என் மலர்
நீங்கள் தேடியது "Andhra"
- ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
- ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 98-120 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 55-77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா
ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 62 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
அதேநேரம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 62 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி என்பதில் பா.ஜ.க. மற்றும் பி.ஜே.டி. இடையே கடுமையான போட்டி இருக்கும். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இன்றைய கள நிலவரத்தை பொறுத்த வரையில் ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை. ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை. எனவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
- பவன் கல்யாணை ஆதரித்வர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி 100 முதல் 120 இடங்களில் வெற்றி பெறுவார் என புரோக்கர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பந்தயம் கட்டினர்.
இதற்கு ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
50 முதல் 60 இடங்களை பெறுவார் எனவும் 68 முதல் 78 இடங்கள் வருவார் என மொத்தம் ரூ. 2 ஆயிரம் கோடியை தாண்டி பந்தயம் சென்றது. ஆனால் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி தோல்வி குறித்து யாரும் பந்தயம் கட்ட வில்லை.
இதேபோல் பிதாபுரத்தில் பவன் கல்யாண் வெற்றி பெறுவார் எனவும் தோல்வி அடைவார் எனவும் ரூ. 200 கோடிக்கு மேல் பந்தயம் கட்டினா். பவன் கல்யாணை ஆதரித்து பணம் கட்டியவர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.
ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நம்பி பணம் கட்டியவர்கள் ரூ. 2 ஆயிரம் கோடி வரை பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
- சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும்.
- அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும்.
பிரிவினை மறு சீரமைப்பு சட்டம் 2014-ன் படி அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
- ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
- மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.
ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.
ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.
- சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைநகர் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமராவதி சுற்றுசாலைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கட்டப்படும் வீட்டு வளாகங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை பார்வையிட்டார்.
ஏற்கனவே அமராவதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பணிகளையும் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பதவியேற்றதும் போல வரம் திட்டம் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மீண்டும் கொண்டு வந்து செயல்படுத்தவும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை இடிக்க மீண்டும் நோட்டீஸ்
- மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்துவிட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், தாடேபள்ளியில் அரசு அனுமதி யின்றி கட்டப்பட்டு வருவதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நேற்று அதிகாலை அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சிறிது நேரத்தில் விசாகப்பட்டினம் அடுத்த பெண்டாடா பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதாக ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு விசாகப்பட்டினம் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீசில் விசாகப்பட்டினம் மாநகராட்சி பெருநகர குழும ஆணையத்தின் அனுமதியின்றி கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி அலுவலகம் இடிக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், `புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.
மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்து விட்டது. இதற்காக உயர் சார் காங்கிரஸ் கட்சி தலை வணங்காது. எதிர்த்து போராடும் இந்த மிரட்டல் வன்முறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்த தவறான செயல்களை கண்டிக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதை படிவங்கள் உள்ள இடத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- நெருப்புக்கோழி முட்டைகள் இருந்த அடையாளங்களும் அப்படியே உள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் புதை படிவங்கள் உள்ள இடத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆவின் போது 41 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழி கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கூட்டில் 9 முதல் 11 நெருப்புக்கோழி முட்டைகள் இருந்த அடையாளங்களும் அப்படியே உள்ளன.
இதன் மூலம் தென் இந்தியாவில் நெருப்புக்கோழிகள் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. தொடர்ந்து தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- இரு மாநிலங்களுக்கும் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.
- பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாக தீர்க்க வேண்டியது அவசியம்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இரு மாநிலங்களுக்கும் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்திரபாபு நாயுடு தெலுங்கானா காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவேந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில் நமது மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாக தீர்க்க வேண்டியது அவசியம்.
வருகிற 6-ந் தேதி பிற்பகல் சந்தித்து பேச விரும்புகிறேன். இந்த சந்திப்பு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என நான் நம்புகிறேன்.
மேலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு பரஸ்பர நன்மைகளையும் பயக்கும் தீர்வுகளை அடைய நாம் இருவரும் சேர்ந்து திறம்பட ஒத்துழைக்க முடியும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது தெலுங்கானா முதல்-மந்திரி ரேவேந்த் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். அவர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்தார்.
மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு ரேவந்த் ரெட்டி மாநிலத்தின் வளர்ச்சிக்காக நற்பெயரையும் பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் டெல்லிக்கு சென்ற போது ஜேபி நட்டா பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்தார்.
