என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arumukaneri"
- திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
- நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்து விளை புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சிக்கு மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு பென்சிகர் தலைமை தாங்கினார். ஆலந்தலை துணை பங்கு தந்தை பாலன் முன்னிலை வகித்தார்.
வியாகப்பர் ஆலய பங்குதந்தை லெனின் டிரோஸ் மறையுரை ஆற்றினார். மடத்து விளை ஊர்நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2- வது நாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாவில் இளையோர் தினம், திருமணமானவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது. தொடர்ந்து அசனம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளார் மற்றும் மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- ஆறுமுகநேரி நகர தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர்களாக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நகர தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர தி.மு.க. செயலாளர் நவநீதபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசிபொன்ராணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினருமான ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் 8 பேருக்கு கனிமொழி எம்.பி. சார்பில் கைக்கடிகாரங்களை நவநீத பாண்டியன் வழங்கினார். தொடர்ந்து நடந்த உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன்இசக்கி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, துணை அமைப்பாளர் தயாநிதி பாண்டியன், சமூக வலைதள பொறுப்பாளர் நித்யா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் ரேவதி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குடியிருப்பு பகுதியின் தெற்கு சுற்றுச்சுவர் அருகே நேற்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் அங்கு போலீசார் ரோந்து வருவதை கண்டதும் தப்ப முயன்றது.
- காளியப்பன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 1 கொலை முயற்சி வழக்கும் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், தொழிலதிபர்களும் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த காலங்களில் வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன.
இந்த நிலையில் இந்த குடியிருப்பு பகுதியின் தெற்கு சுற்றுச்சுவர் அருகே நேற்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் அங்கு போலீசார் ரோந்து வருவதை கண்டதும் தப்ப முயன்றது. அதில் ஒருவர் மட்டும் தப்பிவிட 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை விசாரித்த போது அப்பகுதியில் பூட்டி இருந்த ஒரு வீட்டை ஏற்கனவே நோட்டமிட்டு அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததாக கூறினர். இது தொடர்பாக கைதான தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன் (27), ஸ்பிக் நகர் பாலசுப்பிரமணியன் மகன் சங்கர் கணேஷ் (25), ஆறுமுகநேரி கமலாநேரு காலனி கோபால் மகன் சஞ்சய்குமார் (21), கீழசண்முகபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் பெருமாள் (23) ஆகியோரிடம் இருந்து அரிவாள், கத்தி, கோடாரி, இரும்பு கம்பி ஆகிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய புதுக்கோட்டை சுடலைமுத்து என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதான கும்பலின் தலைவனாக செயல்பட்ட காளியப்பன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், தூத்துக்குடி தென்பாககம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 4 வழக்குகளும், சிப்காட் சரகத்தில் 6 வழக்குகளும், பாளையங்கோட்டையில் ஒரு வழக்கும் உள்ளன.
இதேபோல் சங்கர் கணேஷ் மீது சாயர்புரம், சிப்காட், தூத்துக்குடி வடபாகம், பாளையங்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. சஞ்சய்குமார், பெருமாள் ஆகிய இருவர் மீது ஆறுமுகநேரி, திருச்செந்தூர் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளன.
இவர்கள் அனைவரும் ஜெயிலில் இருந்த போது நண்பர்களாக மாறியது தெரிய வந்துள்ளது. இதனிடையே தங்கள் பகுதியில் ஏற்கனவே நடந்த கொள்ளை சம்பவங்களுக்கும், இப்போது பிடிபட்டுள்ள இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.ஆர்.எஸ் கார்டன் பகுதி மக்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.
- முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது.
- இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ நடராஜ தேவார பக்த ஜனசபைக்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கம் மற்றும் இந்து சமய வகுப்பின் ஆண்டு விழா 2 நாட்கள் நடைபெற்றன.
முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது. இதனை பேராசிரியர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். மாலையில் சோமநாத சுவாமி கோவில் பக்தஜன சபை நிர்வாகி தெரிசை அய்யப்பன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடராஜ தேவார பக்த ஜன சபையின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றன. அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கோலாட்டம், ஒயிலாட்டம், மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகளான லிங்கதாஸ், கார்த்திகேயன், சுரேஷ், செல்வகுமார், திருமால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சிவராமன், சோமு, பன்னீர்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றது.
- பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்பபட்டர் குழுவினர் நடத்தினர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்து டன் தொடங்கி நடைபெற்றது.
அன்னதானம்
இதனை தொடர்ந்து வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடந்தன. பின்னர் திரவிய ஹோமம், வஸ்திராகுதி, பூரணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. இதன்பின்னர் சுவாமி, அம்பாளுக்கு 18 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், அன்னா பிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் குழுவினர் நடத்தினர். மதியம் 5 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் நடந்தது. இதனை பா.ஜ.க. பிரமுக ரான ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பரிசு பொருட்கள்
கோவிலின் கோசாலை பராமரிப்பு மற்றும் உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் மகளிரை ஊக்குவிக்கும் வகையில் 12 பேருக்கு தலா ரூ. 1000 மற்றும் புடவை உள் ளிட்ட பரிசு பொருட்களையும் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கி னார். இதேபோல் ஆலய அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியா ளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு 5-வது வார்டு கவுன்சிலர் தமயந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவசங்கரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இரவில் திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீமதி தியாகராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். முடிவில் சுவாமி, அம்பா ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சிகளில் பக்த ஜனசபை நிர்வாகி தெரிசை அய்யப்பன், கீழவீடு பாஸ்கர், எம்.எஸ்.எஸ். கார்த்திகேயன், ெரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தங்கபாண்டி, பேராசிரியர் அசோக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா, மண்டக படித்தாரரும் முன்னாள் விவசாய சங்க தலைவருமான கீழவீடு கே.ஆர். முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்