search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A fire"

    • கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து அந்தமொக்கை கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் மலைப்பகுதியில் வளர்ந்திருந்த காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடிகொடிகள் திடீரென பற்றி எரிய தொடங்கின. இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பில் இருந்த புல்வெளிகள் எரிந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    • இன்று அதிகாலை பல சரக்கு கடையில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.
    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல சரக்கு கடையில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (55).

    இவர் தனது வீட்டின் அருகில் தகர செட் அமைத்து அங்கு மிச்சர், முறுக்கு உள்பட பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் பல சரக்கு கடை ஒன்று நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக்கொண்டு பிரிட்ஜ் மட்டும் ஆன் செய்து வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இன்று அதிகாலை சுமார் 6 மணி அளவில் அந்த கடையில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.

    இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து ஆறுமுகம் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல சரக்கு கடையில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் கடையில் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×