என் மலர்
நீங்கள் தேடியது "Asian Womens Football Tournament"
- முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.
- இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்சில் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஆசிய கண்டத்தில் இருந்து தகுதி பெறும் 2 பெண்கள் கால்பந்து அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய பெண்கள் கால்பந்து போட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்து வருகிறது.
இதன் முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி நேற்று முன்தினம் இரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.
இதில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை தோற்கடித்தது. இந்திய அணியில் சந்தியா 2 கோலும் (18-வது, 56-வது நிமிடம்), அனுஜ் தமாங் (24-வது நிமிடம்), ரேணு (85-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற இந்திய அணி 2வது சுற்றுக்கு முன்னேறியது.