search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anesthesia"

    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலைதான் உள்ளது

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 அக்டோபர் மாதம் துவங்கி கடந்த ௯ மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா நகரம் போரினால் முற்றிலும் உருகுலைந்துள்ள நிலையில் தற்போது ராஃபா நகரின் மீது தனது கண்களை இஸ்ரேல் திருப்பியுள்ளது.

    அகதி முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமுதாயத்தின் கடும் எதிர்ப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஐ.நா மெனக்கிட்டு வந்தாலும் இஸ்ரேல் பிடி கொடுப்பதாக தெரியவில்லை.

    எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதால் காசா மற்றும் ராஃபா நகரத்தில் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணப் பொருட்களும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

     

     

    இந்நிலையில் ஐநாவின் பாலஸ்தீன நிவாரண பிரிவான UNRWA தலைவர் பிலிப் லசாரினி அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளார. அதாவது, காசாவில் சராசரியாக தினமும் 10 குழந்தைகள் தங்களது ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 10 குழந்தைகள் எனில் 260 நாட்களாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் சுமார் 2,000 குழந்தைகள் தங்களின் கால்களை இழந்துள்ளனர் .

     

     

    மேலும் தாக்குதலால் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலை இருப்பதாக பிலிப் லசாரினி தெரிவிக்கிறார். இந்த மொத்த போரிலும் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பல் மருத்துவமனையின் சிகிச்சை பெறவந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்ப்பாராத விதமாக வெட்டி விட்டார்
    • அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்தது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இதே மருத்துவமனையால் தனது தோழியும் பாதிக்கப்பட்டதாக x வலைதளப்பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.

    அதில். "ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல் சிகிச்சை பெற்ற ஒருவர் அதிக அளவு மயக்கமருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளியானது. இதே மருத்துவமனையில்தான் எனது தோழி ஒருவருக்கும் இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. பல் மருத்துவமனையின் சிகிச்சை பெற வந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்பாராத விதமாக வெட்டி விட்டார்.இது நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

    இருப்பினும் அதன் வடுக்கள் இன்னும் அவளது உதட்டில் உள்ளது. அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது. இதற்காக அவள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறாள்.மேலும் இதனை சரிசெய்ய வருங்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆகவே மீண்டும், மீண்டும் அலட்சியம் காட்டும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனையில் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
    • அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    • குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருடியதாக தெரிகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை ராமராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 80). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாசிலாமணி திண்டுக்க ல்லில் உள்ள மகன் பாண்டியராஜன் வீட்டில் தங்கியிருந்தார்.

    சம்பவத்தன்று நிலக்கோ ட்டையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வ தற்காக மாசிலாமணி திண்டுக்கலில் இருந்து பஸ்சில் புறப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அங்குள்ள மாதா கோவிலில் சிறிது நேரம் இளைப்பாற தங்கியுள்ளார்.

    அப்போது 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாசிலாமணியிடம் பேச்சு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே மாசிலா மணியின் நம்பிக்கையை பெற்ற அந்த பெண், தான் நீரேத்தானில் உள்ள நாகம்மாள் கோவில் பூசாரி வீட்டிற்கு குறிகேட்க செல்வதாக கூறியுள்ளார். உடனே மாசிலாமணியும் தானும் வருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து இருவரும் நீரேத்தானுக்கு புறப்பட்டு சென்றனர். யூனியன் ஆபீஸ் ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே சென்றபோது அந்த பெண் மாசிலாமணிக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறை கொடுத்ததாக தெரிகிறது. அதை குடித்த மாசிலாமணி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனே அந்த பெண், மூதாட்டி அணிந்திருந்த இருந்த 5 பவுன் நகை, பையில் வைத்திருந்த ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு மாயமானார். சில மணிநேரம் கழித்து விழித்தெழுந்த மாசிலா மணி, தான் அணிந்திருந்த நகை மற்றும் பையில் வைத்திருந்த பணம் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னுடன் வந்த பெண்ணை தேடிப்பார்த்த போது அவர் மாயமாகி விட்டது தெரியவந்தது. இதனால் தனது நகை மற்றும்ம பணத்தை அந்த பெண் தான் திருடி இருக்கவேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மாசிலாமணியுடன், ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

    அந்த பெண் தான் தன்னிடம் பேச்சு கொடுத்த தாகவும், மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை தந்ததாகவும் மாசிலாமணி அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சியில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற பெண்ணின் முகம் தெளிவாக தெரிவதால் விரைவில் அவர் சிக்கிவிடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×