என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Art"
- தஞ்சை ஓவியக்கலையில் சத்தமின்றி சாதனை படைத்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஓவியர்
- ஓவியக்கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மணவாள அண்ணாநகரை சேர்ந்தவர் சி.காத்தான். இவர் தஞ்சை பெயிண்டிங் போர்டு தயாரிக்கும் பணியில் கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
சத்தமின்றி சாதனை படைத்து வரும் சி.காத்தான் பல கலைஞர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என கூறுகின்றார்.
இவரிடம் சென்னை, திருச்சி, செட்டிநாடு, கோயம்புத்தூர், ஹைதராபாத் போன்ற ஊர்களிலிருந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
இதன் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.3000லிருந்து பல லட்சம் வரை நீடிக்கிறது. சுத்த தங்கத்தில் தகடு செய்து வைப்பதால் தங்கம் விலை நிர்ணயித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.
பெரும்பாலும் கிருஷ்ணர், விநாயகர்,பெருமாள் படங்கள் தஞ்சை பெயிண்டிங்கில் தயாரிக்கின்றார். மேலும் இவர் தயாரித்துள்ள காமதேனு,நரசிம்மர் ஓவியங்கள் அவரது கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தனது கலை திறமையை அப்பகுதி இளைஞர்களுக்கு சொல்லி தருகின்றார்.
மேலும் அவருடன் 6 பெண்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெற்று தயாரிப்பு பணியில் உதவி செய்து வருகின்றனர்.
இவர் ஓவியங்களை புதுக்கோட்டையை சேர்ந்த ஓவியர் ராஜா பாலசுப்பிரமணியன் போன்றவர்களிடம் பயின்றுள்ளார்.
ஓவியத்தின் மீது ஆசையால் தனது வாழ்க்கை துணையாக ஓவிய ஆசிரியர் பேபி தமிழரசியை திருமணம் செய்துள்ளார். அவரும் இவருடைய கலை திறமைக்கு உதவியாக உள்ளார். இவரின் தஞ்சை பெயிண்டிங் ஓவியம் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ளது, புதுக்கோட்டை மக்களுக்கு மதிப்பை கூட்டி தரும் என்பதில் ஐயமில்லை.
தற்போது உள்ள நவீன உலகில் ஓவிய கலை நலிவடைந்து வரும் வேளையில் காத்தான் போன்ற ஓவியர்கள் தொடர்ந்து ஓவிய கலையை வளர்த்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு அரசு தன்னால் ஆன உதவி சிறுசிறு உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர் ஓவிய கலைஞர்கள்.
குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு 5 படங்களை தயாரிக்கிறார் காத்தான்.
தான் வருமானத்திற்காக இக்கலையை செய்ய வில்லை. ஓவிய கலையையில் முன்னணி நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தஞ்சை பெயிண்டிங் சி.காத்தான் ஆர்வத்துடன் கூறுகிறார். புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் நபர்களில் சி.காத்தானும் ஒருவர் என்றால் மிகையல்ல.
- சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.
- நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
சேலம்:
சேலம் நாச்சியப்பா தொழிற் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையமானது, தேசிய தொழிற்சார் பயிற்சி கழகம் புதுடெல்லி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஓராண்டு சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதுபோன்ற தொழிற் பயிற்சிகளை அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தவிர இதர நிறுவனங்களில் படிக்க வேண்டுமெனில் அதிகமாக பயிற்சி கட்டணம் செலுத்தவேண்டி வரும். நமது நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர
வேலை வாய்ப்பு ஏற்படுத்தி
தரப்படுகிறது. இப்பயிற்சி யினை நிறைவு செய்பவர்களு க்கு கப்பல் நிறுவனங்கள், ரெயில்வே துறை சமையலர், விமான துறை சமையலர், மத்திய, மாநில அரசு விடுதி சமையலர், உணவு உற்பத்தி துறை, மருத்து
வமனை சமையலர், நட்சத்திர ஓட்டல்களில் அதிக சம்ப ளத்தில் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டம் கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் கட்டபடவுள்ள புதிய கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
- கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்,
கடலூர்:
கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சிக் குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் ரூ.7 கோடியே 97.50 மதிப்பீட்டில் புதியதாக கட்டபடவுள்ள கலை மற்றும் அறிவியில் கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு குமராட்சி ஊராட்சிக்குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் 4.02 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 32 ஆயிரத்து 626 சதுர அடிகள் பரப்பளவில் அமைய உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சரவணன் , செயற்பொறியாளர் தொழில்நுட்ப பிரிவு கோட்டம் (தஞ்சாவூர்) பாலசுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டன
- சினிமா போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்க ஓவியங்கள் வரையப்படுகிறது
- விழிப்புணர்வு ஓவியங்களை ஓவியர்கள் தீவிரமாக வரைந்து வருகின்றனர்
கரூர்,
கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் உள்ள பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மாநகராட்சி கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களில் அரசியல் மற்றும் சினிமா பதாகைகளை ஒட்டுவதை தவிர்க்கவும், பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை காட்சிகள், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பெண் கல்வி, புகையிலை ஒழிப்பு, நெகிழி ஒழிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணியில் ஓவியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ –மாணவியர் படித்து வருகின்றனர்.
- அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் மண்ணூர் கிராமம் அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்திற்கு, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை சாலை போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படை வசதிகள் கிடைத்தது.
இந்த மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ
–மாணவியர் படித்து வருகின்ற னர். தலைமையாசிரியர் கதிர்வேல் உள்பட வெங்க டாஜலம், பா.சக்திவேல், நல்லுசாமி, ர.சரண்யா, லீலாவதி ஆகிய 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர். இதனால், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்திய வட்டார அளவி லான கலைத்திருவிழா குழு நடனப்போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவ–மாணவியர், கா.காவியா.
பொ.மாலதி.மு.ரஞ்சித்கு மார், மு.சந்ரு, த.வினோத், த.லோகேஸ்வரன், ஜெ.கோகுல்கிருஷ்ணா, ஆ.செல்லதுரை, பொ.சரத்கு மார் ஆகியோர் கொண்ட குழுவினர் முதலிடம் பிடித்து
மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதனையடுத்து, அண்மையில் மதுரையில் செளராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா நடனப் போட்டியில் பங்கேற்ற இப்பள்ளிக் குழுவினர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து போட்டியில் பங்கேற்ற குழுக்களை விட மிகச் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.
முதன்முறையாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு திரும்பிய மாணவ–மாணவியருக்கு, மண்ணுார் மற்றும் மாமாஞ்சி மலை கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து, மேள வாத்தியம் முழுங்க பாரம்பரிய முறைப்படி ஆரத்தியெடுத்து, மாலை யணிவித்து பொன்னாடை போர்த்தி அதிர் வேட்டு முழங்க வரவேற்பளித்து கெளரவித்தனர்.
மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கணித ஆசிரியர் சக்திவேல் மற்றும்
ஊக்குவித்த தலைமை யாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர். வட்டார, மாவட்ட, மாநில பள்ளிக்கல்வித்துறை உயரதி காரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- சேலம் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம் அளவில் கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
- கடந்த மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளை மரவனேரி தனியார் பள்ளியில் இன்று தொடங்கியது.
மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம் அளவில் கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்களை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை, பட்டிமன்றம் உள்ளிட்ட பல போட்டிகள் பள்ளி அளவில் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டன.
தற்போது வட்டார அளவில் வெற்றி பெற்று முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று முதல் 10-ந்தேதி வரை 4 நாட்கள் புனிதபால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணக்காடு நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுமலர் துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் இக்கலைத் திருவிழாவில் 207 வகையான போட்டிகளில் 15,365 மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அவர்கள், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், சேலம் மாநகராட்சி 29-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா குமரேசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க தலைவர் ஜோ கலைஞரின் நாட்டிய பள்ளி ஆசிரியை கிளாடி ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சத்திய பிரியா, ரெட்கிராஸ் அபி, கவிஞர் சரண், சுகுமார், வணிகர் சங்க கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி குழந்தைகள் பாரதியின் பாடல்களுக்கு நாட்டியம் ஆடி அனனவரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதில் 100-க்கனக்கான மாணவிகள் பங்கேற்றனர்.
பொற்றாமரை கலை-இலக்கிய அரங்கத்தின் 14-வது ஆண்டு தொடக்க விழா சென்னை, தியாகராயநகரில் நேற்று நடந்தது. விழாவுக்கு பொற்றாமரை தலைவரும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தலைமை தாங்கினார். சின்மயா மிஷன் பூஜ்யசுவாமி மித்ரானந்தா ஆசியுரை வழங்கினார்.
விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோருக்கு ‘நல்ல புரவலர்கள்’, பிரேமா நந்தகுமார், சுகி சிவம் ஆகியோருக்கு ‘நல்லறிஞர்கள்’, பின்னணி பாடகி வாணி ஜெயராம், சி.வி.சந்திரமோகன் ஆகியோருக்கு ‘நற்கலைஞர்கள்’ என்னும் கவுரவத்துடன் இந்த ஆண்டுக்கான ‘பொற்றாமரை விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் கே.பாண்டியராஜன், இல.கணேசன் இருவரும் இணைந்து விருதுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வாணிஜெயராம் கலந்துகொள்ள இயலாததால் அவருக்கு பதிலாக வக்கீல் சுமதி விருதை பெற்றுக்கொண்டார்.
எனவே கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டினைக் காக்க முடியும். இதனை முன்னெடுத்து செல்பவர்களை அடையாளம் கண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைப்பதற்காக பொற்றாமரை அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் நம் நாட்டின் மீது பூசப்படும் சாம்பலும் விலகிவிடும்.
இலக்கியம், கலை, பண்பாடு போன்றவை வளர்ந்தால் ஒரு சமுதாயம் தானாகவே வளர்ச்சி கண்டுவிடும். இதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் பொற்றாமரை. கடந்த 13 ஆண்டுகளாக மாதம் ஒரு கூட்டம் நடத்தி அதில் நம்முடைய மொழி, கலாசாரம், பண்பாடு, இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது 13 ஆண்டுகளை நிறைவு செய்து 14-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நல்ல புரவலர்கள், நல்லறிஞர்கள், நற்கலைஞர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சுதா சேஷய்யன் பேசினார். உன்னிகிருஷ்ணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தேசிய சிந்தனையுள்ள இலக்கிய ஆர்வலர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்