search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashish Nehra"

    • ஒவ்வொரு கேப்டனுக்கும், ஒவ்வொரு பயிறசியாளருக்கும் மாறுபட்ட எண்ணங்கள் இருக்கும்.
    • ஹர்திக் பாண்ட்யா ஒயிட்பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்க மிக மிக முக்கியமான வீரர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். இதனால் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 உலகக் கோப்பை வரை கேப்டனாக நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கவில்லை என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது:-

    இல்லை. எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. கிரிக்கெட் என வரும்போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக இருந்தார். ஆனால் அதே நேரத்தில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் வந்துள்ளார். ஒவ்வொரு கேப்டனுக்கும், ஒவ்வொரு பயிறசியாளருக்கும் மாறுபட்ட எண்ணங்கள் இருக்கும். இந்த நேரத்தில் கம்பீரின் யோசனை இதை நோக்கி உள்ளது.

    அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஹர்திப் பாண்ட்யா குறித்து தெளிவாக தெரிவித்துள்ளனர். இது சிறந்தது என நான் நினைக்கிறேன். அவர் டி20-யுடன் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். ஆனால் அதில் குறைவாகத்தான் விளையாடி வருகிறார். ஒயிட்பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்க மிக மிக முக்கியமான வீரர்.

    அவர் அணியில் இருக்கும்போது, 4 வேகபந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். வித்தியாசமான சமநிலையை அணியில் கொண்டு வருவார். சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (Impact Player Rule) விதி கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

    • இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கேகேஆர் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார். ஸ்போர்ட்ஸ் கீடா நிகழ்ச்சி ஒன்றில் வாசிம் பேசுகையில், கம்பீர் எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பவர் அதே நேரம், அப்பட்டமாக உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசக்கூடியவர், எதையும் இருமுறை யோசிக்காமல் பேசுவார்.

     

    இது இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு குணமாகும். சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் இருப்பார், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அவர் சிறந்தவராக இருப்பார். அவர் இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    விவிஎஸ் லக்ஷ்மண் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களா என்பது குறித்தும் வாசிம் அக்ரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தனது பபேட்டியில் அவர், நானும் வேறு சில பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது.

     

    ஆசிஷ் நெஹ்ராவை சுற்றியிருக்க அனைவரும் விரும்புவர். மேலும் லக்ஷ்மன் சிறந்த மனிதர். அவர் என்சிஏ தலைவர், 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 

     

    • ஹர்திக் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
    • பாண்ட்யா மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும் என குஜராத் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா மற்றும் முகமது சமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்.

    ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும். குஜராத் அணிக்காக பாண்ட்யாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.


    கில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும். அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புபவர். அவர் ஒரு நபராக வளர்ந்தால், அவர் நிச்சயமாக முன்னோக்கி செல்லும் சிறந்த கேப்டனாக இருப்பார்.

    இவ்வாறு நெஹ்ரா கூறினார்.

    ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்ட்யாவை அணியின் கேப்டனாக அறிவித்தது. இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
    • தொடர்ந்து 4 பந்துகள் மோகித் சர்மா யார்க்கராக வீசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடின இலக்கை துரத்தியது. முதல் ஓவரிலயே மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது.

    இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோகித் சர்மா வீசினார். தொடர்ந்து 4 பந்துகள் யார்க்கராக வீசினார். 5-வது பந்தில் அவருக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் ஏதோ அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா. அந்தப் பந்தில் ஜடேஜா சிக்சர் விளாசிவிட்டார்.

    இறுதியாக கடைசி பந்தை லெக் சைடில் கொஞ்சம் வைடாக வீசிவிட்டார். இதனை எளிதாக தட்டி விடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் காரணமாக சிஎஸ்கே வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில், அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் நன்றாக பந்து வீசிய மோகித் சர்மாவை குழப்பத்தில் ஆழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்பதற்கு ஆசிஷ் நெஹ்ராவே காரணமாக அமைந்துவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    • ரிஷிக்கு பதில் நெஹ்ரா புகைப்படத்தை மாற்றி பகிர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்.
    • இருவரது தோற்றமும், ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சிலர் கருத்து.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பின்னர் அவர் குறித்த தகவல்கள் தற்போது சமூக வளைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ரிஷி சுனக் புகைப்படத்திற்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். நெஹ்ராவின் தோற்றமும், ரிஷியின் தோற்றமும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இருவரது புகைப்படங்களும் இணைந்து பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிக அளவில் சமூக வளைதள பார்வையாளர்களை ஈர்த்ததுடன் டுவிட்டர் பார்வையாளர்களிடையே அது வைரலாகி உள்ளது.

    ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

    அகமதாபாத், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக களமிறங்கி சிறப்பாக விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் தனதாக்கியது. இந்த சாதனைக்கு அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை கூறினாலும், பயிற்சியாளர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார்.

    அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான கேரி கிர்ஸ்டன் புகழ்ந்துள்ளார். நெஹ்ரா குறித்து அவர் கூறும்போது, ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.

    அவர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக நீண்ட பயணம் செய்துள்ளோம்" என்று கிர்ஸ்டன் கூறினார். "அவர் தனது வீரர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு எப்படி உதவ முடியும் எனது மனதுடன் பயிற்சியளிக்கிறார். மேலும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்பது பற்றி எப்போதும் தனது வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்" என்று கிர்ஸ்டன் கூறினார்.

    இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக பும்ராவை நியமித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். அப்போதிருந்தே, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கேப்டனாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர். 

    துணை கேப்டனான ரோகித் சர்மாவின் பெயர் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, “இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுலின் பெயர்கள் அடிபடுகின்றன. என்னை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இந்த பதவிக்கு நியமித்தால் பொருத்தமாக இருக்கும். 

    அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். போட்டியை நன்றாக புரிந்து செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். 
    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன் என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. இவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகள் உள்பட அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    அதன்பின் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். 2018 சீசனில் ஆர்சிபி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.



    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஆன கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் தான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட போவதாக ஆஷிஷ் நெஹ்ரா  தெரிவித்துள்ளார்.

    ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    ×