என் மலர்
நீங்கள் தேடியது "Alangulam"
- அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், குத்தப்பாஞ்சான் ஊராட்சி, காளத்திமடம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமின் மூலமாக அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமினை பற்றி, பொதுமக்களுக்கு திட்ட உரையினை விளக்கி பேசினார்.
மேலும் குத்தப்பாஞ்ச் சான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளின் மூலமாகவும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் குத்தபாஞ் ளசான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணிகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்பு பசுபதிதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுதா சின்னத்தம்பி, ஒப்பந்ததாரர் கணேஷ் பாண்டியன், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் என பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன் பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்
- அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 62). இவர் தனது வீட்டில் எரியாமல் இருந்த பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது உடலில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்ட ர்கள் தெரிவித்துவிட்டனர்.
- ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை 4 வழிச்சாலை விரிவாக்கத்தின் காரணமாக அகற்றப்பட உள்ளது
- தற்போது உள்ள காமராஜர் சிலையை சேதம் அடையாமல் அகற்றி புதிய இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நெல்லை:
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை 4 வழிச்சாலை விரிவாக்கத்தின் காரணமாக அகற்றப்பட உள்ளதால், பெருந்தலைவர் காமராஜர் சிலையை பாதுகாத்து மாற்று இடத்தில் அமைப்பதற்காக நான் அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்தேன். அப்போது ஆலங்குளம் வட்டம் ஆலங்குளம் கிராமம் எண் 424-ல் ஒரு சென்ட் இடம் ஒதுக்கி தந்து காமராஜர் சிலையை அமைப்பதற்கு விரைவில் ஆவன செய்ய, நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது நான் எழுப்பிய வினாவின்அடிப்படையில், அந்த இடம் காமராஜர் சிலை அமைப்பதற்கு ஓதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.
மேலும் தற்போது உள்ள காமராஜர் சிலையை சேதம் அடையாமல் அகற்றி புதிய இடத்தில் காமராஜர் சிலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
- பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் காய்கனி மார்க்கெட் சாலையை வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இதையடுத்து அதனை பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணி தொடங்கப்பட்டு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சில அடி இடைவெளி விட்டு அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி அமைத்தால் மழை நீர் தேங்கி வெளியேற இயலாது, விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சாலை முழுவதும் பேவர் பிளாக் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காய்கனி சந்தை வியபாரிகள் முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில்தான் சாலை அமைக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகள் தரப்பில் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் தென்காசி கலெக்டரிடம் புகார் அளித்து தீர்வு காண முடிவு செய்தனர்.
- 50 மாணவிகள் போலீசாரின் பணிகளை காண சென்று இருந்தனர்.
- மாணவிகளுக்கு போலீசார் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் கூறினர்.
ஆலங்குளம்:
உலக பெண்கள் குற்ற தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 50 மாணவிகள் போலீசாரின் பணிகளை காண சென்று இருந்தனர்.
அவர்களுக்கு போலீஸ் நிலையத்தை சுற்றிக் காண்பித்த போலீசார், அவர்களுக்கு சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி சமுதாயத்தை எதிர்கொள்வது எப்படி? என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் கூறினர். தொடர்ந்து மாணவிகளின் எதிர்கால திட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கிருந்த மாணவிகளில் 4 பேர் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதுதான் தனது குறிக்கோள் எனக் கூறினர். அவர்களை பாராட்டிய இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தனது இருக்கையில் அந்த மாணவிகளை அமர வைத்து அவர்களை புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்.
- கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
- புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலங்குளம்- தென்காசி சாலையில் கழுநீர்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 ஏக்கர் நிலத்தில், புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.11.33 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்று, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் சிவபத்மநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டிட பணிகளை தரமாக அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
கீழப்பாவூர் ஒன்றியக் குழுத் தலைவர் காவேரி சீனிதுரை, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலர்கள் செல்லத்துரை, அன்பழகன், கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலர் சீனிதுரை, கழுநீர்குளம் ஊராட்சித் தலைவர் முருகன், நகர செயலர்கள் ஆலங்குளம் நெல்சன், கீழப்பாவூர் ஜெகதீசன், தொழிலதிபர் மணிகண்டன் பொறி யாளர்கள் சரத்குமார், நல்லசிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.
