search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "air travel"

    • பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    • தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    புதுடெல்லி:

    விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்கவேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    விமானப் பயணத்தின்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதிசெய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

    தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ரெயில்வேதுறை ஏற்பாடு செய்தனர்.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்தப்பட உள்ளது. இது 6 நாள் சுற்றுலா ஆகும்.

    மதுரையில் இருந்து செப்டம்பர் 24-ந் தேதி சுற்றுலா தொடங்குகிறது. இதில் ஒரு நபருக்கு ரூ.39,300கட்டணமாக செலுத்த வேண்டும்.

    இதில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயண காப்பீடு ஆகியவை அடங்கும். கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறை களோடு நடத்தப்படும் சுற்றுலாவில் அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு www.irctctourism.com இணையதளம் மூலம் பயண சீட்டுகள் பதிவு செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. #PulwamaAttack #AirTravel #JammuKashmir
    புதுடெல்லி:

    காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி சாலை வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (துணை ராணுவம்) மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. அதாவது விடுமுறைக்கு செல்லும்போதும், பணிக்கு திரும்பும் போதும் ஜம்மு-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-டெல்லி இடையே வர்த்தக விமானங்களில் இருவழி போக்குவரத்தை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான உரிமத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். பின்னர் அந்த கட்டணத்தை தங்கள் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுமார் 7.8 லட்சம் வீரர்கள் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது.  #PulwamaAttack #AirTravel #JammuKashmir

    ×