பிரதமர் மோடியை தனது மூத்த சகோதரர் என அழைத்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைவரிடமும் நட்புறவை வளர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சந்திரபாபு நாயுடு அழைப்பிற்கு ரேவந்த் ரெட்டி சம்மதம் தெரிவிப்பார் என கூறப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் முதல்-மந்திரியை சந்திக்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
- முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.4000 ஆக உயர்த்தி உத்தரவுட்டார்.
- தந்தையை இழந்த சிறுவர்களின் கல்வி செலவையும் ஏற்றார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
மாதம்தோறும் வீடுகளுக்கே உதவி தொகை வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டத்தை நேற்று அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது குண்டூர் மாவட்டம் மங்களகிரி பகுதியில் ஒரே வீட்டில் முதியவரும் அவருடைய விதவை மகளும் வசித்து வருகின்றனர்.
அவரது வீட்டுக்கு சந்திரபாபு நாயுடு சென்றார். அவர்கள் சந்திரபாபு நாயுடுவை வரவேற்று அவர்கள் டீ கொடுத்தனர். அதை வாங்கி குடித்த சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.
அப்போது அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் ஏழ்மை காரணமாக வீடு கட்ட முடியவில்லை எனவே வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சந்திரபாபு நாயுடு 3.8 சென்ட் நிலத்தில் வீடு கட்டி தரப்படும் என உறுதி அளித்தார். மேலும் முதியவரின் மகளின் 2 மகன்கள் தந்தையை இழந்த சோகத்தில் நின்று கொண்டிருந்தனர்.
சந்திரபாபு நாயுடு சிறுவர்களை அரவணைத்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுடைய கல்விச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தார். இதனை கேட்டதும் அவர்கள் கண்ணீர் மல்க சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவித்தனர்.
- போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது.
போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக சினிமா துறையை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக டிக்கெட் விலை உயர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் முன்னணி நடிகர்கள் 2 குறும் படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும்.
இந்த 2 குறும்படங்களும் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா டிக்கெட் விலை உயர்த்த நடிகர்கள் விழிப்புணர்வு படங்களில் நடிக்க வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
- பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
- குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாக பண்ணையார் கூறியுள்ளார்
கர்நாடகாவின் தும்கூரு நகரைச் சேர்ந்த சகோதரியின் 11 வயது மகளை விற்று பெண் ஒருவர் தனது கடனை அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் இப்போது மகளை திருப்பி அழைத்துசெல்ல தாய் வந்தபோது அவ்வூர் பண்ணையாரிடம் வாங்கிய தனது ரூ.35,000 கடனை அடைப்பதற்காக சகோதரி தனது குழந்தையை அவரிடம் விற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உரைத்தார். அந்த நிலக்கிழார், 11 வயது சிறுமியை வீட்டு வேலைகள் செய்யவைத்து கொடுமைஇப் படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் தாய் வந்து கேட்டும், தான் குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாகவும், தனது பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை அழைத்துசெல்லும்படி கூறியுள்ளார். இதனால தாய் சென்று போலீசில் புகார் அளிக்கவே, குழந்தையை மீது போலீசார் தாயுடன் அனுப்பி வைத்தனர் இதுதொடர்பாக வழக்கு பதித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதா.
- கர்நாடகாவில் இருந்த இடம்பெயர விரும்பினால் விசாகப்பட்டினத்திற்கு வரலாம்.
கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் வழங்கியதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
சித்தராமையா இது தொடர்பான தகவல்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதனால் எக்ஸ் பக்க பதிவை நீக்கினார்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமும் (Nasscom- National Association of Software and Service Companies) எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாரா லோகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய ஏமாற்றத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. விசாகப்பட்டினத்திற்கு உங்களுடைய நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய அல்லது மாற்ற நாங்கள் வரவேற்கிறோம்.
உங்களுக்க சிறந்த வசதிகளை செய்து தருகிறோம். தடையில்லா மின்சாரம், கட்டமைப்புகள் உருவாக்கி தருகிறோம். உங்களுக்கு தேவையான அறிவு சார்ந்த ஆட்கள் தேர்வுக்கு எந்த தடையும் அரசு விதிக்காது. உங்களை வரவேற்க ஆந்திரா தயாராக உள்ளது. தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்!" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.