search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Absorbed by the sea"

    • திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.
    • பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிவதும், சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மாலையில் அமாவாசை தொடங்குகிறது. இதனால் வழக்கம் போல் நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.

    2-வது நாளாக இன்றும் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. ஆனாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர். 

    • அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் கடல் உள்வாங்கியது.
    • இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் 100 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது. இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.

    மேலும் உள்வாங்கிய கடல் காரணமாக அந்த பகுதியில் உள்ள பவளப் பாறைகளில் முழுமையாக வெளியே தெரிந்தன. தீர்த்த கடலில் கடல் நீரை கண்ட பக்தர்கள் இன்று தண்ணீறின்றி பாறைகள் தெரிந்ததால் அதிர்ச்சிக்கும் ஆச்சிரியத்திற்கும் உள்ளாகி னர். சமீப காரணமாக தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் இன்று அதிகளவில் கடல் உள்வாங்கியதால் உள்ளும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    ×