என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akash Ambani"

    • 2024 இந்தியா மொபைல் காங்கிரஸ் இன்று டெல்லியில் தொடங்கியது.
    • இந்நிகழ்வில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார்.

    இந்திய தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கிய 2024 இந்தியா மொபைல் காங்கிரஸை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 4 நாள் நடக்கக்கூடிய இந்த நிகழ்வு ஆசியாவிலேயே மிகப்பெரிய டெக் நிகழ்ச்சியாகும்.

    இந்த நிகழ்வில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி பிரதமர் மோடி மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடம் 2 முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்தார்.

    விழாவில் பேசிய ஆகாஷ் அம்பானி, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் இந்திய பயனர்களின் டேட்டாக்களை சேமிக்க இந்தியாவில் டேட்டா மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிக வேகமாக வளர்ந்து வருவதால் டேட்டா சென்டர் பாலிசி 2020-ஐ மேம்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

    • வில் ஜேக்சை ரூ.5.25 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.
    • கடந்த ஐ.பி.எல். தொடரில் வில் ஜேக் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடியவர்.

    ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பிரபல வீரர் வில் ஜேக்சை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.

    கடந்த ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடியவர். இந்த ஏலத்தில் இவரை பெங்களூர் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவரை ஏலத்தில் மும்பை அணியிடம் விட்டுக் கொடுத்தது ஆர்சிபி.

    வில் ஜேக்சை அடிப்படை விலையான 2 கோடியில் இருந்து ரூபாய் 5.25 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. அப்போது, ஆர்டிஎம் முறைப்படி வில் ஜேக்சை தக்க வைத்துக் கொள்கிறீர்களா? என்று ஆர்.சி.பி. அணி நிர்வாகத்திடம் கேட்டபோது ஆர்.சி.பி. நிர்வாகம் இல்லை என்று கூறினர். இதனால், மும்பை அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மகிழ்ச்சியில் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகத்தினர் இருக்கைக்கே சென்று கை கொடுத்து நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வில் ஜேக்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த சீசனில் மிரட்டலாக ஆடி சதம் விளாசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
    • தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

    கேப்டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    இதில் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தகுதிப்பெற்றன. இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் இரு அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் காவ்யா மாறன் மைதானத்தில் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். பின்னர் இருவரும் அரவணைத்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து பிரிந்து சென்றனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பிரதமர் மோடி கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார்.
    • 5ஜி மூலம் இயங்கும் வைபை சேவைகளை நாத்வாராவில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது. அப்போது ஆகாஷ் அம்பானி பேசியதாவது:

    இந்தியாவின் உண்மையான 5ஜி வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வைபை வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து பொதுமக்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

    இதைத்தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5ஜி சோதனை செய்யவுள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது.

    5ஜி சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிக அமைப்புக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    5ஜியில் இயங்கும் வைபை சேவையை மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.
    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியை முகேஷ் அம்பானி ராஜினாமா செய்தார்.

    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை சேர்த்தது என டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.

    இதற்கிடையே, ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    ஆனால், அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் சொந்தமான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார்.

    இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனராகவும் ஆகாஷ் அம்பானி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ போன் பெரும்பாலான இந்தியர்களை 2ஜி சேவையில் இருந்து 4ஜிக்கு அழைத்துச் செல்லும் ஒரு புரட்சிகரமான சாதனமாக மாறியது. இந்த போன் புரட்சிக்கு பின்புலம் ஆக ஆகாஷ் இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    மும்பை:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.



    இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்துள்ளனர்.

    ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர்.


     
    பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வருகை தந்தனர்.



    இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே உள்பட பலரும் வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்தனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    மும்பையில் நேற்று நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழா நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். #akashshlokaengagement #ShlokaMehta #AkashAmbani #ambaniwedding #Ambanis

    மும்பை:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷாவும் இரட்டையர்கள். மூன்றாவது ஆனந்த் அம்பானி.

    ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த விழா நேற்று நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இவர்களது திருமண அழைப்பிதழ் பெரிய பரிசு பெட்டி போன்ற வடிவத்தில் தயார் செய்யப்பட்டது . பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டது. ஒரு அழைப்பிதழ் தயாரிக்க மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர்.

    மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே, தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா, பாலிவுட் நடிகர்-நடிகைகள் வித்யா பாலன், கஜோல், திஷா பதானி, அனில் கபூர், தயாரிப்பாளர் வித்து வினோத் சோப்ரா, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  


    நீதா அம்பானி, ஆகாஷ், இஷா, ஆனந்த், ஷ்லோகா மேத்தா


    முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி


    பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய்


    தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி திஷா பதானி


    பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் மீரா ராஜ்புட்


    முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அவரது மனைவி 


    பாலிவுட் நடிகர் அனில் கபூர்


    சாரூக்கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் மகன் ஆர்யன் கான்


    பிரபல பாலிவுட் இயக்குனர் ஆஷ்தோஷ் கவுரிகர்


    பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ரோப், நடிகை திஷா பதானி


    பாலிவுட் நடிகை கஜோல்


    பாலிவுட் தயாரிப்பாளர் வித்து வினோத் சோப்ரா மற்றும் அவரது மனைவி, மகன், மகள்


    பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூர்


    பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ்


    பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்


    பாலிவுட் நடிகை சாரா அலி கான்


    பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப்

    #akashshlokaengagement #ShlokaMehta #AkashAmbani #ambaniwedding #Ambanis
    மும்பையில் நடைபெற்று வரும் ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் தன்னுடைய காதலருடன் கலந்துக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. #PriyankaChopra #NickJonas
    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். 

    இன்று ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.

    மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.



    நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஸும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி வருவதால், இருவரும் காதலித்து வருவதாகவும், ஜூலை மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்டனர்.
    பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்காக பிரம்மாண்டமாய் அச்சடிக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. #AkashAmbani #ShlokaMehta #InvitationCard
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி.


    முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர். ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா - மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்கள் மிகப்பிரம்மாண்டமாய் அச்சடிக்கப்பட்டுள்ளன. வருகின்ற 30-ம் தேதி நிச்சயர்தார்த்தம் நடைபெற உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஒரு அழைப்பிதழ் அச்சிட 1 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்டி வடிவில் உள்ள இந்த அழைப்பிதழில் விநாயகர் சிலை உள்ளது. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ் பார்ப்போரை கவர்ந்து இழுக்கின்றன. #AkashAmbani #ShlokaMehta #InvitationCard

    ×