ஆலங்குளம்:-
ஆலங்குளம் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில், ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
ஆலங்குளம் பேரூராட்சி, 11-வது வார்டு, அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில், 15-வது மானியக்குழு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், 11-வது வார்டு உறுப்பினர் வென்சிராணி, 12-வது வார்டு உறுப்பினர் எஸ்.டி.சாலமோன்ராஜா, தொழிலதிபர் ஏ.மோகன்லால், சீதாராமன், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் அருள்ராஜ், செல்வின், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம்:
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி ஆகியோரின் அறிவுரைப்படி ஆலங்குளம் கால்நடை மருந்தகம் சார்பில் இன்று நடைபெற்றது.
நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வி மணிமாறன் தலைமை தாங்கி முகாமினை ெதாடங்கி வைத்தார். நெல்லை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான்சுபாஷ் முன்னிலை வகித்தார். கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் மற்றும் பறவைக் காய்ச்சல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி நோயுற்ற கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தார்.கால்நடை மருத்துவர்கள் ஊத்துமலை டாக்டர் ரமேஷ், நெட்டூர் டாக்டர் ராமசெல்வம், ஆலங்குளம் டாக்டர். ராஜஜூலியட் ஆகியோரால் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை இன விருத்தி, மடிவீக்க நோய் சிகிச்சை, தடுப்பூசி,கிடாரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப் பட்டது. சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜூலியட் நன்றி கூறினார். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிச்சையா , முப்பிடாதி மற்றும் நாரணபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் முகாமில் கலந்துகொண்டனர்.
- நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது.
- பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து விளக்கு அருகே நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதேபோல் ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ்சும் பழுதாகி அடுத்தடுத்து நின்றது.
இதனால் அதில் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சாலையோரம் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியே வந்த மாற்று பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்கிருந்த பயணிகள் கூறியதாவது:-
ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்குள் பழுது ஏற்பட்டு ஓடியதால் அதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சத்துடன் காணப்பட்டனர்.
பயணிகள் கோரிக்கை
நெல்லை- தென்காசி சாலையில் பழுதான பஸ்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. அதில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரிவர செல்ல முடியாமல் போகும் சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது
- மாணவர்கள் கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம், கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்
ஆலங்குளம்:
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் அந்தந்த பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம் நடந்தது. மாணவியர் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்.இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஒரு பயனாளிக்கு ரூ.50,000 வீதம், 100 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
- 2 கறவை மாடு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.5,000- க்கு மேல் அதிக லாபம் கிடைக்கின்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட காவலா குறிச்சி ஊராட்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு கறவை மாடுகள் வாங்குவதற்காக ஒரு பயனாளிக்கு ரூ.50,000 வீதம், 100 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கும் திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக விடியல் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையக தொகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு கறவை மாடுகளின் மூலம் உற்பத்தியாகும் பாலினை ரூ.35-க்கு நேரடியாக கொள்முதல் செய்து, அதிலிருந்து கிடைக்கும் லாபமானது மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக 2 கறவை மாடு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.5,000- க்கு மேல் அதிக லாபம் கிடைக்கின்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர், திலகராஜ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், காவலாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர், மாலதி சுரேஷ், ஆலங்குளம் கனரா வங்கி மேலாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி விவசாயி, நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதை பார்த்துக்கொண்டிருந்தார்.
- இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி(வயது 33). விவசாயி. இவரது மனைவி ராமலெட்சுமி.
முத்துமாரிக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. அங்கு நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை முத்துமாரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.
இந்நிலையில் இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் முத்துமாரி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், முத்துமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.