search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aap"

    • டெல்லி மாநில மந்திரி பதவியை அசோக் கெலாட் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
    • இன்று பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், புதிய மந்திரியாக ரகுவிந்தர் ஷோக்கீன் பதவி ஏற்க உள்ளார்.

    டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிஷி முதல்வராக இருந்து வருகிறார். டெல்லி மாநில அமைச்சரவையில் கைலாஷ் கெலாட் முக்கிய அமைச்சராக இருந்து வந்தார். அவர் திடீரென நேற்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனைத் தொடர்ந்து நங்லோய் ஜாட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரகுவிந்தர் ஷோக்கீன் டெல்லி அமைச்சரவையில் புதிய மந்திரியாக இணைவார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.கவில் இணைந்த கைலாஷ் கெலாட் "சிலர் நான் இந்த முடிவை ஒரேநாள் இரவில் சிலரின் நெருக்கடியால் எடுத்தாக நினைக்கக் கூடும். இந்த நேரம் வரை நான் யாருடைய நெருக்கடிக்கும் உள்ளாகவில்லை என்பதை அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அமலாக்கத்துஐற மற்றும் சிபிஐ நெருக்கடி என கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இதை அனைத்தும் தவாறனது" என்றார்.

    காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. சுமேஷ் ஷோக்கீன் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

    • ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் 133 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்
    • பாஜகவின் கிஷன் லால் 130 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார். தேவ் நகர் வார்டு கவுன்சிலரான அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கிஷன் லாலை விட 3 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவாகையை சூட்டியுள்ளார்.

    மொத்தமுள்ள 265 வாக்குகளில், மகேஷ் 133 வாக்குகளை பெற்றார். கிஷன் லால் 130 வாக்குகள் பெற்றார். 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இந்த வெற்றியின் மூலம் டெல்லியின் முதல் தலித் மேயர் என்ற பெருமையை மகேஷ் பெற்றுள்ளார்.

    மேலும், டெல்லி துணை மேயர் தர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ரவீந்திர பரத்வாஜை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கவுன்சிலர் நீதா கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் டெல்லி துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ரவீந்திர பரத்வாஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டெல்லியில் 120 கவுன்சிலர்களை கொண்டுள்ள பாஜக மேயர் தேர்தலில் 130 வாக்குகளை பெற்றுள்ளது. ஆகவே ஆம் ஆத்மி கட்சியின் சில கவுன்சிலர்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.

    • யமுனை நதியில் பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் குளித்து வழிபாடு நடத்தினார்.
    • அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

    மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று கூறி டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் யமுனை நதிக்கரையில் நீராடினார்.

    பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விரேந்தர் சச்சுதேவ், "யமுனை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு வழங்கிய 8,500 கோடி ரூபாய்க்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சச்தேவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், "டெல்லி நகரத்தின் யமுனை நதிக்கரையில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது. டெல்லி பாஜக தலைவர் அரியானா அரசாங்கத்துடன் பேசி சோனிபட் மற்றும் பானிபட் ஆகியவற்றிலிருந்து தொழிற்சாலை கழிவுகளை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    • சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி ஆனது.
    • வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். அவர் தொடர்புடைய நிறுவனங்களில் பணமோசடி நடந்ததாக 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

    பிறகு 2022, மே 31-ம் தேதி பணமோசடி சட்டத்தின் கீழ், சத்யேந்திர ஜெயினை கைதுசெய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதற்கிடையே, 2023-ம் ஆண்டு மே மாதம் மருத்துவ காரணங்களுக்காக சத்யேந்திர ஜெயினுக்கு சுப்ரீம் கோர்ட் 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கியது. பிறகு அவர் நிரந்தர ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் திஹார் சிறைக்கு திரும்பினார்.

    டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    விசாரணையில் தாமதம், நீண்ட நாள் சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணை துவங்க நீண்ட நாட்களாகும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நிவாரணம் பெற தகுதி உடையவர்.

    பணமோசடி தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளில் தனிமனித சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டினார்.

