேதி கடலூர் கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த வழக்கில் கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பாருக்கானை போலீசார் கைது செய்தனர்.
பாருக்கான் மீது ஏற்கனவே கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணிக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் பாருக்கானை கடலூர் புதுநகர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.#Tamilnews
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கிலும், நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறை யான்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடை பெற்று வருகின்றன.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ் மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசினர். அதுபோல் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்து மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் சந்தைதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட் ரோல்குண்டு வீசினர். இதில் கடையில் இருந்த ஊழியர் கண்ணன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று மாலை திடீரென்று கடலூர் வந்தார்.
அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று ஐ.ஜி.ஸ்ரீதர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கம்மியம் பேட்டை, பணிக்கன்குப்பம் டாஸ்மாக்கடைகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட அரசு பஸ் சையும் ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து பணிக்கன் குப்பம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று இரவு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரங்கநாதன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் சந்தை தோப்பு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக மணிவேல் (வயது 49) என்பவரும், உதவியாளராக பண்ருட்டி சத்திய மூர்த்திதெருவை சேர்ந்த கண்ணன் (39) என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று இரவு 2 பேரும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இரவு 9 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கம் உள்ள ஜன்னல் வழியாக திடீரென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கடையின் உள்ளே விழுந்த பெட்ரோல் குண்டு தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் கண்ணன் பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வடலூர் அருகே உள்ள கருங்குழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர் ஒருவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம மனிதர்கள் சிலர் வந்தனர். டாஸ்மாக்கடை முன்பு போலீஸ் இருப்பதை பார்த்ததும் தாங்கள் கொண்டுவந்திருந்த மண்எண்ணை பாட்டிலை டாஸ்மாக்கடை முன்பு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்மியம்பேட்டை-செம் மண்டலம் இணைப்பு சாலையில் உள்ள டாஸ் மாக் கடையில் மர்ம மனிதர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதுபோல நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம மனிதர்கள் புகுந்து டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடினார்கள். அங்கிருந்து மதுபாட்டில்களையும் உடைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதால் டாஸ் மாக்கடை ஊழியர்கள் அச்சமடைந்தள்ளனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கடை மீது பெட்ரோல்குண்டு வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட் ரோல் குண்டு வீசியதில் சேத மடைந்தகடையை நேற்று இரவு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் சூறையாடப்பட்ட டாஸ்மாக் கடையையும் பார்வையிட்டார்.
அதன்பின்பு அவர் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து பெட்ரோல்குண்டு வீசப்பட்டு வருகிறது. மேலும் ஒருசில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள், அரசு பணிமனை மற்றும் பஸ் நிலையங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்படும் என்றார்.