search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol bottles"

    • ஆட்டோவில் 1100 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தீ மிதி திடல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது.

    போலீசாரை பார்த்ததும் அதனை ஓட்டி வந்த வெளிப்பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அதில் 1100 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய சேர்ந்த திலிப்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனிடையே இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பார்வையிட்டார்.

    கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

    இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

    புகார் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • அவினாசி போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபான பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில அவினாசியை அடுத்து நரியம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அன்னூரை சேர்ந்த நஞ்சப்பன் மகன்பாக்யராஜ் (வயது41) ,அ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயன் மகன் சூரியதேவன் (23) என்பதும் தெரியவந்தது.அவர்கள் வந்த வாகனத்தை சோதனையி ட்டபோது மதுப்பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. அவர்கள் அவினாசியை அடுத்து கருவலூரில் டாஸ்மாக் கடையில் 165 மதுபான பாட்டில்கள் வாங்கி அதை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபான பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • கரூர் மாவட்டத்தில் 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
    • கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 90க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்கள விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசாரும், அந்த பகுதி காவல் நிலைய போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கரூர், குளித்தலை சின்னதாராபுரம், மாயனூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 70 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் மில்லி லிட்டரின் அளவு 12,600 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


    • காதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
    • இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    தாராபுரம்:

    பி.ஏ.பி.,இரண்டாம் மண்டல பாசனத்துக்காக தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பி.ஏ.பி.பிரதான வாய்க்கால்களில் கோழிப் பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் செத்துப்போன கோழிகளைக் கொண்டு வந்து போடுவதும், இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

    இந்நிலையில், பி.ஏ.பி.,வாய்க்காலில் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாக மிதந்து வருவது விவசாயிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குண்டடம் அருகே காணிக்கம்பட்டி அருகே பாயும் நந்தவனம்பாளையம் கிளை வாய்க்காலில் திடீரென ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் குவியல்குவியலாக மிதந்து வந்தன.

    இது குறித்து குண்டடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: -சமீப காலமாக பிஏபி. வாய்க்கால் என்பது கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. தண்ணீரில், செத்த கோழிகளை சாக்குகளில் கொண்டு வந்து வீசிச் செல்வதால் அந்த கோழிகள் அழுகிப் போய் துா்நாற்றத்துடன், விவசாய வயல்களுக்குள் வந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆயிரக்கணக்கான காலி மது பாட்டில்கள் உடைந்து, அதன் கண்ணாடிச் சிதறல்கள் வயல்களுக்குள் வந்து விவசாய வேலை செய்வோரின் கால்களை பதம் பாா்க்கும் நிலை உள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு, பிஏபி. வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #LSPolls
    சென்னை:

    பண்டிகை, திருவிழா காலங்களில் மதுவிற்பனை அதிக அளவில் இருக்கும்.

    தேர்தல் காலங்களிலும் மதுவிற்பனை சூடுபிடிக்கும். மது குடிப்பவர்களால் அடிதடி, தகராறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    எனவே இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மதுபாட்டில்களை ஸ்டாக் வைப்பதற்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய கட்டுப்பாட்டின்படி ஒருவர் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம் போன்ற மது பாட்டில்களை வாங்க சென்றால் அவர் 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 2 பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதுபோல் 650 மில்லிலிட்டர் அளவுகொண்ட 4 பீர் பாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும்.

    தற்போது 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 12 மதுபாட்டில்களை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். இனி இதுபோன்ற 4 மதுபாட்டில்களை மட்டுமே வைத்துக் கொள்ளமுடியும். குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட 12 ஒயின் பாட்டில்களை வீட்டில் வைக்கலாம்.

    உயர் ரக மதுபானங்கள் வாங்குவோருக்கு ஒரே நேரத்தில் 5 முழுபாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும். இவர்களுடைய விவரங்கள் அட்டை எண் ஆகியவை பதிவு செய்தபிறகே இதை வாங்கலாம். வழக்குப்பதிவு நெருங்கும்போது இந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகும். வழக்குப்பதிவு நாளில் மதுக்கடைகள் மூடப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. மதுவிற்பனை கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மதுபான விற்பனை, இருப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தல் போன்றவற்றை கண்காணிப்பார்கள். இந்த தகவல்களை டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #LSPolls
    திருத்துறைப்பூண்டி அருகே கணவர் வாங்கி குடித்த காலி மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சியில் டாஸ்மாக் கடை இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த குடிமகன்கள் திருத்துறைப்பூண்டிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து குடிக்கின்றனர்.

    இதற்கிடையே கொருக்கை பகுதியில் சிலர் தங்களது வீடுகளில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி பெண்கள், மற்றும் ஆண்கள் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கொருக்கை பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அவர்கள் தங்களது வீடுகளில் கணவர்கள் வாங்கி குடித்த காலி மதுபாட்டில்களை சேகரித்து கொண்டு பொது இடத்தில் வைத்து உடைத்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரும் மதுபாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனையடுத்து வீடுகளில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்ற அதே பகுதியை ஜெயலலிதா (38), கலா(48), ராணி (47), மற்றும் திவாகரன் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×