    ரூ.50 ஆயிரத்திற்கான தனி நபர் ஜாமின் பத்திரம், அதே தொகைக்கு இரண்டு பேர் உத்தரவாதம் வழங்கவேண்டும். சாட்சிகளுடனோ, வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடனோ தொடர்பு கொள்ளக்கூடாது.

    விசாரணையில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்தக்கூடாது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என் நிபந்தனைகள் விதித்துள்ளது.

    ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியினரில் ஜாமின் கிடைத்த 3வது நபர் இவர் ஆவார். இதற்கு முன்னர் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோரும் ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா மாநில முதல்வர் பதவிக்கு பா.ஜ.க.வில் சண்டை நடைபெற்றது.
    • தற்போது இந்த சண்டை எப்படியோ சமாளிக்கப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்றது. ஏற்கனவே முதல்வராக இருக்கும் நயாப் சிங் சைனி 2-வது முறையாக இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் பா.ஜ.க.-வில் முதல்வர் பதவிக்கு சண்டை நடைபெற்று வருவதாகவும், சில தினங்களில் முதல்வர் மாற்றப்படலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:-

    தசரா நாளில் அரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி பதவி ஏற்கும் விழா நடக்கிறது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பா.ஜ.க.வில் ஏராளமான சண்டைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சண்டை எப்படியோ சமாளிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழா நடந்துள்ளது. ஆனால், அரியானா முதல்வர் இன்னும் நில நாட்களில் மாற்றப்படுவார்.

    இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

    உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பதவி ஏற்ற நயாப் சிங் சைனி, அரசு மீது நம்பிக்கை வைத்த அரியானா மாநில மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
    • ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.

    ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார்.

    இந்நிலையில், தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் தண்னி எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை விட 4538 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான அரியானாவில் ஒரு இடத்தை கூட வெல்லமுடியாத ஆம் ஆத்மி கட்சி ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக ஒரு தொகுதியை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் முதல்வருக்கான வீட்டை காலி செய்ய உள்ளார்.
    • மக்களை சந்திக்கும் வகையில் தொகுதி அருகிலேயே வீடு பார்த்து வருகிறார்.

    டெல்லி மாநில முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க, ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், மக்கள் தன்னை கலங்கமற்றவர் எனக் கூறும்வரை முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    இதனால் கெஜ்ரிவால் பிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அலுவலக வீட்டை காலியும் செய்யும் நிலையில் உள்ளார். நவராத்திரி காலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அரசு அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக புதிய வீட்டை தேடிவருகிறார்கள்.

    "அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் முதல்வர் அலுவலகத்தை காலி செய்ய இருக்கிறார். இதனால் மிகவும் தீவிரமாக புதிய வீடு தேடப்பட்டு வருகிறது. நியூடெல்லியான அவரது தொகுதி பக்கத்தில் வீடு பார்க்க கெஜ்ரிவால் முன்னுரிமை காட்டுகிறார். அவரது தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவரது நோக்கம்" என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுக்கள் தங்களுடைய வீடுகளை அவருக்கு ஒதுக்க முன்வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

    கெஜ்ரிவால் தனது வயதான பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    • டெல்லி துணை முதல்வராக இருந்து மணிஷ் சிசோடியோ ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
    • கட்சியில் இருந்து வெளியேறும்படி பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் ஜாமின் பெற்று விடுதலை ஆனார்.

    தற்போது கெஜ்ரிவாலும் ஜாமின் பெற்ற நிலையில், மக்கள் தங்களை தூய்மையானவர்கள் என்று அழைக்கும்வரை நானும், மணிஷ் சிசோடியாகவும் பதவி ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்ததோடு முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் தங்களை குற்றமற்றவர்கள என நிரூபிக்க பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்கள்.

    மணிஷ் சிசோடியா பேசும்போது, தனது மகன் கல்வி கட்டண உதவிக்காக பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மணிஷ் சிசோடியா கூறியதாவது:-

    2002-ல் நான் பத்திரிகையாளராக இருந்தபோது, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பிளாட் வாங்கினேன். அது என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. எனது அக்கவுண்டில் 10 லட்சம் ரூபாய் இருந்தது. அதுவும் எடுக்கப்பட்டது. என்னுடைய மகன் கல்விக்கட்டணம் உதவிக்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தேன். ஆனால் அமலாக்கத்துறை என் அக்கவுண்ட்-ஐ முடக்கியது.

