search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "absconded"

    • தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    நாமக்கல்:

    தமிழக முழுவதும் பிடிவாரண்ட் கைதிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதை அடுத்து தமிழகம் முழுவதும் தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 10-க்கும் மேற்பட்ட கைதிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள்.

    மேலும் தலைமறைவாக உள்ள 60 பேரை பிடிக்க போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டை தொடரும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • முத்துசாமி சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.
    • போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் சின்ன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது உறவினர் முத்துசாமி. இவர் சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று முத்துசாமி, சந்திரசேகருக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறினார். சந்திரசேகர் உடனே அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது முத்துசாமி அவரிடம் தனது பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் விஜயகுமார் என்பவரிடம் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் செலுத்த கொடுத்தேன், எனது காரை எடுத்து சென்றார்.

    வெகு நேரமாகியும் அவர் திரும்பவில்லை. செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சென்று விசாரித்து வாருங்கள் என்றார். அதன் பின்னர் சந்திரசேகர் அவர் கூறிய வங்கிக்கு சென்று விசாரித்தார். இதில் விஜயகுமார் வங்கிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    உடனே சந்திரசேகர் விஜயகுமார் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் வீட்டை காலி செய்து சென்று விட்டதாக கூறியுள்ளனர். அப்போது தான் விஜயகுமார் காருடன் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர் காருடன் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்வேறு குற்றவழக்குகளில் சரணடைந்த ரவுடி பினு, ஜாமீனில் வெளிவந்த பின்னர் தலைமறைவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார்.

    இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஜாமீனில் வெளியான நாள்முதல் ரவுடி பினு கையெழுத்திட வரவில்லை எனவும், பினு தலைமறைவாகி விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    ×