search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accelerator"

    • குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

    சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே ஸ்டார்ட் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை, தெரியாமல் திருகிய 4 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தையை வாகனத்தில் நிற்கவைத்துவிட்டு, குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

    இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பயணிகள் அவதி
    • உதிரி பாகம் வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரெயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்று. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன.

    இதில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் 2-வது பிளாட்பாரத்திலும் எக்ஸ்லேட்டர் ( நகரும் படிக்கட்டுகள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள எக்ஸ்லேட்டர் பழுதடைந்துள்ளது.

    இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

    எக்ஸ்லேட்டர் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான உதிரி பாகம் வெளியூரில் இருந்து வர உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×