என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arrrest"
- 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர்.
- கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போரூர்:
சென்னை, மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ் (வயது23). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு 8.30மணி அளவில் ராஜேஷ், மதுரவாயல் கந்தசாமி நகர் 5-வது தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டி சென்ற கும்பல் ராஜேசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும்,கோயம்பேடு துணை கமிஷனர் குமார், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கொலையுண்ட ராஜேசுக்கும், திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை நெற்குன்றம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் தங்கையின் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது சுரேசை, ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பீளமேடு பகுதியில், வீடு புகுந்து திருடிய வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பகல் நேரத்தில் பலூன் விற்பது போல் நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் மாதவன்(வயது52). தனியார் நிறுவன மேலாளர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப் பட்டது.
திருட்டு கும்பலை பிடிக்க, பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகீம் பாதுஷா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிர விசாரணை நடத்தி கோவை பீளமேடு பகுதியில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோட்டா லால்(வயது43), ராஜ்குமார்(25), ராம்பிரசாத்(27), பாபுலால்(25), சன்னி(25), கிஷன்லால்(42) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மாதவன் வீட்டில் புகுந்து பணம் திருடியது இவர்கள் தான் என்பது தெரியவந்தது.
கைதான 6 பேரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எங்கள் ஊரில் சரியாக வேலை கிடைக்காததால் கொள்ளையடித்து பணம் சம்பாதிப்பதற்காக ரெயில் மூலம் கோவை வந்தோம். பின்னர் ரெயில் நிலையம், வ.உ.சி. பூங்கா, பீளமேடு ஆகிய பகுதிகளில் இரவுநேரத்தில் தங்கினோம்.
பகலில் கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பலூன் விற்பனை செய்வோம். பின்னர் வீதி,வீதியாக சென்று பலூன் விற்பது போல பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவோம். வீடு புகுந்து திருடுவதற்கு முன்பாக அந்த வீதியில் 3 இடங்களில் ஆட்களை நிறுத்தி வைப்போம். பின்னர் பூட்டி இருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து எங்கள் கும்பலை சேர்ந்த 2 பேர் உள்ளே புகுந்து பணம்,நகையை திருடி வருவார்கள்.
கோவையில் பல வீடுகளில் புகுந்து அதிக அளவில் பணம், நகையை திருடிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டோம். முதல் திருட்டை சேரன்மாநகரில் நடத்தினோம். திருடிய பணத்தில் ரூ.10 ஆயிரத்தை மது குடித்து செலவழித்தோம். அதற்குள் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டோம். மீதம் உள்ள ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர்.
இவ்வாறு கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்