search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agal lamps"

    • பல வடிவங்களில் விற்பனைக்காக அகல் விளக்குகள் தயாராகின்றன.
    • கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    கார்த்திகை தீபத்திருநாள் வருகிற டிசம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு வடிவங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் புதுக்கோட்டை அருகே குசலக்குடியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் புதுக்கோட்டை திருச்சி கரூர், தர்மபுரி, ஈரோடு,மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

    இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் பாலமுருகன் கூறியதாவது:-

    இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பரம்பரையாக குடும்பத்துடன் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சீசனுக்கேற்ப பொங்கல் பானை, அடுப்பு, பானை, சட்டி, அகல் விளக்குகள் அருகாமையிலுள்ள ஓட்டக்குளம் மற்றும் சானாதி உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து வந்து பலவிதமாக அகல் விளக்குகளை நாங்கள் தயாரித்து வருகின்றோம்.

    இதற்கு மூலப் பொருட்களான மண் மற்றும் எரிக்க பயன்படும் விறகு, வைக்கோல் போர் போன்றவை விலை அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட லாபம் கிடைக்கவில்லை, போதிய வருமானம் இல்லாத போதிலும் குலத்தொழிலை விடக்கூடாது என்பதால் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நாள் ஒன்றுக்கு ஆயிரம் விளக்குகள் வரை தயாரிப்போம் , எங்களிடம் சில்லரை மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.

    எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கி நிதி உதவி, உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டும் மேலும் இந்தப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின் திருவை அனைவருக்கும் வழங்கவேண்டும் ஏரியில் மாட்டுவண்டி மூலம் மண் எடுக்க அரசு உதவிவிட வேண்டும் என்றும்கூறினார் இவ்வாறு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விரைவில் கார்த்திகை தீபம் வர இருப்பதால் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்
    • மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம்

    வேலூர்:

    கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 'அகல் விளக்குகள்' தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் முக்கிய பண்டிகையாக கொண்டாடப் படும் கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக, மக்கள் தயாராகி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மண் பாண்ட தொழிலாளர்கள் உள்ள வேலூர் சூளைமேடு, காகித பட்டறை, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு, மேலகுப்பம், ஒடுக்கத்தூர், பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாறு, களிமண்ணால் செய்யக்கூடிய பொருட்களை தயாரித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். விரைவில் கார்த்திகை தீபத் திருவிழா வர இருப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது 'அகல் விளக்குகள்' தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
    • சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகு படுத்துவது வழக்கம். இதுேபால் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி உடுமலை பூளவாடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

    அகல் விளக்கு தயாரிப்பு குறித்து தொழிலாளி ஒருவர் கூறியதாவது:- உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வரும் நிலையில் உப்பாறு ஓடையில் களிமண் எடுத்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×