என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Actor Prakash Raj"
- பவன் கல்யாண் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
- பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர துணை முதல்-மந்திரியும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் தெலுங்கு படங்களில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பவன் கல்யாண் சகோதரர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் உள்பட அந்த குடும்பத்தில் இருந்து பலர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். இதனால் பிரகாஷ்ராஜை அவர்கள் ஒதுக்குவதாக பேசப்படுகிறது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''சமூகத்தில் தவறு நடந்தால் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எனக்கு சினிமா வாய்ப்புகள் தெலுங்கில் கிடைக்காது என்ற நிலை வந்தாலும், நான் கேள்வி எழுப்புவதை நிறுத்தவே மாட்டேன்.
என் மகன் மரணம் அடைந்தபோது வேதனையில் இருந்து என்னால் மீள முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து மீண்டும் எழுந்து சாதாரண மனிதனாக மாறினேன்.
எனது திறமையை பார்த்து ரசிகர்கள் ஆதரித்தார்கள். அவர்கள் அன்பினால்தான் நான் இன்றும் நடிகனாக நீடித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
- ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம் என பிரகாஷ்ராஜ் கூறினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜெய்ஷாவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டாலான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர். இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
- சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
- 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பேத்துப்பாறை ஓரவிஅருவி அருகே நடிகர் பிரகாஷ்ரா ஜூக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் அனுமதியின்றி வீடு கட்டியதாக கடந்த 2023-ம் ஆண்டு கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில் பிரகாஷ்ராஜ் வீடு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்ததால் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
இதனிடையே தற்போது பிரகாஷ்ராஜ் வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையை ஆக்கிரமித்து சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுப்பாதையை மறித்து மின் வேலி அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. 600 சதுரடி அளவிற்கு மட்டுமே வீடு கட்ட வேண்டிய இடத்தில் 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார். இதன் மூலம் அருகே உள்ள ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேத்துப்பாறை, வயல்வெளி, பாரதி அண்ணா நகர், பொதுப்பாதையை பயன்படுத்தும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பகலில் திறக்கப்படும் பாதை இரவில் அடைக்கப்படுகிறது. இதனால் வன விலங்குகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க இரவில் செல்லும் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே ஓைடயை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் பேத்துப்பாறை பகுதியில் பொதுப்பாதையை மறித்தும், ஓடையை ஆக்கிரமித்தும் வீடு கட்டி உள்ளதாக புகார் அளிக்கும் பட்சத்தில்அது குறித்து அளவீடு செய்து ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கப்படும். மேலும் ஓடை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
- ராயனில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
- ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் வெளியிட்டது.
இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரணாவ் ஜூவல்லரி மோசடியில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என தகவல்.
- பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், இந்த மோசடியில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என மதன் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மோசடியில் தொடர்பில்லாததால், பிரகாஷ்ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரணவ் நகைக்கடை மோசடி வழக்குக்கும் பிரகாஷ் ராஜூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என புலனாய்வுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் புரியாதவர்களுக்கு..
முக்கியச் செய்திகள்:- புலனாய்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ்நாட்டின் பிரணவ் நகைக்கடை மோசடியில் ஈடுபடவில்லை..
என்னை நம்பி எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி..
இவ்வாறு அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூர்:
நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
தேர்தல் தோல்வி குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது’’ என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.
நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.
இன்னும் 1 வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தார். பிரகாஷ்ராஜை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய நிலையில் பிரகாஷ்ராஜும் அரசியலில் குதித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களம் இறங்கினார். வீதிவீதியாக தீவிர பிரசாரமும் செய்தார். ஆனாலும் சினிமா நட்சத்திர அந்தஸ்து அவருக்கு கைகொடுக்கவில்லை. தோல்வி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பசனகவுடா பாட்டீல் யாத்னா.
இவர் ஏற்கனவே மத்திய மந்திரியாகவும் இருந்து உள்ளார். இவர் விஜயபுரா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது:-
நாட்டில் உள்ள அறிவு ஜீவிகளும், முற்போக்குவாதிகளும் தேசவிரோதிகள். இந்த நாட்டில் அறிவு ஜீவிகள், நாம் செலுத்தும் வரியில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறார்கள்.
பின் நம்முடைய நாட்டுக்கு எதிராகவே கோஷங்களை எழுப்புகிறார்கள். இது போன்ற மனிதர்களிடம் இருந்து தேசம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறது.
நான் மட்டும் உள்துறை மந்திரியாக இருந்திருந்தால் இந்த அறிவுஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்வதற்கு உத்தர விடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது-
மோட்டார் வாய் வைத்துள்ள முட்டாள் யாத்னா. உங்களால் அறிவு சலவை செய்யமுடியாது அறிவுஜீவிகளையும், முற்போக்குவாதிகளையும் உங்களை போன்றவர்கள் இப்படித்தான் செய்கிறீர்கள்.
ஹிட்லர், கடாபி, பின்லேடன் போன்றோர் மண்ணோடு மண்ணாக போனதை இந்த உலகம் பார்த்திருக்கிறது. பிரதமர் மோடி முதலில் தங்களின் கட்சியின் உறுப்பினர்களின் வாயை மூடச் சொல்ல வேண்டும். அல்லது தொடர்ந்து மவுனமாக இருக்க சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #BJPMLA #Prakashraj
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்