search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ammapettai"

    • சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஜோதிகண்ணன் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    இதையடுத்து சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலைமதியழகன் வரவேற்புரை ஆற்றினார். கணபதி, பழனியப்பன், மகாபாண்டியன், அங்கப்பன், முரளி, ஞானசேகரன் மற்றும் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். குமார், ஸ்ரீராமன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு இன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் குதிரைக்கல் மேடு. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி மக்களுக்கு காடப்ப நல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லையாம். மேலும் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சும் நிற்பதில்லையாம். இதை கண்டித்தும் குடிநீர் சீராக வழங்க கோரியும் மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் குதிரைக்கல் மேட்டில் உள்ள பவானி- மேட்டூர் ரோட்டில் காலி குடங்களுடன் இன்று காலை 6.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் விரைந்தனர். மேலும் பஞ்சாயத்து செயலாளர் கணேசனும் சென்றார். அவர் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் குடிநீர் குழாய் உடைந்து விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அம்மாப்பேட்டை அருகே தீயில் கருகிய மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரப்ப கந்தசாமி தெருவை சேர்ந்தவர் சுசிலா (வயது 80). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டில் உள்ள அடுப்பில் வைத்து பால் காய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த தீ, அவரது சேலையில் பிடித்துக் கொண்டது. இதனால் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த காயம் அடைந்த சுசிலாவை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்ட சுசிலாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுசிலா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே திருக்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், இவரது மகள் சந்தியா. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று சந்தியா தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் மாயமாக விட்டார்.

    இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபோட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஜவுளி எடுக்க சென்ற மணப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை களக்காட்டை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் லதா (வயது23).

    இவருக்கும் அதே பாலமலை பகுதி திம்பம்பதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் தமிழரசன் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது.

    திருமணத்தையொட்டி புதிய ஜவுளி வாங்க இருவர் வீட்டாரும் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூருக்கு சென்றனர். அவர்களுடன் மணப்பெண் லதாவும் ஜவுளி எடுக்க சென்றார்.

    ஜவுளி கடையில் உறவினர்கள் தங்களுக்கு பிடித்த புதிய துணிகளை தேர்வு செய்து வாங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மணமகளை தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை. அவர்களுடன் வந்த புதுப்பெண் லதா திடீரென மாயமாகி விட்டார்.

    இதனால் உறவினர்களிடையே பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. கடை உள்ளேயும், வெளியேயும் ஓடி வந்து தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இது குறித்து புதுப்பெண்ணின் தந்தை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுப்பெண் லதாவை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு யாருடனும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் மாயமாகி விட்டாரா? என்ற பல்வேறு சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×