என் மலர்
நீங்கள் தேடியது "Alexander Zverev"
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.
- கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 22-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.
இதில் ஸ்வெரேவ் 6-4, 6-2, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாபோவுடன் மோதுகிறார்.
அதுபோல டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா), மார்கோஸ் ஜிரோன் (அமெரிக்கா) நிக்கோலஸ் ஜாரி (சிலி) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஓசியன் டோடினை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
- சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
- எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருப்பவரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த 28-ம் நிலை வீரரான டிமிட்ரோவை எதிர் கொண்டார்.
இதில் சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதுகிறார்.
எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார். 23 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 4-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), 6-வது வரிசையில் உள்ள ஹோல்கர் ருனே (டென்மார்க்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) ஹாதத்மையா (பிரேசில்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டி நடந்தது.
- இதில் இத்தாலி வீரர் பெரெட்டினி, ஜெர்மனி வீரர் ஸ்வரேவை தோற்கடித்தார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.
இதில் பெரெட்டினி 6-3, 7-௬ (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது.
- காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் மோதினர். இதில் ஸ்வெரெவ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட்டை சின்னர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடந்த 3 செட்டை அலெக்சாண்டர் 6-2 என்ற கணக்கிலும் 4-வது செட்டை சின்னர் 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினர். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை அலெக்சாண்டர் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதன்மூலம் 6-3, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.
- கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
- அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.
- ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் போராடி வென்றார்.
- ஜோகோவிச், காஸ்பர் ரூட் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்லோவோக்கியா வீரர் லூகாசுடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை லூகாஸ் 6-3, 6-4 என கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் 4-வது 7-6 (7-5) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் ஸ்வரேவ் 7-6 (10-7) என போராடி வென்றார்.
இறுதியில் ஸ்வரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5), 7-6 (10-7) என கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டி சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றது.

மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை ரூட் கைப்பற்றினார். இறுதியில் ரூட் 6-3, 6-7, 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்றார்.
- முதல் இரு செட்களை அலெக்சாண்டர் ஸ்வரேவ் வென்றார்.
- மூன்றாவது செட்டை கார்லோஸ் அல்காரஸ் போராடி கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 1-6, 3-6, 7-6 (7-2), 4-6 என்ற செட் கணக்கில் ஸ்வரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் யாஸ்ட்ரீம்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நோஸ்கோவாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஷெங், ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இதில் ஷெங் 6-7 (4-7), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 2வது அரையிறுதியின் முதல் 2 செட்டை ஸ்வரேவ் எளிதில் வென்றார்.
- அடுத்த 3 செட்களை மெத்வதேவ் போராடி கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட ஸ்வரேவுடன் மோதினார்.
முதலில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த 3 செட்களையும் சிறப்பாக ஆடி கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், மெத்வதேவ் 5-7, 3-6, 7-6 (7-4), 7-6 ( 7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், இத்தாலி வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.
- கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.
- இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இதில் முன்னணி வீரர்களின் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்து விளையாடினார்கள். ஆனாலும் கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.
இறுதியில் அவர் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 21 வயதில் க்ளே, கிராஸ் அண்ட் ஹார்ட் எனற மூன்று தளத்திலும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நபர் கார்லோஸ் அல்காரஸ் ஆவார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டில் விம்பில்டன் ஃபைனல் பட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு யூ.எஸ் ஓபன் ஃபைனல் பட்டத்தையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜோகோவிச் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிளேவியோ கோபோலியை வீழ்த்தினார்.
- மற்றொரு ஆட்டத்தில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்- டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), இத்தாலியின் பிளேவியோ கோபோலி உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் பிளேவியோ கோபோலியை எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்- டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6(6), 2-6, 7-6(2) என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பெல்ஜியத்தின் டேவி கோபின் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் கோபின் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் டேவிட் கோபின், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை சந்திக்கிறார்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் கைரன் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அமெரிக்காவின் தியாபேவை 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ், இத்தாலியின் முசெட்டி உடன் மோதுகிறார்.