    பா.ஜ.க.-வுக்கு மாறும்படி என்னிடம் வற்புறுத்தப்பட்டது. அவர்கள் என்னை ஜெயலில் கொன்றுவிடுவார்கள் எனக் கூறினார்கள். என்னைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், அரசியலில் யாரும் யாரைப் பற்றியும் நினைப்பதில்லை என்றும் கூறினார்.

    என் குடும்பம், என் நோய்வாய்ப்பட்ட மனைவி, கல்லூரியில் படிக்கும் என் மகன் பற்றி யோசிக்கச் சொன்னார்கள். அப்போது நான் ராமரிடம் இருந்து லட்சுமணனை தனியாக பிரிக்க முயற்சி செய்கிறீர்கள். உலகில் எந்த ராவணனுக்கும் எந்த அதிகாரம் கிடையாது. 26 வருடங்களாக அரவிந்த் கெஜ்ரிவால் என்னுடைய சகோதரர் மற்றும் அரசியல் ஆலோசகர். அவர்கள் எங்களை கட்சியில் இருந்து பிரிக்கவே, கட்சியை உடைக்கவோ முடியவில்லை.

    இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

    • தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி டெல்லியின் இளைய முதல்வர் ஆவார்.
    • அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கடந்த 155 நாட்களாக திகார் சிறையில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியே வந்த கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அதிஷியை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை அன்று கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து துணை நிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அதிஷி உரிமை கோரினார்.

    இந்த நிலையில், டெல்லி முதல்வராக அதிஷி இன்று மாலை பதவியேற்பார் என்றும் அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில் நடைபெறுகிறது.

    தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி டெல்லியின் இளைய முதல்வர் ஆவார். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானா்ஜியை தொடா்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் அதிஷி தேர்வாகியுள்ளார்.

    இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அதிஷியை டெல்லி மாநில முதல்வராக அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.

    • அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
    • கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தலை வருகிற நவம்பர் மாதமே நடத்த வலியுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த தேர்தல் வரும் வரை கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

    ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

    முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரியுள்ளார். மேலும், இதற்கான கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். 

    • இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்
    • அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்த கெஜ்ரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் கெஜ்ரிவால். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.


    • கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவால், புதிய முதலமைச்சர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஜ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

    இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. தலைமை செயலகத்துக்கு செல்ல கூடாது. எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது.


    ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய போவதாக திடீரென அறிவித்தார். மக்கள் என்னை நேர்மையானவர் என கருதி மீண்டும் வெற்றி பெற வைத்தால் மட்டுமே முதல்-மந்திரி நாற்காலியில் அமருவேன் என அவர் சபதமிட்டார். கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் முன்னாள் துணை-முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ராகவ் சதா ஆகியோர் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு கொடுக்கலாம் என விரிவாக ஆலோசித்தனர்.

    இது பற்றி கெஜ்ரிவால் கட்சியின் மூத்த தலைவர்கள், மந்திரிகள் மற்றும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களையும் கெஜ்ரிவால் தனித்தனியாக சந்தித்து பேசினார். அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

    இன்று 2-வது கட்டமாக கெஜ்ரிவால் தனது இல்லத்தில் மீண்டும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 57 பேரும் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி பதவிக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து வரும் அதிஷி பெயரை கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இதனை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகல் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


    இந்நிலையில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவால், புதிய முதலமைச்சர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    தனது எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மலிவால் கூறியிருப்பதாவது:-

    இன்றைய நாள் டெல்லிக்கு மிகவும் சோகமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நீண்ட போராட்டம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த பெண் டெல்லி முதல்வராக்கப்படுகிறார்.

    அதிஷி குடும்பத்தை பொறுத்தவரை அப்சல் ஒரு நிரபராதி. மேலும், அப்சல் குரு மீதானது அரசியல் சதியால் போடப்பட்ட பொய் வழக்கு.

    அதிஷி வெறும் டம்மி முதல்வர்தான். கடவுள்தான் டெல்லியை காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ×