search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arpattam"

    குன்னூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குன்னூர்,

    குன்னூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து குன்னூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வி.பி.தெருவில் நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ராகுல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் போராட்டம்நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
    • அனைத்து கிராமக் கோயில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

    கோவை,

    கோவை சிவானந்தா காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கிராம கோவில் பூசாரிகள் பேரவை கோட்ட அமைப்பாளர் ஜெகநாதன் வரவேற்றார்.

    விஷ்வ ஹிந்து பரிசத் கோவை கோட்ட தலைவர் ஹரி பிரசாத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க அரசு தன் தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்குறுதியாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ. 2000 வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இன்றுவரை நிறைவற்றப்படவில்லை. கிராம கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஊக்கத்தொகை ரூ.10ஆயிரம் வழங்கப்பட வேண்டும். செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தைச் சீர்படுத்தி, விரைவாகச் செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராமக் கோயில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவிற்குப்பின் அவரது மனைவிக்கு அத்தொகை வழங்கப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் .

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பூசாரிகள் கலந்து கொண்டனர்.

    • 16 நலவாரியங்களுக்கும் உயர்த்த வேண்டும்.
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கோவை

    கோவை மாவட்டத்தில் சி.ஐ.டி.யு.டன் இணைக்கப்பட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 'கட்டுமானம் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நல வாரியத்தில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள உதவி தொகைகளை மற்ற 16 நலவாரியங்களுக்கும் உயர்த்த வேண்டும். மாதம் தோறும் ஓய்வூதிய தொகையை முறையாக வழங்க வேண்டும். 5 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். மாதம் தோறும் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.' என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • த.மா.கா. யுவராஜா பேட்டி அளித்தார்.
    • 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளோம்.

    கோவை:

    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சொத்து வரி, மின்கட்டணம், பால் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் அணி தெற்கு மாவட்ட தலைவர் கார்த்தி கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி. வாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று 18 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. அவர்கள் கூறிய வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு ஆயிரம் உதவித்தொகை, விவசாய கடன் கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை முன் வைத்து தான் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர்.

    ஆனால் இந்த 18 மாதங்களில் அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பால் விலை, மின் கட்டணம் ,சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி மக்களிடம் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை கண்டித்து நாங்கள் இதுவரை தமிழகத்தில் 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளோம். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எத்தனை லட்சத்தில் வாட்ச் கட்டினால் என்ன, அவர் என்ன ஆட்சி பொறுப்பிலா இருக்கிறார். உயர்த்தப்பட்ட கட்டணங்களை மறைப்ப தற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் தி.மு.க மக்களை திசைத் திருப்பி வருகிறது. கோவையில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தி.மு.க. பொறுப்பேற்றதும் அந்தத் திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர். மேலும் புதிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    சூலூர்,

    கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சூலூரில் நடந்தது. தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம் பேசியதாவது:-

    டிசம்பர் 21-ல் விவசாயிகளின் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தன்று வழக்கமாக சூலூரில் இருந்து வையம்பாளையம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    ஆனால் மாநில அரசு தற்போது இலவச மின்சாரத்துக்கு ஆதார் விவரங்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    அதோடு மட்டுமல்லாமல் அன்னூர், வாரப்பட்டி, தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்கிறது. இது முற்றிலும் விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இதனை கட்சி சார்பற்ற விவசாய சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

    விவசாயிகள் சஙகம் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் விவசாய நிலங்களை அழிப்பதை எதிர்க்கிறது. பாமாயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் வெளிநாட்டு விவசாயிகள் பலன் அடைந்து வரு கின்றனர்.

    அதற்கு பதிலாக உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தேங்காய் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    தென்னை வாரியத்தை உடனடியாக மாநில அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு நினைவு தினமான டிசம்பர் 21-ந் தேதி சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • மின் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    அரவேணு:

    தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் மற்றும் மின்சார திருத்த மசோதாவினை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன் பகுதியாக கோத்தகிரி நெடுகுளா உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இடை கமிட்டி செயலாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், கட்சியின் இடைக் குழு உறுப்பினர் சுந்தர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடை குழு செயலாளர் பகத்சிங், இந்திய மாணவர் சங்க செயலாளர் சச்சின் மற்றும் பல தோழர்கள் பங்கேற்று உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    • ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
    • ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    பொள்ளாச்சி,

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆழியாறு விவசாயிகள் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டி.எம்.சி. நீரும், கேரளத்திற்கு 19.55 டி.எம்.சி. நீரும் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். பிஏபி திட்டத்தில் தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டிய 30.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழகம் ஒரு ஆண்டு கூட முழுமை யாக எடுத்துக ்கொள்ளமு டியவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 டிஎம்சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் கடைக்கோடி பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசனம் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

    இந்தநிலையில், இங்கி ருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இன்று ஒட்டன் சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட கோரிஆழியாறு அணை பாசன விவசாயிகள் ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் இங்குள்ள 10 சட்டமன்ற தொகுதி விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், இதன் தாக்கம் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என விவசாயிகள் தெரிவி த்தனர். 

    ×