என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ani festival"
- நேற்று இரவு 8.30 மணிக்கு பெரியபுராணத்தில் அற்புதங்கள் என்ற தலைப்பில் பொன்சங்கர் சொற்பொழிவு நடைபெற்றது.
- நாளை (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவில் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவில் ஆனித்திருவிழா நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. அன்று இரவு ஆலடி முத்துச்செல்வன் குழுவினரின் நவீன வில்லிசை நடைபெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானம்
நேற்று இரவு 7.30 மணிக்கு அம்மன்களுக்கும், சுவாமிகளுக்கும் மாக்காப்பு சாத்துதல், 8.30 மணிக்கு பெரியபுராணத்தில் அற்புதங்கள் என்ற தலைப்பில் பொன்சங்கர் சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் சார்பில் நவீன வில்லிசை நடந்தது.
இன்று காலை 7.30, பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதான குழுவினர்கள் சா ர்பில் பா. சிவந்தி ஆதித்தனார் திருமண மணடபத்தில் அன்னதானம் நடைபெற்றது. 10.30 மணிக்கு பால்குடம் எடுத்து நகர்வலம் வருதல் நடைபெற்றது.
மாணவருக்கு பரிசுகள்
தொடர்ந்து மாலை 5 மணிக்கு உறவின் முறை நந்தனவனத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து சாமிகளுடன் கோவில் மேளம், நகர்வலம் சுற்றி கோவில் சேர்தல், இரவு 8 மணிக்கு சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் கும்பம் ஏற்றுதல், 8.30 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், 9 மணிக்கு சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் மாலை சாத்துதல், 10 மணிக்கு மாவிளக்கு எடுத்து நகர்வலம் வருதல், 12 மணிக்கு சாமக்கொைட தீபாராதனை நடைபெறுகிறது.
நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பொங்கலிடுதல், 10.30 மணிக்கு வில்லிசை, மாலை 3.30 மணிக்கு தீபாராதனை மற்றும் இரவு 9 மணிக்கு 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவில் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
அதன்படி பிளஸ்-2, பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்ற உறவின்முறை 6 மாணவ - மாணவிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு 8 கிராம் தங்கம், 2-ம் இடம் பெற்றவர்களுக்கு 4 கிராம் தங்கம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து இந்து நாடார் இளைஞர் குழுவினர் வழங்கும் 43-ம் ஆண்டு கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனி திருவிழாவை முன்னிட்டு ஊர் முழுவதும் மின் விளக்கு களால் அலங்க ரிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறக்காவலர் குழு தலைவர் புதுராஜா நாடார், செயலாளர் ராஜா நாடார், பொருளாளர் தருமராஜ் நாடார், துணைத்தலைவர் தங்கராஜ் நாடார், துணைச் செயலாளர் சவுந்திரபாண்டி நாடார், செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், ஆறுமுகச்சாமி நாடார், பொன்ராஜ் நாடார், செல்வக்குமார் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது.
- நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
நெல்லை:
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது.
516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 7.40 மணிக்கு சுவாமி -அம்மாள் பூக்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. ஆனித்திருவிழாவை–யொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை )நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு நடக்கும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் நாளை கொடியேற்றம் நடைபெறுவதையொட்டி கொடிமரம் மற்றும் கோவில் வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பந்தல் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் தேரோட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்