என் மலர்
நீங்கள் தேடியது "Auto stand"
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் பரபரப்பு புகார்
- 120 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
இதில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே அண்ணா ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தோம். இதில் 120 டிரைவர்கள் ஆட்டோ ஒட்டி வருகிறோம்.
தொழிற்சங்க விதிமுறைகளை மீறி எங்களின் ஆட்டோ ஸ்டாண்டு அருகே இன்னொரு ஸ்டாண்டு வைத்தனர்.
மேலும் சிலருடன் கூட்டு வைத்துக்கொண்டு புதிதாக போர்டு வைத்து ஆட்டோ ஸ்டாண்ட் உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் எங்கள் 120 ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாராதரம் பாதிக்கும்.
அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். புதியதாக ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
கொசப்பேட்டை எஸ்எஸ்கே மானியம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் அளித்த மனுவில் எனது கணவர் கடந்த 2018 -ம் ஆண்டு இறந்து விட்டார். எனவே நலிந்தோர் நிதி உதவி பிரிவின் கீழ் அரசு உதவி பெற விண்ணப்பித்தேன். இதுவரை நிதி உதவி வரவில்லை.
ஆனால் தாலுகா அலுவலகத்தில் கேட்டால் நீங்கள் நிதி உதவி பெற்று விட்டீர்கள் என்று கூறுகின்றனர். வங்கி கணக்கிலும் பணம் எதுவும் வரவில்லை. எனவே என்னுடைய நலிந்தோர் உதவி தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
- பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
புதிய மக்கள் தமிழ் தேசம் மாநில தலைவர் செந்தூர் மகாராஜன் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பனை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் ராமநாதபுரத்தில் நடந்து கொண்ட நவாஸ்கனி எம்.பி., மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் சுமார் 1½ ஏக்கர் நிலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சொந்தமான தாக உள்ளது. இதனை குறிப்பிட்ட நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தின் மீதான அனைத்து பயன்பாட்டையும் உடனே ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆட்டோ நிறுத்தம்
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், சந்திப்பு பஸ் நிலையத்தில் கடந்த 35 ஆண்டு களாக அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் 25 உறுப்பி னர்களுடன் செயல்பட்டு வருகிறது.
பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை. எனவே ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
எனவே பஸ் நிலைய பணி முடிவடைந்ததும் பஸ் நிலையம் அருகிலேயே அம்பேத்கர் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர். ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தங்கள் பகுதியில் இயங்கி வரும் தார் பிளான்டி னால் பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனை இயங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.