search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arres"

    • இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.
    • பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). இவரது மனைவி கீர்த்திகா (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கலைவாணன் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு ஊர் திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த கலைவாணன் தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டு உள்ளார். அப்போது கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்றும் அவர்கள் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து

    கலைவாணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

    • 4 ந் தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார்.

    உடுமலை :

    உடுமலை அருகே கொடுங்கியத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46) இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 4 ந்தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். இந்நிலையில் ஆண்டியூர் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் 2 ஆடுகளுடன் வந்த ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த செல்வராஜ்( 52) குஞ்சிபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (33) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்தான் மேற்கண்ட 2 ஆடுகளையும் திருடியது தெரிய வந்தது இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து ஆடுகளை மீட்டனர்.

    திருவள்ளூரில் மினிலாரியில் 2 டன் ரேசன் அரிசி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு பஸ், ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர். எனினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலிருந்து பெறப்பட்ட அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கவரப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சிரஞ்சீவி, மணி, தடா பகுதியை சேர்ந்த மதன் அனுப்பப்பட்டு பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    ×