என் மலர்
நீங்கள் தேடியது "Aditya L1"
- சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- ராக்கெட்டின் 4-வது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும்.
ஸ்ரீஹரிகோட்டா:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பேசியதாவது:-
சிங்கப்பூருக்காக இஸ்ரோ மேற்கொள்ளும் பிரத்யேக ஏவுதல் இதுவாகும். சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது சிங்கப்பூர் நாட்டினருக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மீதான நம்பகத் தன்மையைக் காட்டுகிறது.
எங்களுக்கு விண்வெளியில் சரியான சுற்றுப்பாதை சாதனையாக உள்ளது.
இந்த பயணத்தின் மூலம் விண்வெளி குப்பைகளை குறைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ராக்கெட்டின் 4-வது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும்.
4-வது நிலை 535 கி.மீ. முதல் 300 கி.மீ. சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும். விண்வெளிக் குப்பைகள் அபாயத்தைக் குறைக்க இஸ்ரோ பயனுள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அடுத்த ஏவுதல் பி.எஸ்.எல்.வி. சி-57 ஆதித்யா-எல்1 ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ககன்யான் விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆள் இல்லாத விண்கலம் விண்ணில் செலுத்தி சோதனை இடப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
திட்ட இயக்குனர் பிஜூ கூறுகையில், 'பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 530- 570 கி.மீ. உயரம் வரையான சுற்று வட்டப் பாதையில் அதிக அளவிலான செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளி கழிவுகள் உள்ளன.
எனவே 350 கி.மீ. புவி தாழ்வட்ட பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்துவது குறித்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டில் உள்ள பி.எஸ்-4 (4-வது நிலை) மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார்.
- சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
- சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி அனுப்பப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது. 14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கி உள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
செப்டம்பர் 2-ந்தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய உள்ளது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விண்கலம் திட்டமிட்ட இலக்கை 4 மாத பயணங்களுக்கு பிறகு சென்று சேர்ந்து ஆய்வை தொடங்க இருக்கிறது.
- ஸ்ரீஹரிகோட்டாவில் தனியாக 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடத்தை இஸ்ரோ அமைத்து உள்ளது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.
இந்த விண்கலம் திட்டமிட்ட இலக்கை 4 மாத பயணங்களுக்கு பிறகு சென்று சேர்ந்து ஆய்வை தொடங்க இருக்கிறது. பொதுவாக ராக்கெட் ஏவுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் தனியாக 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடத்தை இஸ்ரோ அமைத்து உள்ளது.
இந்த நிலையில் இந்த ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிட விரும்புகிறவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.
- இறுதிக்கட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- 4 ‘ரிமோட் சென்சிங்’ கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 'ஆதித்யா- எல்1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது.
இதற்கான இறுதிக்கட்டப்பணியான 'கவுண்ட்டவுன்' வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 'ஆதித்யா- எல்1' விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன?, இது சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்ய இருக்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
'ஆதித்யா- எல்1' விண்கலத்தில் சூரியனின் கொரோனா, 'குரோமோஸ்பியர், போட்டோஸ்பியர்' மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை ஆய்வு செய்ய 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் 'கரோனல்' வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களை வழங்கும்.
4 'ரிமோட் சென்சிங்' கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும். இதில் புலப்படும், புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர்களும் அடங்கும். சூரிய கொரோனாவை படம் பிடித்து அதன் இயக்கவியலையும் ஆய்வு செய்யும்.
'சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்', ஒளிக்கோளம் மற்றும் 'குரோமோஸ்பியரை' குறுகிய மற்றும் அகன்ற அலைவரிசையில் உள்ள புற ஊதா அலை நீளங்களில் படம் பிடிக்கும் தன்மை கொண்டது.
அதேபோல் 'சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்' சூரியனில் இருந்து மென்மையான எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 'ஹை எனர்ஜி எல்-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்' கருவி சூரியனில் இருந்து கடின எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும்.
அதில் உள்ள 3 இன்-சிட்டு கருவிகள் சூரியக் காற்றின் கலவை, இயக்கவியல் மற்றும் காந்தப்புலத்தை அளவிடும். சூரியக் காற்றின் துகள் பரிசோதனை, சூரியக் காற்றின் கலவை மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு கருவி சூரியக்காற்றின் பிளாஸ்மா பண்புகளை அளவிட இருக்கிறது.
மேம்பட்ட 'டிரை- ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல்' காந்தமானிகள் சூரிய காற்றில் உள்ள காந்தப்புலத்தை அளவிட்டு தகவல்களை அளிக்க இருக்கிறது.
இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும்
- எல்-1 புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ம்தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகும்.
விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும்.
ஆதித்யா எல்-1, கிரகண நேரங்களிலும் சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது. சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்படுகிறது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.
"விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது. ராக்கெட் மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் அறிவித்த இஸ்ரோ, ஆதித்யா எல்-1 குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 2-ம்தேதி ஏவுவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன் செப்டம்பர் 1 (நாளை), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன.
- சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1 விண்கலம் திட்ட இயக்குநராக, தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார்.
தென்காசி:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது.
சமீபத்தில், சந்திரனில் இதுவரை எந்த நாடுகளும் ஆய்வு செய்திடாத தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 வெற்றிக்கரமாக தரையிறங்கியது. இந்தியாவின் இந்த சாதனையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய், நிலவை தொடர்ந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்த திட்டம் வெற்றி பெற்றால், அந்த வரிசையில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1 விண்கலம் திட்ட இயக்குநராக, தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். தனது ஆரம்ப கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்றார். பின்னர் மேல்நிலை கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார்.
பின்னர் நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்துள்ளார்.
தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர்சாஜியின் கணவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் டாக்டராக உள்ளார். மகன் வெளிநாட்டில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார்.
ஆதித்யா எல்-1 ஆய்வு திட்டத்தின் முழு பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்ட நிலையில் இதை பி.எஸ்.எல்.வி.-எக்ஸ்எல்(சி-57) என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.
இத்தகைய விண்கலம் தயாரிப்பில் திட்ட இயக்குனராக முதன்மையான இடத்தில் இருக்கும் நிகர் சாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது அப்பகுதி மக்களுக்கு பெருமையை தேடி தந்துள்ளது.
- விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது.
- ராக்கெட் மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ம்தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகும்.
விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும். ஆதித்யா எல்-1, கிரகண நேரங்களிலும் சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.
சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்படுகிறது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.
"விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது. ராக்கெட் மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் அறிவித்த இஸ்ரோ, ஆதித்யா எல்-1 குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 2-ம்தேதி ஏவுவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன் செப்டம்பர் 1 (இன்று), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.
- பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ந் தேதி (நாளை) காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
- சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், நாளை காலை 11:50 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், "ஆதித்யா எல்1-க்கு பிறகு, எங்களின் அடுத்த இலக்கு ககன்யான் திட்டம். இதன் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்."
சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
- சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
- சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரியம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 மாதிரியை வைத்து சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முன் அம்மனின் அருள் பெறுவது வழக்கம். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது அனைவரது ஆசீர்வாதமும் இருந்தது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளது.
பூமியில் இருந்து சூரியனை நோக்கி 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாங்ரேஜியன் பாயின்ட்-1(எல்-1) சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும்.
சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில், இன்சாட்-3டிஎஸ் ஜி.எஸ்.எல்.வி-மார்க்-2 மூலம் ஏவப்படும். எஸ்.எஸ்.எல்-வி ராக்கெட் அடுத்த மாதம் ஏவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
- விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைபடுத்தி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
- 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல தட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.
சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட் திட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைபடுத்தி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
அதில் ஒருவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி. தமிழ்நாட்டின் செங்கோட்டையைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. 59 வயதான இவர் அரசு பள்ளியில் படிப்பை முடித்தார். 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் இடம். 12ம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம்.
பின்னர், திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஷாஜி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எம்.டெக் பட்டம் பெற்றார்.
விண்வெளி ஆராய்ச்சியில் இருந்த ஆர்வத்தில் இருந்த ஷாஜி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.
அங்கு, பல்வேறு விண்கல திட்டங்களில் தனது பணியை முழு அர்ப்பணிப்போடு செய்து வந்தார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல தட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார்.

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக சூரியனின் ஆய்வுக்காக வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நிகர் ஷாஜி இன்று மேடையேறி "கனவு நிறைவேறிவிட்டதாக" பெருமையுடன் கூறினார்.
இதுகுறித்து ஆதித்யா எல்1 வெற்றி குறித்து நிகர் ஷாஜி கூறுகையில், " நான் எட்டு ஆண்டுகளாக இந்த சிக்கலான திட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இது ஒரு சவாலான திட்டம். ஒளிவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவது பெரும் சவாலாக இருந்தது. இன்று கனவு நிறைவேறிவிட்டது" என்றார்.
நிகர் ஷாஜியின் கணவர் மெக்கானிக்கல் இன்ஜினியர், துபாயில் பணிபுரிகிறார். மகன் பிஎச்.டி படித்து நெதர்லாந்திலும், மகள் தகுதியான மருத்துவராகவும் முதுகலை படித்து வருகிறார்.
ஏற்கனவே, சந்திரயான்-2 திட்டத்தில் திட்ட இயக்குநர் எம்.வனிதா மற்றும் மிஷன் இயக்குநர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா ஆகிய இரு பெண்கள் முக்கியப் பங்காற்றினர். இதேபோல் சந்திரயான்-3 திட்டத்திலும் துணை இயக்குனர் கல்பனா முக்கிய பங்கு வகித்தார்.