என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arrested husband"
செய்யாறு:
செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவரது மனைவி நதியா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது மனைவி நதியாவிடம் உனக்கு இனிமேலும் குழந்தை பிறக்காது. எனவே இந்த வெள்ளை காகிதத்தில் கை எழுத்து போடுமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார். அதற்கு நதியா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து நதியாவின் மீது ஊற்றி தீவைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நதியாவை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்ைக்காக சென்னை அரசு ஆபத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நதியாவின் உறவினர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது32). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மரக்காணம் அருகே கீழ்பேட்டையை சேர்ந்த பூரணி (22) என்பவருக்கும் கடந்த 3.2.2017 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பூரணிக்கு பெற்றோர் போதுமான சீர்வரிசை வாங்கி கொடுத்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் பூரணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் ஞானசேகர், கொழுந்தனார் ரகுபதி, மாமியார் செந்தாமரை ஆகியோர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்தரவதை செய்து வந்ததால் பூரணி இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று ஞானசேகர், ரகுபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர். செந்தாமரையை தேடி வருகிறார்கள். புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த சம்பவத்தில் திருமண நாளில் கணவர் மற்றும் கொழுந்தனார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரிய கள்ளியூர் காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 47). விவசாயி டிப்பர் லாரி வைத்தும் ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி விஜயசாந்தி (24). கடந்த 1 ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஒரு கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் தர்மன் சந்தேகப்பட்டார். மனைவி விஜயசாந்தி அடிக்கடி தனது செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதனால் சந்தேகத்தை உறுதிபடுத்திய கணவர் மனைவியை கண்டித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு வெளியே சென்று விட்டு இன்று அதிகாலை தர்மன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி விஜயசாந்தி செல்போனில் பேசி கொண்டிருந்தாராம்.
இதனால் கடும் கோபம் அடைந்த தர்மன் மனைவியை திட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தர்மன் வீட்டில் உள்ள தோட்டத்தில் களை எடுக்கும் சிறிய மண்வெட்டியால் தலை மற்றும் கழுத்தில் ஓங்கி வெட்டினார்.
இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விஜயசாந்தி பரிதாபமாக இறந்தார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் போலீசார் கொலையாளி தர்மனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
விஜயசாந்தி எதற்காக கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவரது மனைவி சரளா(30) இவர்களுக்கு திருமாணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு பிறகு ஆறுமுகம் தனது மனைவியுடன் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த பாளையங்கோட்டை வடக்குபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரளாவிற்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதன்பிறகு அவர் கர்ப்பம் ஆகவில்லை.
இதனால் ஆறுமுகம் சரளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக் கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தரையில் கிடந்த இரும்பு பைப்பால் சரளாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சரளாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சரளா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோழத்தரம் போலீசில் சரளாவின் தாய் சாரதாம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சோழத்தரம் போலீசார் ஆறுமுகம் மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தேனி:
போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசி (வயது 29). இவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவையில் வசித்து வந்தனர். பெண் குழந்தை பிறந்ததால் சிலம்பரசி குடும்பத்தார் கணவன்-மனைவியை மீனாட்சிபுரத்துக்கு அழைத்து வந்து 25 பவுன் தங்க நகை, குழந்தைக்கு 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணம் கொடுத்து சிலம்பரசனுக்கு கடை வைத்து கொடுத்தனர்.
கணவன்-மனைவி துரைராஜபுரத்தில் வசித்து வந்தனர். சிலம்பரசின் தங்கை சிவமணி திருமணத்துக்காக நகைகளை அடமானம் வைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தற்போது மேலும் ரூ.2 லட்சம் கடனாக வாங்கி வருமாறு சிலம்பரசியை கணவர் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே சிலம்பரசன் குடும்பத்தினர் சித்ரவதை செய்ய தொடங்கினர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சிலம்பரசி புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
இதேபோல் கம்பம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சத்யபிரியா (27). இவருக்கும் மஞ்சள் குளத்தைச் சேர்ந்த சிவனேசன் (29) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டது.
தற்போது சிவனேசன் மேலும் ரூ.4 லட்சம் வரதட்சணையாக வாங்கி வருமாறு சத்ய பிரியாவை கொடுமைபடுத்தியுள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சிவனேசன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). லாரி டிரைவர். இவருடைய மனைவி நிர்மலாதேவி (27). இவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், அவரது தந்தை செல்வராஜ், தாய் ராணி, சகோதரிகள் சுந்தரி, முத்துலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் லாரி டிரைவர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே சுந்தராம்பட்டியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி என்ற சரண்யா (வயது27). இவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஓட்டல் நடத்தி வந்த சிவக்குமாருக்கும், சரண்யாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரண்யா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் சரண்யா புகார் கொடுத்துள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நிலையில் அவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து நான் கேட்டபோது 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான வீட்டை என் பெயருக்கு எழுதி தந்தால் உன்னுடன் வாழ்கிறேன் என மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிவக்குமார், அவரது தந்தை சிவனாண்டி, தாய் வைரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
பாலையம்பட்டி:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி குமரன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் மாரி (வயது42). இவரது மனைவி ரோகமணி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் நடத்தையில் மாரி சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
கடந்த 14-ந்தேதியும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மாரி, மனைவியை அடித்து உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த ரோகமணி சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ரோகமணி இறந்தார். இந்த நிலையில் மாரி தாக்கியதால் தான் ரோகமணி இறந்ததாக அவரது தந்தை முத்து, அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் ரோகமணியை மாரி தாக்கியதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பில் அவர் இறந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் இன்று காலை மாரி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). நிலதரகர். இவருடைய மனைவி ராஜகிருஷ்ணவேணி (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் செண்பகதேவிக்கு திருமணம் செய்து வைக்க, ராஜகிருஷ்ணவேணி தனது சொந்தத்தில் உள்ள ஒரு பையனை பார்த்ததாகவும் அவர் கிராமப்புறத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில் சுகுமாருக்கு உடன்பாடு இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜகிருஷ்ணவேணி காலை 6 மணிக்கு வீட்டில் இருந்த சமையல் எண்ணெயை தனது உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தற்கொலை செய்து கொண்ட ராஜகிருஷ்ணவேணியின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சுகுமாரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் உதயாநகரை சேர்ந்தவர் ஜான்கென்னடி. கூலி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா செல்வி(வயது 51). இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஜான்கென்னடிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஜான்கென்னடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜான்கென்னடி அருகில் கிடந்த கம்பால் மல்லிகா செல்வியை சரமாரி தாக்கியுள்ளார். அப்போது இவர்களது மகன் ஜான்வாசிங்டன் தடுத்துள்ளார். அவரையும் ஜான் கென்னடி தாக்கியுள்ளார்.
இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மல்லிகா செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மல்லிகா செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜான் கென்னடியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் கென்னடியின் மகள் சோனியா என்பவரை சங்கரன்குடியிருப்பில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அங்கு கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோனியா கணவருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இது ஜான் கென்னடிக்கு பிடிக்கவில்லை. சோனியாவை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனைவியுடன் கூறி வந்துள்ளார். இதே போல் நேற்று இரவும் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கம்பால் தாக்கி மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்