என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admissions"

    • இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
    • பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

    நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்பு பிரிவில் 9,639 இடங்கள் இருந்த நிலையில் அதில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

    இதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் முதல் சுற்று ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில்26,654 மாணவர்கள் பங்கேற்றார்கள். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை வருகிற 31-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

    இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 1-ந்தேதி காலை 10 மணிக்குள் வெளியிடப்படும்.

    மறுநாள் 2-ந்தேதி மாலை 5-மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

    பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதனால் கடந்த ஆண்டை விட அதிகமான இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    • 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.
    • முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. இளநிலை பாடப்பிரிவுகளில் 864 இடங்கள் உள்ள நிலையில் முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.

    இதற்கான கலந்தாய்வு வாயிலாக 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 12 விளையாட்டுத்துறையைச்சேர்ந்த மாணவர்கள், ஒரு தேசிய மாணவர் படையைச்சேர்ந்த மாணவர் என, மொத்தம் 18 பேர் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். மாணவர்கள் தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ள, கல்லூரி இணையதளத்தை பார்வையிடலாம்.அதேபோல, தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை கலந்தாய்வுக்கு உரிய குறுஞ்செய்தி அவரவர் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த தகவலை, கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
    • பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதி கல்லூரிகளில் நடக்கிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட பொது கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 எடுத்து கொண்டு தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே கல்லூரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

    இதேபோல் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, வருகிற 8-ந் தேதி காலை 10 மணியளவில் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், பி.காம், பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ளக்கூடிய மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ-5 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

    • வேலைவாய்ப்பை பெற்றுதரும் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது.
    • இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயற்கை எழிலுடன் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள் சிறந்த கல்வியை பெற்று தங்களது வாழ்வை மேம்படுத்தி க்கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

    நாக் "ஏ" கிரேடு பெற்றுள்ள இந்த கல்லூ ரியில் என்ஜி னீயரிங் படிப்பு களான சி.எஸ்.இ., இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில், பயோமெடிக்கல் போன்றவையும் உயர் படிப்புகளான எம்.இ., சி.எஸ்.இ., எலக்ட்ரா னிக்ஸ், ஸ்டெக்சரல் என்ஜினீயரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ், என்ஜினீயரிங் டிசைன் மற்றும் பி.எச்.டி. பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகி ன்றன.பி.டெக்கில் பயோடெக், ஆர்ட்டி பிசியல், இண்ட லிஜண்ட் மற்றும் டேட்டா சயின்ஸ், எம்.பி.ஏ. போன் பாட பிரிவுகள் உள்ளன.

    பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பை முடித்து வெளியேவரும் மாணவ-மாணவிகளுக்கு நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டு பன்னாட்டு மற்றும் பிரபல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த ஆண்டு நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பி.சி.எஸ்., சி.டி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஜோஹோ போன்ற நிறுவனங்களில் 1263 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்வானவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை ஊதியம் பெறுவார்கள். இதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த ஆண்டு (2022-2023) என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் மற்றும் பிளஸ்-2 சான்றிதழ், நிதந்தர சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, இமெயில்., பதிவு கட்டணம் செலுத்த ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள் கொண்டுவர வேண்டும். மேலும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகையும் வழங்கப்படுகிறது.

    உடனடி சேர்க்கை்காக சிவகாசி, கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விளாத்திகுளம், கயத்தாறு, நெல்லை, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடயநல்லூர் ஆகிய ஊர்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பான விவரங்க ளுக்கு 80125 31336, 78670 47070, 98946 04930 மற்றும் 80125 31321, 04562-239600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இதேபோல் பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    • கணக்கு பதிவியலுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
    • கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பிற்கு கணக்கு பதிவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 4 பாட பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை நடந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பதற்கு மானூர் மற்றும் நல்லம்மாள்புரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உக்கிரன்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி என 3 மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே உள்ளது.

    குறிப்பாக மானூரில் உள்ள அரசு பள்ளிக்கு போதிய பஸ் வசதி இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் இங்கு சென்று பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவ சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கு 190 மாணவிகள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 120 மாணவிகள் சேர்ந்தவுடன் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் இன்று பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்காக சென்ற மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியை குமாரி பிரபாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    காரணம் என்ன?

    அப்போது தலைமை ஆசிரியை கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பிற்கு கணக்கு பதிவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 4 பாட பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை நடந்தது.

    இதில் கணக்கு பதிவியல் பிரிவிற்கு பாடம் நடத்தும் ஆசிரியருக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ஆசிரியர் சமீபத்தில் இறந்துவிட்டார்.

    அதன் பிறகு கணக்கு பதிவியலுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு அந்த பிரிவில் மாணவிகள் சேர்க்கப்படவில்லை. மற்ற பாடப்பிரிவுகளுக்கு போதிய மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×