search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Affectation"

    • ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
    • கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சி, விசித்திரராஜபுரம் கிராமத்தில் காலனி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட நாட்களாக சீர் செய்ய கோரியும், இந்த சாலையை சீரமைக்க யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை உடன் சீர் செய்ய வேண்டும் எனவும், சாலையில் மேற்புறம் உள்ள ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைத்திட வேண்டும் எனவும் இதற்கான நிதியை கூடுதலாக ஒதுக்ககோரி அந்த பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் கும்பகோணம்- திருவையாறு நெடுஞ்சாலையில் விசித்திர ராஜபுரம் கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், சுதா, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர், விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தையில் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி யில் புளிச்சக்காடு, தோட்ட மானியம், ஆலமரத்தடி, நித்திய வனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 18 மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக ராகினி பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தனர். தொடர்ந்து பள்ளி விடுமுறை பின் பள்ளிக்கு வந்த மேலும் 5 மாணவ -மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியை க்கு காய்ச்சல் மற்றும் வாந்தி அறிகுறி இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் சுகாதாரத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடிநீர் பரிசோ தனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    கிஷோர் (5), சக்திச ரவணன் (9), பவதாரணி (8), ரஞ்சித்பவன், யாழினி, கபிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட பள்ளியில் பயிலும் 18 மாணவ- மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரை இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.சிகிச்சைக்கு பின்னர் 2 மாணவிகளை தவிர மற்ற மாணவ-மாணவிகள் மற்றும் தலைமைஆசிரியை வீடு திரும்பினர். மாணவ மாணவிகளின் உடல்நலம் பாதிப்பிற்கு வீட்டில் சாப்பிட்ட உணவு காரணமா அல்லது குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 மாணவிகளை சந்தித்து பெற்றோர்களிடம் விசாரி த்தார்.

    தொடர்ந்து தலைமை மருத்துவர் பானுமதியிடம் தேவையான சிகிச்சையளிக்க அறிவுறு த்தினார். பின்னர் குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், நகர்மன்ற துணை தலைவர் சுப்ப ராயன், நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், ரமாமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×