என் மலர்
நீங்கள் தேடியது "arms"
- மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது.
- இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிக்கிறது.
லக்னோ:
பல்வேறு தேவைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் வெப்பநிலை 45 முதல் 50 டிகிரி செல்சியசை தொட்டு சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மரங்கள் நடுவதை ஊக்குவிக்க உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேணும் என்றால் 10 மரத்தை நடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
விண்ணப்பதாரர்கள் மாவட்டத்திற்குள் எங்கும் தனியார் நிலத்திலோ அல்லது பொது நிலத்திலோ 10 மரங்களை நடவேண்டும். விண்ணப்பத்தை தோட்டத்திற்கான புவி-குறியிடப்பட்ட சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆயுத உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் இருந்த அனைத்து நிபந்தனைகளுக்கும் கூடுதலாக புதிய நிபந்தனை பொருந்தும்.
இந்த நடவடிக்கை குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகளின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இது ஒரு முக்கியமான படியாகும். இந்த முயற்சி நிர்வாகப் பொறுப்புகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பேணுவதில் குடிமக்களின் கூட்டுக் கடமையையும் வலுப்படுத்துகிறது என தெரிவித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
- பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
தேர்தல் நாள் அன்று ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேச கூட்டணியில் உள்ள ஜனசேனா, பா.ஜ.க கட்சியினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
தேர்தல் முடிந்த பின்னரும் பல்நாடு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வன்முறையை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வன்முறை ஏற்படும் இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் புலான்ஷர் பகுதியை சேர்ந்தவர் அமித். கடந்த 21 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, வீடு திரும்பிக் கொண்டிருந்த அமித்-ஐ காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, அவர் வந்த காரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்று கூறி அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அமித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சம்பவத்தன்று அமித் வந்த காரை போலீசார் நிறுத்துவது, அதன்பிறகு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிகர்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வாலிபர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் அவுட்போஸ்ட் இன்சார்ஜ், சிகர்பூர் காவல் நிலைய இன்சார்ஜ் மற்றும் இரு கான்ஸ்டபில்கள் என மொத்தம் நான்கு போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்தார்.