என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arrest of teenagers"
- மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.
- தொழிற்சாலையில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பச்சமுத்து (வயது 58). இவர் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். தற்போது ஜவ்வரிசி ஆலை செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் தொழிற்சாலையில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பச்சமுத்து ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து மின் மோட்டாரை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வந்தார். இந்தநிலையில் அந்தபகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது ராசிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்ரம் (21), மற்றொருவர் முருகேசன் மகன் பெரியசாமி (30) என்பதும் இவர்கள் 2 பேரும் மின்மோட்டார் திருடியது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.
- 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
- சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர்.
கடலூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்கிஅழகன் (வயது 28). இவர் சிதம்பரத்திற்கு ஒரு சில பணிகளுக்காக வந்துவிட்டு மீண்டும் சீர்காழிக்கு செல்ல சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
அப்போது சக்திஅழகனின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் 3 வாலிபர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் 3 வாலிபர்களும் ஒமக்குளம் சுரேந்தர் (22), நாஞ்சலூர் சந்துரு (23), மடப்புரம் அன்புமணி (22) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்