search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadhaar linking"

    • இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 6,02,689 ஆகும்
    • வருகிற 31-தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைக்க அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீட்டு மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 10,57,163 , கைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 862, விசைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2090, விவசாய மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 89480, குடிசை மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 7867 என மொத்தம் 11,57,465 உள்ளது.

    இதில் இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 6,02,689 ஆகும். இது சுமார் 52.05 சதவீதம்.

    வருகிற 31-தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைக்க அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து பழைய பேட்டை பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை உதவி மின் பொறியாளர் அருணன் ஆய்வு செய்தார்.

      திருப்பூர் : 

      வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்தும்வகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு நடைபெற்று வருகிறது. திருப்பூரில் உள்ள 8சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.

      கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் மாவட்ட மொத்த வாக்காளர்களில் 39.95 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் இணைத்திருந்தனர். ஆதார் இணைப்பில் திருப்பூர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் துவங்கியபின், ஆதார் இணைப்பு சற்று வேகமெடுத்துள்ளது.

      வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு குறித்து மக்கள் மத்தியில் சுய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு முகாம்கள், ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் ஆதார் இணைத்து வருகின்றனர். இதுவரை 11.50 லட்சம் வாக்காளர்கள் ஆதாரை இணைத்துள்ளனர். மாவட்ட ஆதார் இணைப்பு விகிதம் 49.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

      திருப்பூர் வடக்கு தொகுதி ஆதார் இணைப்பில் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 80 ஆயிரத்து 577 பேரில் 32.44 சதவீதம் பேர் அதாவது 1 லட்சத்து 23 ஆயிரத்து 464 வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.

      திருப்பூர் தெற்கில் 43.47 சதவீதம், பல்லடத்தில் 44.17 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலையில் உள்ளது.இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 2 லட்சத்து 33 ஆயிரத்து 177 பேரில் 61.36 சதவீதம் பேர் அதாவது 1 லட்சத்து 43 ஆயிரத்து 76 பேர் ஆதார் இணைத்துள்ளனர்.

      உடுமலையில் 58.69 சதவீதம் பேரும் அவிநாசியில் 57.57 சதவீதம், தாராபுரத்தில் 57.18 சதவீதம் பேர், காங்கயம் தொகுதியில் 55.16 சதவீதம் பேரும் ஆதார் இணைத்துள்ளனர்.தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதில் திருப்பூர் மாவட்டம் முன்னேறி வருகிறது.இருப்பினும் 50 சதவீத வாக்காளர்கள் இன்னும் இணைக்கவில்லை. அவர்களும் இணைத்தால் விரைவில் முதன்மை மாவட்டமாக மாறி விடும் என்றனர்

      • ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
      • மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்

      கோவை:

      தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. ஆதார் இணைப்பு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.

      இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆதார் எண் இணைப்பு என்பது முக்கியம். மின் கட்டண விவகாரத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

      ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். யார் பேரில் மின் இணைப்பு இருக்கிறதோ அந்த நபர் இறந்திருக்கும் பட்சத்தில் அதற்கான அவகாசங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. தங்கள் மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன. ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்துள்ளது. #Aadhaar
      புதுடெல்லி:

      வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.

      ஆனால், ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரித்து வந்தது.

      ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் சில இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. #Aadhaar
      ×