என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "attacks"
- வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மறுத்ததால் தாக்கினார்.
- போலீசார் ெபண்ணை தாக்கியதாக ராமதாசை கைது செய்தனர்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் கந்தவேல் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜெயந்தி (வயது 48). மில் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதற்காக வந்தார். அவர் ஜெயந்தியிடம் வந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தினார்.
ஆனால் அவர் வாங்க மறுத்து வாலிபரை வெளியே செல்லுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஜெயந்தியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்கள் வாங்க மறுத்த பெண்ணை தாக்கிய கோவைப்புதூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த ராமதாஸ் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர் ஐவராஜா (வயது28). அவர் கடையநல்லூரை சேர்ந்த திருநங்கை ஹன்சிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஐவராஜா சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ஹன்சிகா மற்றும் திருநங்கைகள் பிருந்தா, முகிலா, செல்லா, தீபா ஆகியோர் சோலைசேரிக்கு வந்தனர்.
அப்போது ஐவராஜாவின் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சேத்தூர் புறக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த கோரச் சம்பவம் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்த அந்நாட்டின் ராணுவ மந்திரி ருவன் விஜேவர்தனே ‘நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார். #SriLankabombings #Christchurchattacks #RuwanWijewardene
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ், உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் ஜூலையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தலிபான்களின் பெரும் தாக்குதல் காரணமாகவும் தெற்கு ஆசியாவில் பெரும் சவால்கள் 2019-ல் இருக்கும்.
பாகிஸ்தானின் இதுபோன்ற செயல்பாடு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பாதிப்பை உண்டாக்கும். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, அவை பாதுகாப்பு புகலிடங்களை விஸ்தரிக்க வகை செய்கிறது.
இந்த பயங்கரவாத இயக்கங்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தும். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #PakMilitants #AttcksInIndia #USSpymaster
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை பட்கிஸ் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சற்றும் எதிர்ப்பாராத தாக்குதலையும் சமாளித்து எதிர்த்தாக்குதல் நடத்திய போலீசார் 22 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். மேலும், 16 பயங்கரவாதிகள் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக மாகாண செய்தித்தொடர்பாளர் ஜம்ஷித் சஹாபி தெரிவித்துள்ளார்.
இதேபோல், வடக்கு பக்லான் மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர். அதே வேளையில் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஒரே நாளில் இருவேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தலிபான் உட்பட எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
ரபேல் போர் விமான பேரத்தில், ராகுல் காந்தி பொய் தகவல்களை கூறி, தேச நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சாடினார்.
ரபேல் போர் விமான கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் இந்தப் பிரச்சினையை ராகுல்காந்தி எழுப்பினார்.
இந்தநிலையில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் விதத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதி உள்ளார். அதில் ராகுல் காந்திக்கு அவர் 15 கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.
36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு 2015-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15-ந் தேதி செய்தது. இது 2007-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக்கொண்ட பேரத்தை விட சிறந்த பேரம்தான் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தவறான பிரசாரம், இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் பொய்யான தகவல்களை பரப்புவதின் அடிப்படையில் தொடங்கியது. இது தேச நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.
ரபேல் போர் விமான சர்ச்சை, முழுக்க முழுக்க தவறான தகவல்கள் அடிப்படையிலானது.
தேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக இதுபற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 3 அம்சங்களில் குற்றவாளிகள் ஆகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேரத்தை தாமதப்படுத்தியதின்மூலம் தேசப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தினர். விலை மற்றும் நடைமுறையில் பொய்யான தகவல்கள் கூறுகின்றனர். இந்த விவகாரங்களை எழுப்பி, ராணுவ கொள்முதலை மேலும் தாமதப்படுத்துகின்றனர்.
ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ள ரகசியம் காக்க வேண்டும் என்ற விதிமுறை என்னை கட்டுப்படுத்துகிறது. நான் என்ன கேட்டாலும் அல்லது பதில் அளித்தாலும் அது அந்த வரம்புக்கு உட்பட்டது ஆகிறது.
ராகுல் காந்தி ஜெய்ப்பூரில் கூறும்போது ஒரு விமானத்தின் விலை ரூ.520 கோடி என்றும் ரூ.540 கோடி என்றும் மாற்றி மாற்றிக் கூறினார். டெல்லியிலும், கர்நாடகத்திலும், ஏப்ரல், மே மாதம் பேசும்போது ஒரு விமானத்தின் விலை ரூ.700 கோடி என்று சொன்னார். ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போது விலையை ரூ.520 கோடி என குறைத்தார்.
பின்னர் ராய்ப்பூரில் பேசும்போது, ரூ.540 கோடி என்றார். ஐதராபாத்தில் கூறும்போதோ ரூ.526 கோடி என்ற புதிய விலையை கூறினார். உண்மை என்றால் ஒரே மாதிரிதான் இருக்கும். தவறு என்கிறபோதுதான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள், உண்மையுடன் எந்த ஒரு பரிச்சயமும் இல்லாமல் கூறப்படுகின்றனவா?
ராகுல் காந்தியின் தவறான போக்கு, தேச நலன்களை பாதிக்கும் என்பதால்தான் நான் இந்தக் கேள்விகளை கேட்கிறேன். உடனடியாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அதில் அருண் ஜெட்லி கூறி உள்ளார். #ArunJaitley #RahulGandhi #RafaleDeal
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளில் தகுதியானவர்களை நியமிப்பதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றம் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “மாணவர்களே, எழுங்கள். உங்கள் எதிர்காலத்துக்கு ஆபத்து. உங்களுக்கு உரியதை ஆர்.எஸ்.எஸ். பறித்துக்கொள்ள விரும்புகிறது. சிவில் சர்வீசஸ் தகுதி பட்டியலை கருத்தில் கொள்ளாமல், தகுதியற்ற அளவுகோல்களை பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். தேர்வுசெய்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க பிரதமர் திட்டமிட்டிருப்பதை கீழ்க்காணும் கடிதம் காட்டுகிறது” என குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் செய்ய உள்ள மாற்றம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தையும் ராகுல் காந்தி இணைத்து உள்ளார்.
சிவில் சர்வீசஸ் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பவுண்டேசன் கோர்ஸ் மதிப்பெண்கள் இரண்டையும் சேர்த்து, அதன் அடிப்படையில்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பணிகளையும், பணி ஒதுக்கீடுகளையும் செய்ய வேண்டும் என்ற பிரதமர் அலுவலக பரிந்துரையைத்தான் மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் ஏற்று கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #Modi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்