search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Addmission"

    • தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • அசல் மாற்றுச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லுாரிகளில், கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சிக்கண்ணா கல்லுாரியில் வரும் 10ம் தேதியும், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வரும் 8ம் தேதியும் கலந்தாய்வு துவங்குகிறது.இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் வரும் 10ம் தேதி துவங்கி, 17 வரை நடக்கிறது. விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தி–னரின் குழந்தைகள் தேசிய மாணவர்படை ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை வரும் 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆடை வடிவமைப்பு நாகரிகம் பாடப்பிரிவிற்கும், கலந்தாய்வு நடக்கும். வணிகவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கும், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான தரவரிசை, 750 வரையிலான கலந்தாய்வு வரும் 11ல் நடக்கிறது. வரும் 12ம் தேதி, 751 முதல், 1,400 வரையிலும் நடக்கிறது.அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு, தரவரிசை, 700 வரையில், வரும் 13ம் தேதி நடக்கிறது.மேலும், 701 முதல், 1,400 வரையில் வரும் 16ல் நடக்கிறது. வரும் 17ம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு முதல், 1000 பேருக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடக்கும். இதுகுறித்த விவரங்கள், மாணவர்களின் இ மெயில், மொபைல் எண்ணிற்கு வரும். இதுகுறித்து சிக்க–ண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:- கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 சான்றிதழ் அவசியம். மாற்றுச்சான்றிதழ், சாதி–ச்சான்றிதழ், சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அவசியம் எடுத்து வரவும். பாஸ்போர்ட் அளவிலான, 6 புகைப்படங்கள் வேண்டும். கல்லுாரி கட்டண தொகை செலுத்த வேண்டும்.அசல் மாற்று–ச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வரவும்.

    இம்முறை அரசு கலை கல்லுாரிகளில் தமிழகத்தில் முதல்முறையாக ரேங்கிங் பட்டியல் இக்கல்லுாரியில்தான் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதைபோல் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, காங்கயம் கலை அறிவியல் கல்லுாரிகளில் வரும் 8ம் தேதி கலந்தாய்வு துவங்கப்பட உள்ளது. ஊரடங்கிற்கு பின் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த முறை, 4 ஆயிரம் பேர் மட்டுமே சிக்கண்ணா கல்லுாரியில் சேர விண்ணப்பித்த நிலையில் இம்முறை, 6 ஆயிரத்து, 119 பேரின் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் 4 ஆயிரத்து, 42 விண்ணப்ப–ங்கள் பெறபட்டுள்ளதாகவும், கடந்தாண்டை விட ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகம் என்றும் தெரிவித்தனர். அதேபோல் இந்த ஆண்டு பி. காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

    • விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும்.
    • தேசிய மாணவர் படை ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு.

    திருப்பூர் :

    தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் - 30, ஆங்கிலம் இலக்கியம் - 50, பொருளியல் - 30, வரலாறு - 50, பி.காம்., 100, பி.காம்.சி.ஏ., 60, பி.காம்., சர்வதேச வணிகம் - 50, பி.பி.ஏ., - 50, பி.சி.ஏ., - 50, பி.எஸ்சி கணினி அறிவியல் (ஷிப்ட் 1) - 60, பி.எஸ்சி., கணினி அறிவியல் (ஷிப்ட் 2) - 60, பி.எஸ்சி., இயற்பியல் - 24, வேதியியல் -48, கணிதம் - 75, விலங்கியல் - 48, ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் - 50 ஆகிய இளநிலை பட்டபடிப்புகள் வழங்கப்படுகின்றனர்.

    இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tngasa.in மற்றும், www.tngasa.org என்றஅங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் இன்று முதல் ஜூலை15 வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-

    இணையதளத்தில் கேட்கப்படும் சுய விவரங்கள், தேர்வு செய்யப்போகும் கல்லூரிகள் தேர்வு, பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

    ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரி எனில் கூடுதல் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், www.cgac.in இணையதள முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • விபரம் அறிய, கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப்பட்ட படிப்பு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.அவ்வகையில் அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த சேர்க்கை இடம்பெறுகிறது.

    இப்பாடப்பிரிவுகளில் சேர விரும்புவோர் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக வரும் 27-ந் தேதி முதல் ஜூலை 15ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி அவரவர் தங்களது பெயர், இமெயில் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒரு முறை செலுத்தினால் போதுமானது. அதேபோல விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அதனை, சேர்க்கை நடைபெறும் நாளில் கல் லூரிக்கு எடுத்து வர வேண்டும்.

    விபரம் அறிய, கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.இதேபோல, மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்று பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல், சேர்க்கை நடைபெறும் நாட்கள் குறித்த விபரங்கள், www.gacudpt.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.

    • மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.
    • அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் பிளஸ்- 2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய நிலையில் மேல்நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசாணைப்படி, மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இட ஒதுக்கீடு அரசாணைப்படி பொதுப்பிரிவு -31, பிற்படுத்தப்பட்டோர் -26.5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் -20, ஆதிதிராவிடர் -1 8 சதவீதம், பழங்குடியினர் - 1, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் -3.5 சதவீதம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும், பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீட்டை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்*.ட ஒதுக்கீட்டின்படி, மாணவர் சேர்க்கை நடந்தது குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக, அனைத்து பள்ளி நிர்வாகமும், பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கை நடக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது என்றனர்.

    • அட்மிஷன் பெற ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டாம்.
    • ஒவ்வொரு மாணவிக்கு ஒரு தேதி குறிப்பிட்டு பதில் அனுப்பப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6,000 மாணவிகள் கல்வி கற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 500க்கும் அதிகமான மாணவிகள் எழுதுகின்றனர். கூடுதல் எண்ணிக்கையிலான மாணவிகள் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்கின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் இப்பள்ளியில் சேர ஒவ்வொரு ஆண்டும் போட்டி போடுவர்.

    பெற்றோரின் கடைசி நேர சிரமங்களை தவிர்க்க தேர்வு முடிவு வெளியாகும் இந்நாளில் பிற பள்ளி மாணவிகள்விண்ணப்பம், அட்மிஷன் பெற ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டாம். தங்களது பெயர், முகவரி, ஏற்கனவே படித்த பள்ளி, பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை http://www.javabaimghss.com என்ற இணையதள லிங்க்கில் பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு மாணவிக்கு ஒரு தேதி குறிப்பிட்டு பதில் அனுப்பப்படும். அந்நாளில் முழு விபரங்களுடன் பள்ளிக்கு வந்தால் போதுமானது என ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பமேரி தெரிவித்தார்.

    • உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
    • உடுமலை வட்டார ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை,

    தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் ஊராட்சி ,நகராட்சி அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. 2022 -23 ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    அதனடிப்படையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக தீவிர மாணவர் சேர்க்கை வாகனப்பிரச்சாரம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்போம் மற்றும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களை விளக்கி கூறி இந்த வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த தீவிர மாணவர் சேர்க்கை வாகன பிரச்சாரத்தை உடுமலைப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உடுமலை வட்டார ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×